Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு வணக்கம்... நான் எழுத்தாளர் நக்கீரன் பேசுகிறேன்.

ஒருவகையில் நாம் ஒவ்வொருவரும் கொலம்பஸைவிட ஒரு படி மேல். அவராவது மேற்கு இந்தியத் தீவுகளைத்தான் கண்டுபிடித்தார். நாமோ புதிதாக இரு தீவுகளையே உருவாக்கிக்கொண்டிருக் கிறோம். ஆனால், இதற்காகப் பெருமைப்படத் தேவை இல்லை. 'வீட்டில் இருந்து நாம் பிளாஸ்டிக் குப்பைகளைத் தூக்கி வெளியே வீசுகிறோமே... அவை எங்கே போகின்றன... என்ன ஆகின்றன?’ என்றாவது நாம் நினைத்துப்பார்த்திருப்போமா? இந்தக் குப்பைகள், நீர்நிலைகள் வழியாகக் கடலில் போய்ச் சேர்கின்றன. கடலில் சேர்ந்த இந்தக் குப்பைகள்தான் மிதக்கும் இரு புதிய தீவுகளை உருவாக்கியிருக்கின்றன. உலகில் ஓர் ஆண்டுக்கு 900 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தியாகிறது. இந்த நிலை தொடர்ந்தால், என்ன ஆகும்? சொல்கிறேன்...

உலக அளவில் உற்பத்தியாகும் உணவுப்பொருட் களில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது. ஆனால், உலகில் ஏழு பேரில் ஒருவர் பட்டினி கிடக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய இழிநிலை. இதில் வெறும் உணவுப்பொருள் மட்டுமா வீணாகிறது? அதை உருவாக்கிய தண்ணீர் வீணாகிறது; மின்சாரம் வீணாகிறது; மனித உழைப்பு வீணாகிறது. இதன் மூலம் நம்மை வந்து அடைந்திருக்கும் ஆபத்தின் வீரியத்தைப் புரியவைக்க ஓர் உண்மைக் கதை சொல்கிறேன்... கேளுங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஒருகாலத்தில் எல்லோரும் இங்க் பேனா பயன்படுத்தினோம். அது ஒன்று, இரண்டு வருடங்களுக்குக்கூடப் பயன்படும். இப்போது வாங்கும் யூஸ் அண்ட் த்ரோ பேனாவோ, அதிகபட்சம் இரண்டு வாரங்களிலேயே காலியாகிவிடுகிறது. அதை நாம் தூக்கி எறியும்போது அதுவும் ஒரு தனிக் குப்பையாகச் சேர்கிறது. இப்படித் தேவை இல்லாத பொருட்களை உற்பத்திசெய்து நம்மிடம் திணிக்கிறது நுகர்வுக் கலாசாரம். இன்னும் சொல்லப்போனால், நாம் எல்லோரும் இந்த நுகர்வுக்கு அடிமை ஆகிவிட்டோம். நுகர்வு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? இதற்கு புத்தர் கதை ஒன்று நல்ல உதாரணம். அதைச் சொல்கிறேன்... கேளுங்கள்.

'பயோ-இண்டிகேட்டர்ஸ்’ என்பது சுற்றுச்சூழல் துறையில் மிக முக்கிய வார்த்தை. ஒரு விஷயத்தை முன்கூட்டியே அறிவிப்பது இந்த பயோ-இண்டிகேட்டர்ஸ். அதாவது மழை வரப்போகிறது என்றால், தட்டான்கள் தாழப் பறக்கும்; எறும்புகள் தன் முட்டைகளைப் பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் செல்லும். ஒரு நீர்நிலையில் ஆகாயத் தாமரைகள் இருந்தால், அந்த நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல. இதுபோல ஒரு பயோ-இண்டிகேட்டர்தான், காகங்கள். இந்தக் காகங்கள் நமக்கு உணர்த்தும் சுற்றுச்சூழல் முன்னறிவிப்பு என்ன தெரியுமா?

17-9-15 முதல் 23-9-15 வரை 044-66802911  என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அர்த்தமாகவும் அக்கறையாகவும் பேசலாம்!

அன்புடன்,

நக்கீரன்.