Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹெல்த்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் பிரச்னைகள் அதிகரித்து இருக்கின்றன. இதய நோய்கள், மாரடைப்புக்கான சந்தேகங்கள், சமிக்ஞைகள் எனப் பல்வேறு பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சில நொடிகளில் வரக்கூடிய மாரடைப்பு, உயிரைப் பறித்துவிடுகிறது. வாழ்க்கைமுறை மாற்றம் மூலம், மாரடைப்பு வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதற்கு, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, எண்ணெய் உணவுகளைத் தவிர்த்தல், தவறான பழக்கங்களைக் கைவிடுதல் போன்ற சில வழிகளைப் பின்பற்றினால் போதும். மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைத்து, தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள முடியும். மாரடைப்பு வந்தவர்கள், டாக்டரின் ஆலோசனையுடன் இந்த எளிய வழிமுறைகளை மனதில்கொண்டு பின்பற்றிவந்தால், மீண்டும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியும். வாழ்நாளும் அதிகரிக்கும்” என்கிறார், இதய அறுவைசிகிச்சை நிபுணர் சிவ முத்துக்குமார்.

“சீரற்ற ரத்த ஓட்டத்தால் கொழுப்பு அல்லது கால்சியம் போன்றவை ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி, ரத்தம் கட்டி உறைந்துவிடுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கும், உணவு செரிமானப் பிரச்னையால் வரக்கூடிய சாதாரணமான நெஞ்சுவலிக்கும் வேறுபாடுகள் உள்ளன. இந்த வித்தியாசத்தை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ‘மாரடைப்பு வரும்போது தொடர்ந்து இரும வேண்டும், தொடர்ந்து இருமினால் உயிர் காக்கப்படும்’ என்பது போன்ற வதந்திகள், வாட்ஸ்அப், இ-மெயில்களில் பரவிவருகின்றன. உண்மையில், இந்த மாதிரியான செய்திகள் அனைவருக்கும் பலன் அளிக்காது. அளவான உணவு, உடற்பயிற்சி என ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்தால் இதய நோய்களை நம்மை நெருங்காமல் செய்துவிடலாம்” என்கிறார் டாக்டர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• மாரடைப்பு வந்தால், உயிரைக் காக்க எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரை என்ன?

• மாரடைப்பு நேரத்தில் ‘தொடர்ந்து இருமினால் நல்லது’ என்பவை போன்ற தகவல்களில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது?

• மாரடைப்பு ஏன் வருகிறது? காரணங்கள் என்னென்ன?

• பொதுவாக இதயத்தைப் பாதுகாக்க வழிகள் என்னென்ன?

• இதய நோய்கள் வராமல் தடுக்கும் உணவுப் பழக்கங்கள் யாவை?

• சாதாரண நெஞ்சு வலி எது? மாரடைப்பு வலி எது? வேறுபாடுகள் என்னென்ன? சமிக்ஞைகள் என்னென்ன?

• மாரடைப்பு வந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி என்ன?

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

அன்பு வாசகர்களே!

அக்டோபர் 16 முதல் 23-ம் தேதி வரை தினமும் 044-66802904 " என்ற எண்ணுக்கு போன் செய்தால் மாரடைப்பு, இதய நோய்கள் தவிர்க்கும் வழிகள், தீர்வுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் இதய அறுவைசிகிச்சை நிபுணர் சிவ முத்துக்குமார்

மிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் பாதிப்புத் தலைகாட்டத் தொடங்கி உள்ளது. டெங்கு பீதி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், சாதாரண காய்ச்சல் என்றால்கூட மருத்துவமனைக்கு ஓடிவருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. பொதுவாக, ‘காய்ச்சல் வந்த முதல் நாள் மருத்துவமனைக்கு வர வேண்டாம்’ என்று சொல்வோம். வீட்டிலேயே மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சல் சரியாகவில்லை என்றால்தான் மருத்துவமனைக்கு வரப் பரிந்துரைக்கிறோம். டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறியே அதிகக் காய்ச்சல் மற்றும் வயிற்று வலிதான். 104 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது அதற்கு மேல் காய்ச்சல் இருந்து, அதனுடன் வயிற்று வலியும் இருந்தால், முதல் நாளாக இருந்தாலும் மருத்துவமனைக்கு வந்துவிட வேண்டும். இதில் கால தாமதமே செய்ய வேண்டாம்” என்கிறார் பொது நல மருத்துவர் கு.கணேசன்.

“கொசு கடித்த ஒரு வாரத்தில் நோய் தொடங்கிவிடும். குழந்தைகள், பெரியவர்கள் என வயது வேறுபாடு இன்றி அனைவரையும் இந்த நோய் தாக்கக்கூடியதுதான் என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களை டெங்கு தாக்கும்போது பல ஆபத்துகள் அணிவகுக்கின்றன.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள  குழந்தையின் உடல் முழுவதும் தோலில் சிவப்புப் புள்ளிகள்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

தோன்றும். இது அம்மைநோயாக இருக்குமோ என்னும் சந்தேகத்தை உண்டாக்கும். டெங்கு வைரஸ்கள் ரத்தநாளங்களைப் பாதிப்பதால் அவற்றில் மெல்லிய துளைகள் விழுந்து, ரத்தத்தை உடலின் உள் உறுப்புகளில் கசியவிடும். இதன்விளைவால் ஏற்படும் சிவப்புப் புள்ளிகளே அவை. எனவே, தாமதிக்காமல் உரிய சிகிச்சை எடுப்பதன் மூலம் டெங்கு பாதிப்பில் இருந்து தப்பலாம்.

டெங்குவைப் பரப்பும் கொசு நன்னீரில்தான் முட்டையிடும். கொசுக்கள் வாழும் இடங்களான மேல்நிலைத் தொட்டிகளையும் கீழ்நிலைத்தொட்டிகளையும் நன்றாக மூடிவைக்க வேண்டும். வீட்டுச் சுவர்கள் மீது ‘டி.டி.டி’ மருந்தைத் தெளித்தால், கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் ‘டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளிக்க, கொசுக்கள் மடியும். தேங்கிய நீர்நிலைகள் அனைத்திலும் இந்தக் கொசு மருந்தை அடிக்க வேண்டியது அவசியம்” என்கிறார் டாக்டர்.

• டெங்கு காய்ச்சலைக் கண்டறிவது எப்படி?

• டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை உள்ளதா?

• இப்போது வரும் எல்லா காய்ச்சலும் டெங்குவா?

• டெங்குவைத் தவிர்க்க செய்ய வேண்டியவை என்னென்ன?

• மழைக்கால முன்னேச்சரிக்கை நடவடிக்கை என்ன?

• மழைக்கால நோய்களுக்கு தடுப்பூசி ஏதும் உள்ளதா?

அன்பு வாசகர்களே!

அக்டோபர் 24 முதல் 31-ம் தேதி வரை தினமும் 044-66802904 ” என்ற எண்ணுக்கு போன் செய்தால் டெங்கு காய்ச்சல் தவிர்க்கும் வழிகள், டெங்கு காய்ச்சலை கண்டறியும் வழி, சிகிச்சைமுறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் பொது நல மருத்துவர் கு.கணேசன்

*அழைப்பு சாதாரணக் கட்டணம்

- பா.பிரவீன்குமார், மினு

படம்: ரா.வருண் பிரசாத்