Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹெல்த்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

மது செரிமான மண்டலம் மிகவும் வலுவானது; வயதாகும்போது பலருக்கும் செரிமான சக்தி குறையும். பொதுவாக உணவை வீணாக்கக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு சிலர் வயிறு முட்ட உணவை உண்டு அவதிப்படுவார்கள். மீந்துபோகும் உணவைக் கொட்டுவதற்கு நமது வயிறு ஒன்றும் குப்பைத்தொட்டி அல்ல. எனவே, அளவோடு, குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியமாக வாழலாம். நமது உடலில் உள்ள பித்தப்பை என்னென்ன வேலைகள் செய்கின்றது

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தெரியுமா? கல்லீரலில் பித்தநீர் உருவாகி, அது  பித்தப்பையில் சேமிக்கப்பட்டு, பிறகு சிறிய குழாய் வழியாக செரிமான மண்டலத்தை அடைகிறது. கொழுப்புகள் செரிமானம் ஆக இது உதவுகிறது. பித்தப்பையில் கல் உருவாகும்போதுதான் பிரச்னை. பெண்கள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் பருமன் உடையவர்கள் ஆகியோருக்குப் பித்தப்பையில் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம்” என்கிறார் இரைப்பை, குடல்நோய் மற்றும் கல்லீரல் அறுவைசிகிச்சை நிபுணர் ஆர்.கண்ணன்.

“தமிழ்நாட்டில் முக்கியப் பிரச்னை மது. பலர் மதுவுக்கு அடிமையாகிக்கிடக்கிறார்கள். மது நம் உடலை எப்படி எல்லாம் சிதைக்கிறது தெரியுமா? உடலில் மிகவும் உறுதியான கல்லீரலையே கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்து, செயல்படவே முடியாத நிலைக்குத் தள்ளிவிடும் ஆற்றல் மதுவுக்கு உண்டு. மது  அருந்துபவர்கள் கல்லீரலை கண்டிப்பாகப் பரிசோதித்து மதுவைத் தவிர்த்தால் மிச்சமிருக்கும் கல்லீரலையாவது காப்பாற்ற முடியும்” என்கிறார் டாக்டர்.

• வயிற்றில் புண்கள் வராமல் இருக்க என்ன வழி?

• மது, கல்லீரலை எப்படிச் சிதைக்கிறது? பாதிக்கப்பட்ட கல்லீரை மீட்க என்ன செய்ய வேண்டும்?

• பித்தப்பையில் கற்கள் உருவானால் அகற்ற வேண்டுமா? 

• கணையம் நமக்கு ஏன் முக்கியம்? கணையம் சீராக வேலைசெய்ய நாம் என்ன செய்ய வேண்டும்?

• குடலிறக்கம் ஏன் ஏற்படுகிறது? என்ன சிகிச்சை?

• மூலநோயைத் தவிர்ப்பது எப்படி? 
 
அன்பு வாசகர்களே!

அக்டோபர் 1 முதல் 7-ம் தேதி வரை தினமும் 044-66802904  என்ற எண்ணுக்கு போன் செய்தால் வயிறு மற்றும் செரிமான மண்டலம் தொடர்பானப் பிரச்னைகள், அதற்கானத் தீர்வுகள், தடுக்கும் வழிமுறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் இரைப்பை, குடல்நோய் மற்றும் கல்லீரல் அறுவைசிகிச்சை நிபுணர் ஆர்.கண்ணன்

சொரியாசிஸ் என்றாலே ஏதோ தகாத உறவு வைத்துக் கொண்டவர்களுக்கு வரும் வியாதி எனச் சிலர்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். அது உண்மை கிடையாது. சொரியாசிஸ் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடிய ஒரு பிரச்னை. நம் உடலில், தோலில் இருக்கக்கூடிய செல்கள் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்படுவதால், நோய் எதிர்ப்புச் சக்தியே உடலுக்கு எதிராகத் திரும்புவதன் காரணமாக இந்த சொரியாசிஸ் பிரச்னை வருகிறது. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதன் மூலம், நோயைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அதன் தொந்தரவுகளில் இருந்து பாதுகாக்க முடியும்.

சொரியாசிஸ் என்பது சர்க்கரை வியாதி போலத்தான், வாழ்நாள் முழுக்கத் தகுந்த சிகிச்சை எடுத்துகொள்வதன் மூலம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம். ஆனால், முழுமையாக எந்த மருத்துவமுறையாலும் குணப்படுத்தவே முடியாது. பலர், ‘சொரியாசிஸ் பிரச்னையை முழுமையாகக் குணப்படுதிவிடுகிறோம்’ எனப் பொய்செய்திகளைப் பரப்பி, மக்களை ஏமாற்றுகின்றனர். எந்த மருத்துவமுறையாக இருந்தாலும், இந்த நோயைக் கட்டுக்குள்வைத்து ஆரோக்கியமாக வாழவைக்க முடியுமே தவிர, முழுமையாகக் குணப்படுத்த முடியாது” என்கிறார், தோல் நோய் சிறப்பு நிபுணர் எஸ்.சுகந்தன்.

“வெண்புள்ளி என்பதைப் பலரும் தொழுநோய் என நினைத்துக்கொள்கின்றனர். தோலில் இருக்கும் நிறமி செல்களான மெலனொசைட் பாதிக்கப்படுவதால் வரும் பிரச்னை வெண்புள்ளி. இதை, ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். சொரியாசிஸ் பிரச்னைக்கு அறுவைசிகிச்சையும் செய்யப்படும். ஆனால், ஒருவரின் உடலில் எவ்வளவு வெண்புள்ளிகள் இருக்கின்றன, தோல் எப்படி பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதைப் பொறுத்து, படிப்படியாக சிகிச்சை தரப்படும். முதலில் களிம்புகள், பின்னர் லைட் தெரப்பி அதன் பின்னர்தான் அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும்” என்கிறார் டாக்டர்.

• சொரியாசிஸ் ஏன் வருகிறது? எப்படித் தடுப்பது?

• வெண்புள்ளிக்கு என்ன சிகிச்சை?

• பெண்களுக்கு முடி அதிகமாகக் கொட்டுவது ஏன்?

• முகப்பரு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

• ஆண்களுக்கு வழுக்கை வருவது ஏன் ?

• பொடுகுப் பிரச்னைக்கு என்ன செய்ய வேண்டும்?

அன்பு வாசகர்களே!

அக்டோபர் 8 முதல் 15-ம் தேதி வரை தினமும் 044-66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், தோல் வியாதிகள், அதற்கான சிகிச்சைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் தோல் நோய் சிறப்பு நிபுணர்  எஸ்.சுகந்தன்

- பு.விவேக் ஆனந்த்