Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹெல்த்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“நீண்ட காலமாகக் கவனிக்காமல் இருக்கும் சர்க்கரை நோயும், உயர் ரத்த அழுத்தமும்  சிறுநீரகத்தைப் பெருமளவு பாதிக்கும். இந்த இரண்டு பிரச்னை இருப்பவர்களும், தொடர் மருந்துகள் எடுத்துக்கொள்வதைப்போல, சிறுநீரகத்தின் செயல்பாட்டையும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகத்தின் செயல்திறனை அறியும் எளிய ரத்தப் பரிசோதனையைச் செய்துவந்தாலே, 70 சதவிகித சிறுநீரகப் பாதிப்பைத் தடுத்துவிடலாம். அடிக்கடி வலிநிவாரணி மாத்திரை சாப்பிடுவது, அடிக்கடி சிறுநீர்த் தொற்று போன்ற பிரச்னைகளாலும் சிறுநீரகம் பாதிக்கும். எல்லோருக்குமே சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும் என்பது கிடையாது. சிலருக்கு, தற்காலிகமாகக்கூட சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படும்” என்கிறார், சிறுநீரக மூத்த மருத்துவர் பாலசுப்பிரமணியன்.

“சிறுநீரகம் சரியாகச் செயல்படுகிறதா இல்லையா என்பதை, சில அறிகுறிகளைவைத்தே கண்டுபிடித்துவிடலாம். சிலருக்கு, சிறுநீர் குறைவாகப் போகலாம். பகல் மற்றும் இரவில் அடிக்கடி அதிகமாக சிறுநீர் கழிப்பது, பயணம்செய்யும்போது கால் வீக்கம், விட்டுவிட்டு சிறுநீர் கழிப்பது, ரத்தம் கலந்த சிறுநீர், கற்கள் கலந்த சிறுநீர், சிறுநீர் போகும்போது எரிச்சல் உணர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சிறுநீரகத்தில் பிரச்னை என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். சிலருக்கு எந்த அறிகுறிகளும் தெரியாமலும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். பெரும்பாலும், சுய மருத்துவம் செய்துகொள்வதுகூட சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பதால் தொடக்கத்திலேயே மருத்துவரிடம் ஆலோசித்து, பரிசோதித்து, ஆரம்பகட்டத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்வதே பாதுகாப்பைத் தரும்” என்கிறார் டாக்டர்.

சிறுநீரகப் பாதை நோய்த்தொற்று யாருக்கு அதிகம் வரும்?

சிறுநீரகங்களை அதிகமாகப் பாதிக்கும் நோய்கள் என்னென்ன?

சிறுநீரக நோய்களின் அறிகுறிகள் என்னென்ன?

வீட்டிலேயே டயாலிஸிஸ் செய்துகொள்வது எப்படி?

ஒருவரது சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என எப்படிக் கண்டுபிடிப்பது?

சிறுநீரகங்களைப் பாதுகாக்க என்னென்ன வழிகள்?

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அன்பு வாசகர்களே!

ஜனவரி 16 முதல் 23-ம் தேதி வரை தினமும் 044-66802904* என்ற எண்ணுக்கு போன்செய்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகள், சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைக் காக்க செய்ய வேண்டியவை பற்றி விரிவாகப் பேசுகிறார் சிறுநீரக மூத்த மருத்துவர் பாலசுப்பிரமணியன்

“அயல்நாடுகளில் பள்ளிக்கூட பாடமாகவே `முதலுதவி செய்வது எப்படி?’ என்று கற்றுக்கொடுக்கின்றனர். நம் நாட்டில் முதலுதவி குறித்த விழிப்புஉணர்வு மிகக் குறைவாகவே உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் சரியான முதலுதவி கிடைக்காமல் இறந்து விடுகிறார்கள். நம் ஊரில்தான், விபத்து என்றால் உதவி செய்ய ஓடிவருபவர்கள் அதிகம். ஆனால், எந்தெந்தப் பிரச்னைக்கு என்னென்ன மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் இல்லை. முதலுதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், தவறான முதலுதவி செய்வதன் காரணமாக பிரச்னை மேலும் தீவிரம் அடைய நேரிடும். ஏன், சிலர் மரணத்தைக்கூட தழுவிவிடுகிறார்கள். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, நாம் ஒவ்வொருவருமே முதலுதவி செய்ய கற்றுக்கொள்வது அவசியம்” என்கிறார், மேத்தா மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரசிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் எஸ்.சரவணக்குமார்.

“முதலுதவிகளில் மிகவும் முக்கியமானது சி.பி.ஆர். ஒருவருக்கு இதயம் நின்றுவிட்டது எனக் கருதினால், உடனடியாக 10 நிமிடங்களுக்குள் நாம் முதலுதவி செய்வதன் மூலம் அவரைக் காப்பாற்ற வாய்ப்பு இருக்கிறது. சாலையில் அடிபட்டவர்களுக்குச் செய்வதுதான் முதலுதவி எனப் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. நம் வீட்டில், நம் நெருங்கிய சொந்தங்களுக்குக்கூட முதலுதவி எந்த நேரத்திலும் தேவைப்படலாம். சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாருமே முதலுதவி செய்வதைக் கற்றுக்கொள்ள வேண்டும்”என்கிறார் டாக்டர்.

சி.பி.ஆர் என்றால் என்ன? 

சாலை விபத்து நேர்ந்தால், என்ன செய்ய வேண்டும்?

பாம்பு கடித்தால், விஷம் அருந்தினால் என்ன செய்வது?

காயம் ஏற்பட்டால், என்ன முதலுதவி?

மூச்சுக்குழாய் அடைத்துக்கொண்டால், என்ன செய்ய வேண்டும்?

மாரடைப்பு சமயத்தில் செய்ய வேண்டிய முதலுதவி என்ன?

வலிப்பு ஏற்பட்டால், கையில் இரும்பு கொடுக்கலாமா?

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

அன்பு வாசகர்களே!

ஜனவரி 24 முதல் 31-ம் தேதி வரை தினமும் 044-66802904* என்ற எண்ணுக்கு போன்செய்தால், முதலுதவி செய்வது எப்படி என்பதை விரிவாகப் பேசுகிறார் விபத்து மற்றும் அவசரசிகிச்சை நிபுணர் எஸ்.சரவணக்குமார்

*அழைப்பு சாதாரணக் கட்டணம்

- பு.விவேக் ஆனந்த், மினு

படங்கள்: ரா.வருண் பிரசாத், இரா.யோகேஷ்வரன்