Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹெல்த்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹெல்த்

Published:Updated:

“சென்னை மட்டும் அல்ல, தமிழகக் கடலோர மாவட்டங்கள் அனைத்துமே மழை வெள்ளத்தால், கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இயல்புநிலைக்கு மீண்டுவருகிறார்கள். இயற்கைப் பேரிடர் ஏற்படும் சமயங்களில், அந்தப் பேரிடருக்குப் பின் 90 நாட்கள் முதல் 9 மாதங்கள் வரையிலும், பேரிடரைச் சந்தித்தவர்கள் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு மனரீதியான உதவி அளிக்க வேண்டியது மிகவும் முக்கியம்” என்கிறார் மனநல நிபுணர் டி.வி.அசோகன்.

“மழை வெள்ளத்தால் வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் குறைபாடு இருப்பவர்கள், அன்றாடம் மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கும். பேரிடரில் வீடு, உடைமையை இழந்தவர்கள் மாத்திரையை வாங்கிச் சாப்பிடுவது எளிதில் சாத்தியம் அல்ல. மாத்திரை சாப்பிடாததன் காரணமாக, மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும். மலம், சிறுநீர் கழிக்கக்கூட இடமின்றி சிலர் மிகவும் சிரமப்படுகின்றனர். பெண்கள் நாப்கின் வசதி இன்றித் தவிக்கின்றனர். பேரிடருக்குப் பின் ஏற்படும் மனரீதியான பாதிப்புகளை, `பி.டி.எஸ்.டி (Post Traumatic Stress Disorder)’ என்பார்கள். சொந்த வீட்டை, சிறுகச் சிறுகச் சேமித்து, ஆசையாக வாங்கிய வீட்டு உபகரணங்களை இழந்து, இ.எம்.ஐ போன்றவற்றையும் கட்ட வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள், இந்தப் பேரிடர் பாதிப்பில் இருந்து மீள்வது சாதாரண விஷயம் இல்லை. மனம்விட்டுப் பேசுவதும், பாதிக்கப்பட்டவர் சொல்வதை, நேரத்தையும் காதையும் கொடுத்துக் கேட்பதும் அவசியம். இந்தப் பேரிடர் மனதையும் உடலையும் பாதித்து, பல நோய்களை உருவாக்கும்” என எச்சரிக்கிறார் டாக்டர்.

• இயற்கைப் பேரிடரால் ஏற்படும் மனரீதியான பாதிப்புகள் என்னென்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பி.டி.எஸ்.டி என்பது என்ன?

• முதன்மை மற்றும் இரண்டாம் கட்ட மனப் பாதிப்புகள் எவை?

• பேரிடர் நிவாரணப் பணிகளில், நாம் என்ன செய்ய வேண்டும்?

• பேரிடர் சமயத்தில் மருத்துவர்களின் பங்கு என்ன?

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

அன்பு வாசகர்களே!

ஜனவரி 1 முதல் 8-ம் தேதி வரை தினமும் 044-66802904* என்ற எண்ணுக்கு போன்செய்தால், பேரிடர் சமயத்தில் ஏற்படும் மனரீதியான பாதிப்புகளையும் அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பன குறித்தும் விரிவாகப் பேசுகிறார் மனநல நிபுணர் டி.வி.அசோகன்

“இதயத்துக்கு இந்த எண்ணெய் நல்லது’,‘இதில் ஒமேகா 3 உள்ளது’ என, இதயத்தின் ஆரோக்கியத்துக்கும் எண்ணெய்க்கும் தொடர்பு உள்ளதுபோல செய்திகள் வருகின்றன. நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலெண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற எண்ணெய்களில் எது இதயத்துக்கு நல்லது என்ற குழப்பம் எல்லோருக்கும் உள்ளது. எந்த எண்ணெயையும் அதிக அளவில் பயன்படுத்தும்போது, இதயத்துக்கு ஆபத்துதான். அது, ஆலிவ் எண்ணெயாக இருந்தாலும் சரி, நல்லெண்ணெயாக இருந்தாலும் சரி. முக்கியமாக, டீப் ஃப்ரை உணவுகள் இதயத்துக்கு எதிரி. இதயத்துக்கு நல்லது என்று எந்த எண்ணெயையும் தனியாகச் சொல்ல முடியாது. உடலுக்கு நல்லது என்று சொல்லப்படும் ‘நல்லெண்ணெய்’ பெயரில் நல்லதை வைத்திருப்பதால், இதயத்துக்கான சிறந்த எண்ணெய் என்று சொல்லலாம்” என்கிறார், இதய அறுவைசிகிச்சை நிபுணர் த.பெரியசாமி.

“இதயத் தசைக்குச் சீராகச் செல்ல வேண்டிய ரத்தம் தடைபட்டால், இதயம் பலவீனம் ஆகும். உதாரணத்துக்கு, இதயத் தசைக்கு 50 மி.லி  ரத்தம் செல்ல வேண்டும் எனில், அது 30, 20 மி.லி எனக் குறைந்துகொண்டே போகும்போது, இதயம் பலவீனமடையும். இதயம் பலவீனம் அடைந்தால், இதயம் அசைகின்ற உணர்வு இருக்கும். வயிறு நிறையச் சாப்பிட்டால், ஒருவித வலி, நுரையீரலில் சளி இருக்கும்போது ஒருவித வலி எனப் பாதிப்பை ஏற்படுத்தும். இவை அனைத்துக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. இதில், எது நெஞ்சு வலி எனக் கண்டுபிடிப்பது கடினம். எனவே, வலி வந்தால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுவதன் மூலம், உயிரிழப்பைத் தவிர்த்து, வாழ்நாளை அதிகரிக்க முடியும்” என்கிறார் டாக்டர்.

• எந்த எண்ணெய் இதயத்துக்கு பெஸ்ட்?

• சிலருக்கு, இதயம் அசைவது போன்ற உணர்வு இருக்கும். சிலருக்கு, அதிகமாகத் துடிப்பது போன்ற உணர்வு இருக்கும். இவை எதனால்?

• இதயம் ஆரோக்கியமாக இருக்க, என்ன சாப்பிட வேண்டும்?

• அடிக்கடி நெஞ்சு வலி வருவது ஏன்?

• குடி, புகை எவ்வாறு இதயத்தைப் பாதிக்கும்?

• இதய நோயாளிகள் எந்தப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்? எவற்றைச் செய்யக் கூடாது?

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

அன்பு வாசகர்களே!

ஜனவரி 9 முதல் 15-ம் தேதி வரை தினமும் 044-66802904* என்ற எண்ணுக்கு போன்செய்தால், இதயத்தைப் பாதிக்கும் விஷயங்கள், தவிர்க்கும் வழிகள் பற்றி, விரிவாகப் பேசுகிறார் இதய அறுவைசிகிச்சை நிபுணர் த.பெரியசாமி

- பு.விவேக் ஆனந்த், மினு

படங்கள்: எம்.உசேன்

*அழைப்பு சாதாரணக் கட்டணம்