Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசக நண்பர்களுக்கு, சரண்யா பொன்வண்ணனின் வணக்கம். எல்லாரும் நல்லா இருக்கீங்களா... நான் ரொம்ப நல்லா இருக்கேன்! 

எனக்கு கல்யாணம் நிச்சயமானப்போ, 'கல்யாணத்துக்குப் பிறகு நான் வேலைக்குப் போக

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

மாட்டேன்’னுதான் முதல் கண்டிஷன் போட்டேன். ஏன்னா, சமைக்க, வீட்டைச் சுத்தமா வெச்சுக்க, பசங்களைப் பார்த்துப் பார்த்து வளர்க்க அவ்வளவு பிடிக்கும். என் அம்மா என்னை அப்படித்தான் வளர்த்தாங்க. அதை நான் அனுபவிச்சேன். என் குழந்தைகளுக்கும் அப்படி நான் ரசிச்சு செஞ்சேன். ஆனா, ஒருகட்டத்துல திரும்பவும் சினிமாவுல நடிக்க நல்ல வாய்ப்பு வந்தப்ப, வீட்டை எப்படிக் கவனிச்சுக்கிறதுனு குழம்பிட்டேன். ரொம்ப யோசிச்சு யோசிச்சு வீட்டுக்கும் வேலைக்கும் சம முக்கியத்துவம் கொடுக்க ஒரு ஐடியா பிடிச்சேன். அந்த ஐடியா என்ன தெரியுமா? தெரிஞ்சுக்கங்க!

நான் நடிக்க ஆரம்பிச்சப்ப சினிமாவில் ஹீரோயின்களுக்குனு சில நிபந்தனைகள் இருந்தன. சில படங்கள்ல ஹீரோவுக்கு ஜோடியா வரணும்... சில படங்கள்ல கிளாமர் ரோல் செய்யணும். அப்படி செய்யாதவங்களுக்கு சக்சஸ் ரேட் குறையும். அதுக்கு உதாரணம்... நானே! ஆனா, இப்போ ஹீரோயின்னாலே கிளாமர்தான்னு ஆகிப்போச்சு. அதனால இப்போ பல நடிகைகள், 'கிளாமர் பண்ணாம இங்கே சமாளிக்க முடியுமா, பெரிய ஹீரோக்கள் படங்கள் பண்ண என்ன வழி?’னு ஏகப்பட்ட குழப்பத்துல இருக்காங்க. இப்படி இன்னும் என்னவெல்லாம் மனக்குழப்பம் நம்ம ஹீரோயின்களைத் தவிக்கவைக்குது தெரியுமா?

எனக்கு ரொம்பப் பிடிச்ச மற்றும் பிரமிக்கவைக்கும் நடிகர் வடிவேலு. மத்த நடிகர்களுக்கு எல்லாம் ஒரு குறிப்பிட்ட ஸ்டைல்தான் இருக்கும். ஆனா, இவரோட ஸ்டைல் மட்டும் மாறிட்டே இருக்கும். பாடிலாங்வேஜ், வசன உச்சரிப்புனு ஒவ்வொரு படத்திலும் வெரைட்டி காட்டுவார். பக்கத்துல நின்னு நடிக்காம பல சமயம் அவர் நடிப்பை ரசிச்சுட்டே இருந்திருக்கேன். அவரைப் போலவே இன்னொரு நடிகையின் நடிப்பும் என்னை ஆச்சர்யப்பட வெச்சிருக்கு. அவர் யார்..?

சினிமாவில் நான் திரும்ப நடிக்க வந்தப்ப, எனக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. வேலையில இருந்து ரிட்டயர்டு ஆன பிறகு, ஏதாவது வேலை பார்ப்போம்ல... அப்படித்தான் நான் மறுபடியும் நடிக்க வந்தேன். ஆனாலும், அடுத்து அடுத்து நடிக்க வாய்ப்பு கிடைக்குது. அதுக்குக் காரணம் என்ன தெரியுமா? எந்த வேலையா இருந்தாலும் நமக்கு எல்லாம் தெரியும்கிற நினைப்பை விட்டுட்டு, அப்போதான் முதல்முறை செய்யிற மாதிரி ஆர்வத்தோடு, கவனத்தோடு அதைச் செய்யணும். இதுபோல இன்னும் நான் கத்துக்கிட்ட சில விஷயங்கள் இருக்கு. அதெல்லாம் சொல்றேன்...

3-9-15 முதல் 9-9-15 வரை 044-66802911 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். பாசம், நேசமா பல விஷயங்கள் பேசலாம்!

அன்புடன்,

சரண்யா பொன்வண்ணன்.

அடுத்த கட்டுரைக்கு