Election bannerElection banner
Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு வணக்கம்... நான் 'குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மா பேசுகிறேன்.

' 'குற்றம் கடிதல்’ படத்துக்கான கரு எங்கே இருந்து உருவானது?’ என யோசிக்கும்போதுதான்

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

தெரிகிறது... அப்படி எதுவும் ஞாபகத்துக்கு வராத அளவுக்கு அடிமனதில் தேங்கி இருந்திருக்கிறது என்று. பள்ளி நாட்களில் நான் சந்தித்த விஷயங்கள், என் தோழர்கள் பாதிக்கப்பட்டதில் இருந்து தெரிந்துகொண்டது எனப் பலவற்றையும் உள்ளடக்கியதுதான் இந்தக் கதை. இதை நான் சினிமாவாக யோசித்த விதம் பற்றியும், அதில் இருந்த சவால்கள் பற்றியும் உங்களோடு பகிர்கிறேன்...

ஆசிரியர் - மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும் எனப் பலரும் பேசுகிறார்கள். தன் ஈகோவை அழித்து, மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் ஆசிரியர்தான் சரியான

ஆசிரியராக இருக்க முடியும். எந்த ஆசிரியர் 'என்னைவிட என் மாணவன் சிறந்தவனாக இருக்கிறான்’ எனப் பெருமைப்படுகிறாரோ அவரே சிறந்த ஆசிரியர். அதேபோலவே மாணவனும் 'என் ஆசிரியருக்கு நான் சிறந்த மாணவனாக இருக்க வேண்டும்’ என நினைக்கிறபோதுதான் ஒரு நல்ல மாணவன் உருவாகிறான். லட்சிய ஆசிரியர் - மாணவர் உறவு பற்றி இன்னும் நிறையப் பேசலாம்...

ஊடகங்கள் பல இருந்தாலும் அதில் மிக முக்கியமானது சினிமா. அதேசமயம் அது கலையாகவும் இருக்கிறது. சினிமாவின் மொழியை மேலை நாடுகளுக்கான விஷயமாக மட்டுமே பார்க்கிறோம். இந்திய சினிமாவுக்கான கலாசாரம் வேறு, மொழி வேறு, வாழ்வியல் வேறு... இதற்கு ஏற்ற சினிமாக்கள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

சினிமாவுக்குள் நான் வந்த அனுபவம் பற்றிச் சொல்ல எனக்குத் தயக்கம் இருக்கிறது. அதற்குக் காரணம், நான் சரியான உதாரணமாக இருப்பேனா என்ற அச்சமே! ஒரு கதையை வைத்துக்கொண்டு அதை சினிமாவாக்க பல நாட்கள் அலைந்த அனுபவம் எல்லாம் எனக்கு இல்லை. ஆனால், இன்றைக்கு வாய்ப்புகள் நிறையக் கொட்டிக்கிடக்கின்றன. பலரும் பணம் போட்டு படம் எடுக்கத் தயாராகவே இருக்கின்றனர். ஆனால், அதில் சரியான ஆளைத் தேர்ந்தெடுப்பது மட்டும்தான் சினிமாக் கலைஞர்களின் வேலை. அது எப்படிச் சாத்தியம்? என் சினிமா அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.

8-10-15 முதல் 14-10-15 வரை 044-66802911 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். சினிமாக் கலை பற்றி கண்ணும்கருத்துமாகப் பேசுவோம்!

அன்புடன்,

பிரம்மா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு