Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு, ஞாநியின் வணக்கம்...

என்னை ஒரு பத்திரிகையாளராக, அரசியல் விமர்சகராக விகடன் வாசகர்களாகிய நீங்கள் அறிவீர்கள். இன்னும் சிலருக்கு, என்னை தொலைக்காட்சிகளில் அரசியல் விமர்சனக் கருத்தாளராகத் தெரியும். வேறு சிலருக்கு நான் 'பரீக்‌ஷா ஞாநி’ என்றே அறிமுகம்.

38 வருடங்களாக அந்தப் பெயரில் ஒரு மாற்று நாடகக் குழுவை நடத்திவருகிறேன். பள்ளி

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

நாட்கள் முதல் நான் ஒரு மேடை நாடக, தெரு நாடக நடிகனும்கூட. இன்னும் சில வட்டாரங்களில் என்னை தொலைக்காட்சிக் கதைத் தொடர்களின் இயக்குநராகவும், திரைப்பட இயக்குநராகவும் அறிவார்கள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நான் வாழ்க்கைத்திறன் பயிற்றுநராக மட்டுமே அறிமுகம். நான் நாட்டுடைமையாக்கிவிட்ட, புகழ்பெற்ற என் பாரதி ஓவியத்தைக் கண்டவர்களுக்கு, நான் ஓவியன் என்பதும் தெரியும்.

இவற்றில் எது நான்?

இந்தக் கேள்வி, எனக்கு மட்டும் உரியது அல்ல... உங்களில் பலருக்கும் பொருந்தக்கூடியதுதான். நீங்களும் பல துறை ஆர்வங்களோடும் பல துறைத் திறன்களோடும் இயங்கிக்கொண்டிருக்கலாம். தவிரவும் நம் எல்லோருக்கும் இன்னும் பல முகங்கள் இருக்கின்றன. மகனாக, மகளாக, அப்பாவாக, அம்மாவாக, மாமாவாக, அண்ணன்-அக்காவாக, வேலை பார்க்கும் இடங்களில் அதிகாரியாக, அதிகாரத்துக்குக் கட்டுப்படுபவராக, நெருங்கிவரும் தேர்தல் சமயத்தில் மாண்புமிகு வாக்காளராக, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு மதத்தினராக, ஒரு சாதியினராக... என நிறைய முகங்கள் நம் எல்லோருக்கும் உண்டு.

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

இவற்றில் எது நாம்... எது நான்?

எல்லாமே நாம்தான்; நான்தான். ஆனால், ஒன்றுக்கொன்று முரண்பாடுகள் ஏற்படும்போது நம் வாழ்க்கை சிக்கலாகிவிடுகிறது. அப்படி அது சிக்கல் ஆகாமல் வாழ்வது எப்படி? எல்லா முகங்களுக்கும் இடையே ஊடாடும் அந்த உன்னதமான சரடை எப்படி அறிவது? அதற்கான நல்வாய்ப்பாக, என் தோழி பத்மா, 'வாழ்க்கைத்திறன் கல்வி’ என்ற ஜன்னலை எனக்குத் திறந்தபோது ஒளிர்ந்த வெளிச்சத்தில், என்னையே நான் இன்னொரு முறை செதுக்கிக்கொள்ள முடிந்தது.

ஆம்! சிற்பியும் நாம்தான்... சிலையும் நாம்தான். நம் வாழ்க்கை நம் கையில்தான். இதை, எனக்குக் கிட்டிய எண்ணற்ற வாழ்க்கை அனுபவங்கள் உணர்த்தி இருக்கின்றன. சென்னை நகரச் சுவர்களில் நள்ளிரவில் சுவரொட்டி ஒட்டியது முதல் இந்தியப் பிரதமர் வேட்பாளரின் மொழிபெயர்ப்பாளராக இருந்தது வரை, தெருமுனை தோறும் சுண்டலையும் சமோசாவையும் தேடித் தேடி விழுங்கிய காலம் தொடங்கி, இன்று செல்லும் ஊர்களில் எல்லாம் உப்பு இல்லாமல் உண்ண உணவு கேட்டே உயிர் வாழும் நிலைமை வரை வாழ்க்கை எனக்கு அளித்த வாய்ப்புகள் அற்புதமானவை. அவற்றில் இருந்து சில துளிகளை உங்களுடன் பகிர்கிறேன். அதில் ஒரு துளி, உங்கள் வாழ்க்கைக்கு ஏதோ ஒருவிதத்தில் உதவும் என நம்புகிறேன்!

29-10-15 முதல் 04-11-15 வரை 044-66802911*என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்.

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

அன்புடன்,

ஞாநி.