Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:
ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு, தன்னார்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தியின் வணக்கம்.

நாம் அனைவரும் வாழ்வதற்காக இயற்கையைச் சார்ந்து இருக்கிறோம். ஆனால், அதை வசதியாக மறந்தேவிட்டோம். நம் வாழ்வு பலவித உபாதைகள், ஆபத்துக்கள் நிறைந்ததாக மாறியது

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

இதனால்தான். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது, பறவைகள், விலங்குகள் போன்றவற்றைப் பாதுகாப்பது மட்டும் அல்ல; ஐம்பூதங்களையும் மாசுபடுத்தாமல் பயன்படுத்துவதும், இந்தப் பேருண்மையை உணர்வதும்தான். அன்றாட வாழ்வின் வழியே சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது எப்படி?

இந்த ஜனநாயக யுகத்தில் `சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நம் பங்கு என்ன?’ என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறோமா, தேர்தலுக்கு வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் `சுத்தமான காற்று, சுகாதாரமான நீர் குறித்த உங்கள் உத்தரவாதங்கள் என்ன?’ எனக் கேட்டிருக்கிறோமா... இல்லையே. ஏனென்றால், நம் அனைவருக்கும் வளர்ச்சி என்பது சாலைகள் போடுவது, மேம்பாலங்கள் நிர்மாணிப்பது, கண்ணாடிக் கட்டடங்கள் கட்டுவது அவ்வளவுதான். ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அரசியலின் பங்கு மிகப் பெரியது. அதற்கு நாம் செய்யவேண்டியது என்ன?

தன்னார்வத்தொண்டு, தன்னார்வலர் என்பது சமீபத்தில் மிகவும் பரவலாகப் பேசப்படும் விஷயங்கள். தன்னார்வலராகும் ஆர்வம் பலருக்கு இருக்கும். ஆனால், களத்தில் இறங்கி அதைச் செயல்வடிவமாக மாற்றுபவர்கள் குறைவானவர்களே. தெளிவான சிந்தனையோடு ஒவ்வொருவரும் களத்தில் இறங்கிவிட்டால், தன்னார்வத் தொண்டைப் போல வாழ்வியல் அறிவைத் தரும் விஷயம் வேறு இல்லை.தன்னார்வலராக நான் களத்தில் என்னவெல்லாம் கற்றுக்கொண்டேன் தெரியுமா?

சமீபத்தில், சென்னையை தண்ணீரில் மிதக்கவிட்டுக் கலங்கடித்தது மழை வெள்ளப் பேரிடர். இப்போது சென்னை மெள்ள மெள்ள இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டு இருந்தாலும், வெள்ளப் பேரிடர் தந்த ரணத்தை யாராலும் மறக்க முடியாது. இனி இப்படி ஒரு பேரிடர் நம்மை நெருங்காமல் இருக்க, நாம் கவனமாகத் தவிர்க்கவேண்டியது மிகச் சில விஷயங்கள். அவை என்னென்ன? சொல்கிறேன்.

24-12-15 முதல் 30-12-15 வரை 044-66802911* என்ற எண்ணில் அழையுங்கள். இயற்கை குறித்த நம் புரிதல்களைப் பகிர்ந்துகொள்வோம்!

அன்புடன்,

அருண் கிருஷ்ணமூர்த்தி