Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹெல்த்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹெல்த்

Published:Updated:
ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“தன் மகனை அழைத்துக்கொண்டு ஒருவர் என்னிடம் வந்தார். அந்தப் பையன், ‘டாக்டர்! தண்ணி அடிப்பது தவறா? எப்போதாவது ஒரு முறை மது அருந்துவதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று கேட்டான்.  ‘குடிப் பழக்கம் வளரும்தன்மை கொண்டது. அதனால், குடிக்காமல் இருப்பதே நல்லது. வம்பில் மாட்டிக்கொண்டு கஷ்டப்படுவதற்குப் பதில், அந்தப் பழக்கத்தைத் தொடங்காமல் இருப்பதே நல்லது’ என்று அவனுக்குப் பதில் அளித்தேன்.

இன்று கட்டுப்பாடுடன் மது அருந்துபவர்கள், இன்னும் சிறிது காலம் கழித்து, கட்டுப்பாட்டை இழந்து போதைக்கு அடிமையாக வாய்ப்புகள் அதிகம். மாதத்துக்கு ஒரு முறை மது அருந்துபவர், வாரத்துக்கு இரண்டு முறை மது அருந்துபவர், தினமும் காலையும் மாலையும் மது அருந்துபவர் என யாரைக் கேட்டுப்பார்த்தாலும், மது அருந்துவதற்கு ஒரு நியாயத்தை வைத்திருப்பார்கள். தொடக்கத்தில் மிகச் சாதாரணமாக மது அருந்தத் தொடங்குவார்கள். ஆல்கஹால் அவர்களை மெள்ள மெள்ள அடிமையாக்கிவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது கிராமத்திலேயே சொல்வதுபோல, மர்மக் குடி, மரியாதைக் குடி, மானங்கெட்ட குடி, மரணக் குடி என்று படிப்படியாக முன்னேறிச்செல்லும். இதை மனநல மருத்துவர்களாகிய நாங்கள், ஆறு நிலைகளாகச் சொல்வோம். அதாவது, உற்சாகக் குடி, கலாசாரக் குடி, ரிலாக்ஸ் குடி, கட்டாயக் குடி, பிரச்னைக்குரிய குடி, உடலும் மனமும் சார்ந்த குடி. தொடக்கத்தில் யாருக்கும் தெரியாமல் ஆரம்பித்து, சோஷியல் டிரிங்க்கராக மாறி, பிறகு அது இல்லாமல் முடியாது எனும் நிலைக்குச் சென்றுவிடுவர். அதனால், குடிப் பழக்கத்தைத் தொடங்காமல் இருப்பதே நல்லது” என்கிறார் மனநல மருத்துவர் செந்தில்வேலன்.

இன்று, அனைவரும் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்னை ஸ்ட்ரெஸ். அது குறித்து, “ஸ்ட்ரெஸுக்கு விரக்தி, முரண்பாடு, மாற்றம், சமுதாய நிர்பந்தம் என நான்கு முக்கியக் காரணங்கள் உள்ளன. எதார்த்தம் இல்லாத எதிர்பார்ப்புகள், தேவையற்ற ஒப்பீடு செய்தல் எனப் பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இவற்றை நாம் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டாலே மன அழுத்தம் இன்றி வாழலாம்” என்கிறார் டாக்டர்.

• குழந்தைகளுக்கு ஏற்படும் மனநலப் பிரச்னைகள் என்னென்ன?

• குழந்தை வளர்ப்பில் நான்கு முக்கிய விஷயங்கள் என்னென்ன?

• கவனக்குறைவு பிரச்னைகளைத் தவிர்க்க என்ன வழி?

• மனிதன் எப்படி குடிபோதைக்கு அடிமையாகிறான்?

• மன அழுத்தத்துக்கான காரணங்கள் என்னென்ன?

• மன அழுத்தத்தைத் தவிர்க்க என்ன வழி?

