Election bannerElection banner
Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு வணக்கம், நான் பாடலாசிரியர் யுகபாரதி பேசுகிறேன்... 

'வாசிப்பின் அவசியம்’ என்ற வாக்கியத்துக்குள் இருக்கும் அர்த்தம் மிக அலாதியானது. தொடர்ந்து வாசிக்கிற ஒருவர் சிந்தனைரீதியில் தான் அங்குலம் அங்குலமாக வளர்வதை உணரலாம்.

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

வாசிப்பின் பலனை உணர்ந்தவர்களுக்கு இது எவ்வளவு பெரிய விஷயம் என்பது தெரியும். எந்த ஒரு விஷயத்திலும் நமக்கு முன்னால் என்ன நடந்தது என்பதை, வாசிப்பின் மூலமாகவே நாம் அறிகிறோம். 'வாசிப்பு அனுபவம்  என்ன செய்யும்?’ - சில உதாரணங்கள் சொல்கிறேன்.

இப்போது சமூக வலைதளங்கள், இயல்பு வாழ்க்கையை மட்டும் அல்ல... ஒட்டுமொத்த வாழ்க்கையையே பாதிக்கின்றன. அவற்றில் இருக்கும் விஷயங்களில் சாதகம் - பாதகம் என இரு பார்வைகள் எப்போதும் இருக்கவே செய்கின்றன. இன்னும் குறிப்பிட்டுச் சொல்வது எனில், பாதகமான விஷயங்களே அதிகம். இதற்காக ஒரேயடியாக 'விஞ்ஞானத்தை வெளியேற்றிவிட வேண்டும்’ எனப் போர்க் கொடி தூக்கக் கூடாது. சமூக வலை தளங்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டியவை அல்ல. ஆனால், 'அவற்றை எப்படிக் கையாள வேண்டும்?’ - சில உண்மைகள் பேசலாம்.

சமீபத்தில் நான் மிகவும் வருந்தியது, சகோதரி விஷ்ணுப்ரியாவின் தற்கொலையை நினைத்துத்தான். இந்தத் தற்கொலைக்குப் பின்னால் இருக்கும், சாதியச் சமூகம் உண்டாக்கும் பாதிப்புகளை எல்லாம், நாம் வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டிய சூழல் நேர்ந்திருக்கிறது. காவல் துறை துணைக் கண்காணிப்பாளராக இருக்கக்கூடியவரே சுதந்திரமாகச் செயல்பட முடியாத சூழலை, இந்தச் சாதியச் சமூகம் ஏற்படுத்தியிருக்கிறது. இது என்னுள் எழுப்பி இருக்கும் கேள்விகள் என்னென்ன... நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டியது எது எதில்? சொல்கிறேன் கேளுங்கள்.

வாழ்க்கையில் எல்லோருக்கும் மறக்க முடியாத நண்பர்கள் இருப்பார்கள். என் வாழ்விலும் அப்படி இருக்கும் ஒருவர் இயக்குநர் திருப்பதிசாமி. 'அவர் ஏன் என்னால் மறக்க முடியாத நண்பர் ஆனார்?’ என்பதற்கு நிறையச் சம்பவங்களைச் சொல்லலாம். அவற்றில் முக்கியமான ஒன்று, என் முதல் திரைப்பாடல் வெளிவரும் முன்னரே இரண்டாவது திரைப்பாடல் எழுதும் வாய்ப்பை அவர் அளித்தார். அதுதான் 'நரசிம்மா’ படத்தில் இடம்பெற்ற 'காதல் ஆராரோ ’ எனும் பாடல். என் முதல் பாடல் வெளியானதும், நான் போட்டுக்காட்டிய முதல் நபர் திருப்பதிசாமிதான். அதற்கு அவர் என்ன சொன்னார்? அவர் மூலம் நான் கற்றுக்கொண்ட தோழமை பற்றி உங்களிடம் பகிர்கிறேன்...

1-10-15 முதல் 7-10-15 வரை 044-66802911 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். நிறையப் பேசுவோம்... நிறைவாகப் பேசுவோம்.

அன்புடன்,

யுகபாரதி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு