Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு வணக்கம். நான் எழுத்தாளர் தமயந்தி பேசுகிறேன்... 

நம் எல்லோருக்குமே இளையராஜாவின் பாடல்கள் என்றால், மிகவும் பிடிக்கும். அதுவும் 80-களில் விடலைப் பருவத்தைக் கழித்தவர்களுக்கு, ராஜாவின் இசை என்றைக்கும் பொக்கிஷம். ராஜாவின் இசைப் பாடல்கள் மூலமாகக் காதலித்த ஏராளமானவர்களின் கதைகள் எனக்குத் தெரியும். 'டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ...’ - பாடலை எதிர்வீட்டுப் பொண்ணுக்காகச் சத்தமாக வைத்துக் கேட்ட மேல் வீட்டு அண்ணனும், அதே அண்ணன் தன் அத்தைப் பெண்ணைத் திருமணம் செய்த பின், 'இதயமே...’ - பாடலை சத்தமாக வைத்துக் கேட்ட அந்த எதிர் வீட்டுப் பெண்ணும் மிக பத்திரமாக என் நினைவில் இருக்கிறார்கள். இப்படி இளையராஜாவின் இசை ராஜாங்கம், மனதின் மென்மையான பக்கங்களில் செய்த மாயங்கள் பற்றி உங்களோடு பகிர்கிறேன்.

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் கல்கி கோச்சலின் நடித்த 'தட் கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ்’ என்னை உறங்கவிடாமல் உலுக்கிய படம். தன் அப்பாவைத் தேடி மும்பைக்கு வரும் பிரிட்டிஷ் குடிமகள் கல்கி, ஒரு பியூட்டி பார்லரில் வேலைக்குச் சேர்வார். அவளின் காதலனோ போதைக்கு அடிமையாகி தடுமாறி நிற்பவன். கல்கிக்கு விசா கொடுக்க இழுத்தடிப்பார் ஒரு ஆபீஸர்... இப்படி பல யதார்த்தங்களை உள்ளடக்கிய படத்தைப் பற்றிய என் பார்வையைச் சொல்கிறேன். அது உங்களையும் உறங்கவிடாமல் உலுக்கியெடுக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

சிவகாசி... இந்த ஊர் பற்றி, செய்திகளில் அடிக்கடி நாம் வாசித்திருப்போம். இங்கே, வெடி விபத்தால் இவ்வளவு பேர் காயமடைந்தார்கள், பலியானார்கள்... என தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் இருக்கும். இப்படி ஒரு விபத்தில் குரூரமாகப் பாதிக்கப்பட்ட ராமர் என்பவரைச் சந்தித்தபோது, எனக்கும் குரூரமாக ஒன்று தோன்றியது. அது... 'விபத்தில் இறந்துபோகிறவர்கள் எல்லோரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என்பதுதான். அப்படி ஓர் எண்ணம் தோன்ற காரணம் என்ன?

மதுரையில் அங்கம்மாள் என்கிற ஒரு பெண்ணை நான் சந்தித்தேன். 13 வருடங்களாக தன் கணவனின் மரணத்துக்கு நியாயம் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு நவீன கண்ணகி அவர். ஒரு திருட்டு வழக்கு விசாரணைக்காக ஊமச்சிகுளம் காவல் நிலையத்துக்கு, கணவருடன் அங்கம்மாளும் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர்களுக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி அவர் சொன்னபோது நான் உறைந்துபோனேன். அந்த உரையாடல் எனக்குள் எழுப்பிய கேள்வியைப் பற்றியும், அங்கம்மாள் போன்ற எளியவர்களுக்கு நாம் செய்யவேண்டியவை பற்றியும் சொல்கிறேன்... கேளுங்கள்.

10-9-15 முதல் 16-9-15 வரை 044-66802911  என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் பேசுவோம்!

அன்புடன்,

தமயந்தி