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ன்பு வாசகர்களே! நவம்பர் 1  முதல் 8-ம் தேதி வரை தினமும்,  044-66802904* என்ற எண்ணுக்கு போன் செய்தால்...பொதுவாக மக்கள் சந்திக்கும் மனநலப் பிரச்னைகள், மதுவுக்கு அடிமையாதல், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் பற்றியும், அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார் மனநல மருத்துவர் செந்தில்வேலன்

“கண்ணில் பவர் பிரச்னை குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மிக முக்கியப் பிரச்னை. உலக அளவில் 30 சதவிகித குழந்தைகளுக்கு கண்களில் பவர் பிரச்னை உள்ளது. இதை, ‘ரெஃப்ராக்டிவ் எரர்’ என்று சொல்வோம். இதில், பிளஸ் பவர், மைனஸ் பவர், சிலிண்டர் பவர் என மூன்று வகைகள் உள்ளன. நன்கு படித்துக்கொண்டிருந்த குழந்தை, திடீரென சரியாக ஹோம்வொர்க் எழுதுவது இல்லை என்றாலோ, பிளாக் போர்டில் எழுதுவது தெரியவில்லை எனச் சொன்னாலோ மைனஸ் பவராக இருக்கலாம். டி.வி-க்கு மிக அருகில் சென்று பார்க்கிறார்கள், புத்தகத்தைக் கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் படிக்கிறார்கள் என்றால், பிளஸ் பவராக இருக்கலாம். அவர்களை உடனடியாக கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். 14 வயதுக்குள் இந்த மாதிரியான பிரச்னை இருப்பதைக் கண்டறிந்தால், சரிசெய்துவிடலாம். இளம் வயதினர் என்பதால், இவர்களுக்கு முதலில் கண்களில் மருந்துவிட்டு பரிசோதனை செய்ய வேண்டும். அதன் பிறகு, 48 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்து, எவ்வளவு பவர் எனக் கண்டறிந்து, கண்ணாடி பரிந்துரைக்கப்படும்” என்கிறார் கண்நல மருத்துவர் ஸ்ரீனிவாச ராவ்.

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“இந்தக் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த கேரட், கீரைகள், மாம்பழம், பப்பாளி போன்றவற்றை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், முட்டையைச் சேர்த்துக்கொள்ளலாம். இவை கண் நரம்புகளை வலிமைப்படுத்தி, பார்வைத்திறனை மேம்படுத்த உதவும். முதலில், பரிசோதனை செய்து கண்ணாடி அணிந்த குழந்தைகளுக்கு, ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு முறை பவர் பரிசோதனை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு பவர் மாற வாய்ப்பு உள்ளது. வளர வளர பவர் மாறிக்கொண்டே இருக்கும். 18 வயது வரை இந்த மாற்றம் இருந்துகொண்டே இருக்கும். 90 சதவிகிதம் பேருக்கு 18 வயதில் பவர் நிலையாகிவிடும்” என்கிறார் டாக்டர்.

• குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பார்வைக் குறைபாடுகள் என்னென்ன?

• ஏன் ஒவ்வோர் ஆண்டும் கண் பரிசோதனை செய்ய வேண்டும்?

• பவர் பிரச்னையைச் சரிசெய்ய உள்ள நவீன சிகிச்சைகள் என்னென்ன?

• கண் அழுத்த நோயைக் கண்டறிவது எப்படி?

• சர்க்கரை நோயாளிகளுக்கான கண் பராமரிப்பு என்ன?

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ன்பு வாசகர்களே! நவம்பர் 9  முதல் 15-ம் தேதி வரை தினமும்  044-66802904*  என்ற எண்ணுக்கு போன் செய்தால் கண் தொடர்பான பிரச்னைகள், தீர்க்கும் வழிகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் கண்நல மருத்துவர் ஸ்ரீனிவாச ராவ்

- பா.பிரவீன் குமார்