Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹெல்த்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“கணைய அழற்சிப் பாதிப்பு இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து உள்ளது. கணையம் என்பது, ஒரு அற்புதமான சுரப்பி. நேரடியாக ரத்தத்தில் கலக்கக்கூடிய இன்சுலின், குளுக்ககான் ஹார்மோன்களைச் சுரப்பதுடன், கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு உள்ளிட்ட சத்துக்களைச் செரிக்கக்கூடிய என்ஸைம்களையும் சுரந்து, செரிமானத்துக்குப் பெரிதும் உதவுகிறது. இந்த என்ஸைம்கள், ஒரு நாளம் வழியாகச் சிறுகுடலை அடைகின்றன. இதேபோல, பித்தப்பையில் சேகரிக்கப்படும் பித்தநீரானது, சிறுகுடலை அடைகிறது. இந்த இரண்டு நாளங்களும் ஒன்றாணி, ஒரே துவாத்தின் வழியாக சிறுகுடலை அடைகிறன. கணையத்தில் சுரக்கும் என்ஸைம், சிறுகுடலை அடைந்ததும் தூண்டப்பட்டு, செரிமானத்துக்கு உதவுகிறது. பித்தப்பையில் கல் ஏற்பட்டு, அது பித்த நாளத்தை அடைத்துக்கொள்ளும்போது, அது கணைய நாளத்தின் மீதும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால், கணையத்துக்கே மீண்டும் கணைய என்ஸைம்கள் சென்றுவிடுகின்றன. இதனால், கணையம் பாதிக்கப்படுகிறது. மது அருந்துபவர்களுக்குக் கணைய நாளம் சேரும் இடத்தில் உள்ள தசையின் தன்மை இறுக்கம் அடைகிறது. இதன் காரணமாகவும் கணைய என்ஸைம் சிறுகுடலுக்குச் செல்வது தடைப்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது” என்கிறார் ‘செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையின் வயிறு, இரைப்பை, கல்லீரல் அறுவைசிகிச்சை நிபுணர் ஜி.மனோகரன்.

பித்தப்பை கல் பற்றி பேசுகையில், “ஒரு காலத்தில், பெண்கள், 40 வயதைக் கடந்தவர்கள், அதிக உடல் பருமனாக உள்ளவர்கள், அதிக குழந்தை பெற்றவர்களுக்குப் பித்தப்பை கல் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று சொல்வார்கள். ஆனால், இப்போது, மாறிவிட்ட வாழ்க்கைமுறை, உணவுமுறை காரணமாக, யாருக்கு வேண்டுமானாலும் பித்தப்பை கல் வரலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பித்தப்பையானது, 80 சதவிகிதப் பித்தநீரை வெளியேற்றிவிட்டு, மீதம் 20 சதவிகிதத்தை வெளியேற்ற முடியாமல் இருக்கிறது என்றால், பிரச்னை இல்லை. ஆனால், 20 சதவிகிதத்தை மட்டும்தான் வெளியேற்ற முடிகிறது என்றால்தான் பிரச்னை ஏற்படுகிறது. இப்படித் தேங்கும் பித்தநீர் கெட்டியாகி, கல் உருவாகிறது.” என்கிறார் டாக்டர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• கணைய அழற்சி என்றால் என்ன?

• மது எப்படிக் கணையத்தைப் பாதிக்கிறது?

• பித்தப்பை கல் எப்படி உருவாகிறது?

• பித்தப்பை கற்களுக்கு என்ன சிகிச்சை?

• மலம் கழிக்கும்போது ரத்தம் வந்தால் மூலமா?

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

அன்பு வாசகர்களே!

டிசம்பர் 16 முதல் 23-ம் தேதி வரை தினமும்,044 - 66802904* என்ற எண்ணுக்கு போன் செய்தால், வயிறு, இரைப்பையின் செயல்பாடு, அவற்றைப் பாதிக்கும் விஷயங்கள், சிகிச்சைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் வயிறு, இரைப்பை, கல்லீரல் அறுவைசிகிச்சை நிபுணர்
ஜி.மனோகரன்

“இன்றையக் காலகட்டத்தில், 40 வயதுக்கு மேல் உள்ளவர்களில் மூன்றில் ஒருவருக்கு ப்ரீடயாபடீஸ் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இந்த நிலை இப்படியே போய்க்கொண்டிருந்தால், உலகின் சர்க்கரை நோய் கூடாரமாக இந்தியா மாறிவிடும். சர்க்கரை நோய் உடலில் சர்க்கரை அளவை மட்டும் அதிகரிக்கச் செய்யவில்லை... இதயம், சிறுநீரகம், கண் என ஒவ்வோர் உறுப்பையும் பாதித்துவிடும்.

சர்க்கரை நோய்க்கு முக்கியக் காரணம் எல்லோரும் அறிந்ததுதான். அதிகப்படியான உணவு, கலோரி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது, உடல் உழைப்பு இன்மை, உடற்பயிற்சி செய்யாமை என நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இப்படித் தவறான லைஃப்ஸ்டைலைப் பின்பற்றுபவர்கள், குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறையாவது குளுக்கோஸ் டாலரன்ஸ் அல்லது எச்.பி.ஏ.1.சி பரிசோதனை செய்துகொள்வதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய முடியும். அப்படி வருவதற்கான வாய்ப்பு உள்ளது எனக் கண்டறிந்தால், விழிப்புடன் இருந்து, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என வாழ்க்கைமுறையை மாற்றி அமைப்பதன் மூலமே, சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்க முடியும்” என்கிறார் சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர் ஆர்.கருணாநிதி.

“சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு, மற்றவர்களைவிட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகம். சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவுடன், கொழுப்பு அளவும் அதிகரித்துவிடுகிறது. பொதுவாக, பெண்களுக்கு குறிப்பிட்ட காலம் வரையில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவாக இருக்கிறது. இதற்கு, ஹார்மோன்களே காரணம். சர்க்கரை நோய் வந்துவிட்டால், இந்த இயற்கை அரண் உடைக்கப்படுகிறது. இதனால், இவர்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. அதுவும், அவர்களுக்கு மாரடைப்புக்கான எந்த அறிகுறியுமே தெரியாமல் இருக்கும். சாதாரண உடல் வலி என்று மருத்துவமனைக்கு வருபவர்களே அதிகம். எனவே, விழிப்புடன் இருந்தால் சர்க்கரை நோயையும் அதன் பாதிப்புகளையும் வெல்லலாம்” என்கிறார் டாக்டர்.

• யாருக்கு சர்க்கரை நோய் வரும்?

• சர்க்கரை நோய் வருவதை முன்கூட்டியே கண்டறிய முடியுமா?

• சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

• சர்க்கரை நோயைத் தவிர்க்க செய்ய வேண்டியவை என்னென்ன?

• சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு மாரடைப்பு வருமா?

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

அன்பு வாசகர்களே!

டிசம்பர் 24 முதல் 31-ம் தேதி வரை தினமும், 044- 66802904* என்ற எண்ணுக்கு போன் செய்தால், சர்க்கரை நோய் வராமல் தவிர்க்கும் வழிகள், வந்தால் செய்ய வேண்டியவை என்னென்ன என விளக்கமாகப் பேசுகிறார் சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர் ஆர்.கருணாநிதி

*அழைப்பு சாதாரணக் கட்டணம்

- பா.பிரவீன் குமார், படம்: தி.ஹரிஹரன்