Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!
பிரீமியம் ஸ்டோரி
ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:
ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!
பிரீமியம் ஸ்டோரி
ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!
ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு பார்த்திபனின் அன்பு வணக்கம்...

‘வெற்றிக்கான ஃபார்முலா என்ன?’ - கேள்வி என்னிடம் கேட்கப்படும்போது நான் சொல்லும் பதில் இதுதான்... `எந்த ஒரு விஷயத்தைச் செய்யும்போதும் அதில் கடைசிவரை நம்மால் இயன்ற விஷயங்களைச் சேர்க்க வேண்டும். அந்த விஷயம் இறுதி வடிவம் பெறும்வரை அதில் நாம் வேலை செய்ய வேண்டும்’. இதற்கு ‘நானும் ரௌடிதான்’ பட சமயத்தில் நடந்த விஷயம் ஒன்றையும், இந்த ‘இன்று... ஒன்று... நன்று!’ ஒலிப்பதிவு செய்தபோது நடந்த ஒரு விஷயத்தையும் உதாரணமாகச் சொல்கிறேன்... கேளுங்கள்.
 
இன்றைய இளைஞர்கள் நினைத்தால் என்னவெல்லாம் செய்யலாம்? அவர்கள் நினைத்தால் சி.எம் ஆகலாம்;

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பி.எம்-கூட ஆகலாம். ஆனால், ஏ.எம்-மில் எழுந்திருக்க வேண்டும். என் மகன் உள்பட இன்றைய இளைஞர்களிடம் இருக்கும் பெரிய பிரச்னையே, காலை எழும் பழக்கம் இல்லாததுதான். அவர்கள் ஆற்றலைப் பற்றி நாம் சந்தேகிக்கவே முடியாது. அவ்வளவு ஆற்றலும் மாற்றம் நிகழ்த்தும் சக்தியும் கொண்டவர்கள். இன்னும் இவர்கள் என்னவெல்லாம் செய்யலாம்? சொல்கிறேன்... கேளுங்கள்.
‘புத்தகம் நிறையப் படிப்பீங்களா?’ என்று கேட்டார்கள். சென்னையையே அதிரவைத்த பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியவில்லை என்னால். படித்த புத்தகங்கள் எல்லாம் நனைந்துவிட்டன மழையில். `எல்லாம் நாசமானதுக்கு, நாசாவுடைய அறிவிப்பை யாரும் அந்த அளவுக்கு முக்கியமா எடுத்துக்கலைங்கிறது காரணம்' என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். பிரச்னை என்னவென்றால்... நம் சோபா, நாற்காலி என்று எல்லா உடைமைகளும் நனைந்துபோய்க் கிடக்கின்றன. இதில் எங்கே இருந்து புத்தகங்களை வாசிப்பது? ஆனால், இதில் என்னால் வாசிக்க முடிந்த ஒரு விஷயம் மனிதநேயம். அந்த மனிதத்தை மட்டும் நன்றாக வாசிக்க முடிந்தது. தோல் போத்திய புத்தகங்களான மனிதர்கள் பற்றி இன்னும் நிறையச் சொல்கிறேன்... கேளுங்கள்.

சின்னச்சின்ன விஷயங்களிலும் சந்தோஷம் ஒளிந்திருக்கும் ரகசியம் தெரியுமா? நான் அடிக்கடி நினைக்கும் விஷயங்களில் ஒன்று `காலம் கடந்துபோகும்... இந்தக் காயம் மறைந்துபோகும்... இதுவும் கடந்து போகும்' என்பதுதான். நம் கஷ்டங்களும் சந்தோஷங்களும் கடந்து போய்க்கொண்டுதான் இருக்கின்றன. அதனால் எதற்காகவும் வருத்தப்பட்டுத் தேங்கிவிடாமல், கிடைக்கும் சின்னச் சின்ன மகிழ்ச்சியையும் தவறவிடாமல், ஒரு மாலையாகக் கோத்து அணிந்துகொண்டால் வாழ்க்கையே அவ்வளவு மகிழ்ச்சியாக மாறிவிடும். இதற்கு நான் கண்ட ஒரு விஷயத்தை உதாரணமாகச்  சொல்கிறேன்.

21-1-16 முதல் 27-1-16 வரை 044-66802911  என்ற எண்ணில் அழையுங்கள். புதியன பல பேசுவோம்!

அன்புடன்,
பார்த்திபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism