Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு வணக்கம். நான் வழக்குரைஞர் அருள்மொழி பேசுகிறேன்.

2015-ம் ஆண்டு இறுதியில், தமிழ்நாட்டை பேரிடராகத் தாக்கிய மழை வெள்ளத்தால் நாம் கொஞ்சம் அதிர்ந்துதான் போனோம். இதுவரை நாம் கேள்விப்படாத, பார்த்திராத பேரழிவு அது. அப்போது சென்னை மக்கள் எந்தவிதத் தொடர்புகளும் இல்லாமல், ஒரு வாரம் வாழ்ந்தார்கள் என்பது உண்மையாகவே அதிசயம்தான். குடும்பத்தோடு மகிழ்ச்சியாகப் பேசுவது, இரவு சீக்கிரம் படுக்கச் செல்வது, இருக்கும் கொஞ்சம் உணவு, தண்ணீரை அர்த்தபூர்வமாகப் பயன்படுத்துவது என மனிதர்களின் பல நல்லியல்புகள் அப்போது வெளிப்பட்டன. இவை தொடர்ந்தால் சமூகத்தில் உருவாகும் நல்ல மாற்றங்கள் பற்றி சொல்லவா?

தீவிரவாதம்தான் இப்போது உலகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய அச்சுறுத்தல். இதற்கு முக்கியக் காரணம் அடிப்படைவாத மனப்போக்கு. அது என்ன அடிப்படைவாதம்? மத அடிப்படைவாதம், தேசிய அடிப்படைவாதம், மொழி அடிப்படைவாதம்... இப்படி எதை வேண்டுமானாலும் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இந்தியாவில் இந்துக்களே அதிகம் வாழ்கிறார்கள். அதனால், `நாங்கள் வைத்ததே சட்டம். மீதம் இருப்பவர்கள் எங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறவர்கள். அவர்களை இந்தியாவில் வாழ அனுமதிப்பதே நாங்கள் கொடுத்த பெரிய சலுகை’ என நினைத்தால், அதுதான் மத அடிப்படைவாதம். இந்தப் பெரும்பான்மை மனப்போக்கே இங்கு நிலவும் பல பிரச்னைகளுக்குக் காரணம். அதை மனதளவில் களைவது எப்படி?

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

சமீபத்தில் இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்படுவது `குற்றத்துக்கு ஏற்ற தண்டனையா... வயதுக்கு ஏற்ற தண்டனையா?’ என்பதுதான். என்னைக் கேட்டால், `நிச்சயம் இரண்டையும் பரிசீலித்தே தண்டனை தர வேண்டும்’ என்பேன். ஆனால், இந்த விவாதம் ஏன் ஏற்பட்டது? சமீபத்தில் நிர்பயா வழக்கில் வந்த தீர்ப்பு, அதில் சம்பந்தப்பட்டவரின் வயது... இவையே மேற்கண்ட விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன. இதுபோன்ற பிரச்னை உருவாகும்போது எப்படிப்பட்ட தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் தெரியுமா?

பெரியார் கொள்கைகளில் எனக்கு எப்போதும் ஈடுபாடு அதிகம். பெரியாரைப் பற்றி படிப்பது, அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம்காட்டுவது என் வாடிக்கையான செயல்களில் ஒன்று. பெரியார் பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்வதைவிட, மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அது என்ன? ஓர் உண்மைச் சம்பவத்துடன் கூறுகிறேன் கேளுங்கள்.
7-1-16 முதல் 13-1-16 வரை 044-66802911என்ற எண்ணில் அழையுங்கள். நிறைய நல்லவை பேசுவோம்!

அன்புடன்,
அருள்மொழி.