Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

Published:Updated:

ஹெல்த்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“பேச்சுக் கோளாறு, உடல் தடுமாற்றம், கை, கால் மதமதப்பு, நினைவுத் தடுமாற்றம் போன்ற அறிகுறிகள் அதிகமாகத் தென்படுபவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இவை பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம். எவ்வளவு சீக்கிரம் இவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கிறோமோ, அந்த அளவுக்குப் பக்கவாதம் வருவதைத் தடுக்க முடியும். அதுபோல, முகத்தில் ஒரு பகுதி கோணலாகவோ, பேச்சுத் தடுமாற்றமோ தெரிந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது முக்கியம். அந்த நேரத்தில் தண்ணீர் குடிப்பதுகூட அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில், பாதிக்கப்பட்டவருக்குத் தண்ணீரை விழுங்கும்தன்மை இருக்காது. எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோமோ, அதுவே அவர்களுக்கு நாம் செய்யக்கூடிய பெரிய உதவி” என்கிறார் மூளை நரம்பியல் மருத்துவர் குணசேகரன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக, தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  பெண்களைவிட ஆண்களுக்கே பக்கவாதம் அதிகமாக வருகிறது. ஏனெனில் மது, புகையிலை, மனஅழுத்தம் ஆகியவை பக்கவாதத்துக்கான முக்கியக் காரணங்கள். நம் அன்றாடப் பழக்கங்களில் சிறிய மாற்றங்கள் செய்துகொண்டால்கூட, பக்கவாதம் வராமல் தடுக்க முடியும்.

கொழுப்புச்சத்துள்ள உணவுகளை அளவாகச் சாப்பிட்டு, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவருவது நல்லது. ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடல் எடையைச் சீராகப் பராமரிப்பது, குடும்பத்தில் யாருக்காவது பக்கவாதம் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவசர காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை குடும்ப உறுப்பினர்கள் தெரிந்துவைத்திருப்பது, மனஅமைதி தரும் தியானம் செய்வது, ஆண்டுக்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது உயிர் காக்கும் நடைமுறைகள்” என்கிறார் டாக்டர்.

•  பக்கவாதம் வருவதற்கான காரணங்கள் என்னென்ன?

•  பக்கவாதம் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

•  பக்கவாதம் வந்தவருக்கு என்னென்ன சிகிச்சைகள் தரப்படும்?

•  பக்கவாதம் வந்தவருக்கு செய்யக்கூடிய உதவிகள் என்னென்ன?

•  பக்கவாதம் வராமல் இருக்க உதவும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை என்ன?

•  பக்கவாதம் வராமல் தடுக்க, என்னென்ன உணவுமுறைகளைப் பின்பற்றலாம்?

அன்பு வாசகர்களே! செப்டம்பர் 16 முதல் 23-ம் தேதி வரை தினமும்,  044-66802904 * பக்கவாதத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம், தவிர்க்கும் வழிகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் மூளை நரம்பியல் மருத்துவர் குணசேகரன்

யோதிகத்தின்போது பார்வைத்திறன் குறைதல், நினைவுத்திறன் குறைதல், உடல் சோர்வு, தளர்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், அந்த வயதில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் எனப் பல பாதிப்புகளுக்காக அதிக அளவில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை இருக்கும். இதன் பக்கவிளைவு காரணமாகவும் முதியவர்களுக்கு மயக்கம், தடுமாற்றம் ஏற்படும். வயதாகிவிட்டதால், உடற்பயிற்சி செய்யக் கூடாது என வீட்டிலேயே முடங்கிக்கிடப்பதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க முதியவர்கள் கட்டாயம் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சியையும், முடிந்த வரை தசைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளையும், ‘தாய்ச்சி’, ‘யோகா’ போன்ற பயிற்சிகளையும் செய்ய வேண்டும். பல முதியவர்கள் வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றனர். இதனால், தடுமாறிவிழுவது அதிகரித்துள்ளது. கீழே விழுந்து, அன்றாட வாழ்க்கையே பாதிப்புக்கு உள்ளாவதற்குப் பதில், இதுபோன்ற நடக்க உதவும் பொருட்களின் உதவியுடன் பாதுகாப்பாக நடப்பது நல்லது” என்கிறார் பொது மருத்துவர் அனிதா ஆரோக்கியசாமி.

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“முதியவர்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்னை, மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்வது. அதுவும், தனிமையில் இருக்கும்போது பல காரணங்களால் மாத்திரைகளைச் சரிவர எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க இப்போது, ‘தினசரி மூன்று வேளை’ என்று ஏழு நாட்களுக்கான மாத்திரை பாக்ஸ் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் பிள்ளைகளிடம் சொல்லி  இதில் மாத்திரைகளை நிரப்பிக்கொள்ள வேண்டும். இதனால், மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது தவிர்க்கப்படும். எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும், சுயமாக மாத்திரை எடுத்துக்கொள்ளக் கூடாது. டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். அப்போது, வேறு என்னென்ன மாத்திரைகளை எடுத்துக்கொண்டிருக்கிறோமோ அவற்றைச் சொல்ல வேண்டும். ஏனெனில், எல்லா மாத்திரைகளையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளும்போது, அது வேறுவிதமான பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால், டாக்டர் மருந்து பரிந்துரைக்கும்போதே, ஏன், எதற்கு, எவ்வளவு டோஸ், பக்கவிளைவுகள் என்னென்ன என அனைத்தையும் கேட்டு், குறித்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் டாக்டர்.

•  முதியோர், தடுமாறி விழுந்து விபத்தை ஏற்படுத்தும் காரணிகள் என்னென்ன?

•  விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?

•  டிமென்ஷியா நோயாளிகளை வீட்டிலேயே பராமரிப்பது எப்படி?

•  டாக்டர் மருந்து பரிந்துரைக்கும்போது அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகள் என்னென்ன?

•  அறுவைசிகிச்சைக்குப் பிறகு மிக விரைவாகக் குணம்பெற என்ன செய்ய வேண்டும்?

•  விரைவாக குணம்பெற எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன?

அன்பு வாசகர்களே! செப்டம்பர் 24 முதல் 30-ம் தேதி வரை தினமும், 044-66802904* என்ற எண்ணுக்கு போன் செய்தால், முதுமையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், வீட்டிலேயே முதியவர்கள், நோயாளிகளைப் பராமரிக்கும் வழிகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் பொது மருத்துவர்
அனிதா ஆரோக்கியசாமி

- பா.பிரவீன் குமார், மினு

* அழைப்பு சாதாரணக் கட்டணம்