Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!
பிரீமியம் ஸ்டோரி
News
ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

படம்: எம்.பி.சித்தார்த்

 விகடன் வாசகர்களுக்கு ஓவியர் ஜேகே-வின் வணக்கம்.

`குகையில் மனிதர்கள் வசித்திருந்தபோது, அவர்கள் பயன்படுத்திய நெருப்பின் ஒளியால் சுவரில் நிழல் ஏற்பட்டது. அதைப் பார்த்த அவர்களின் கற்பனை கொஞ்சம் விரிய, அப்போது ஓவியம் தொடங்கியிருக்கலாம்' என வரலாறு சொல்கிறது. பொதுவாகவே வரலாற்றுக்கும் ஓவியத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஓவியங்களால் பதிவுசெய்யப்பட்டதே முதல் வரலாறு. அதைப் பற்றி சொல்கிறேன்... கேளுங்கள்.

ஓவியங்கள் காலத்துக்கு ஏற்ப தன்னைப் புதுப்பித்துக் கொள்கின்றன. கற்கால ஓவியம் முதல் இப்போது வந்திருக்கும் மாடர்ன் ஆர்ட் தாண்டியும் நிறைய மாற்றங்களும் புதுமைகளும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கறுப்பு-வெள்ளைப் புகைப்படத்தில் இருந்து வண்ணப் புகைப்படங்களின் வருகையின்போது ஓவியங்களுக்கு பெரும் சவால் வந்தது. அதை எல்லாம் தாண்டி ஓவியங்களில் பல்வேறு நல்ல மாறுதல்கள் வந்தன. அவை மனித வாழ்வை எப்படி எல்லாம் பாதித்தன தெரியுமா?

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

அழகியலைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள் தாண்டி, சமூகப் பிரச்னைகளை ஓவியங்கள் மூலம் பொது வெளிக்குக் கொண்டுவந்த போது அதன் வீரியம் இன்னும் அதிகமானது. ஒவ்வொரு காலத்திலும் நிகழ்ந்த பேரழிவுகள், சமூக அவலங்கள் ஓவியங்கள் மூலமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அப்படி நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றி சொல்கிறேன் கேளுங்கள்.

பள்ளிகளில் `ஓவிய வகுப்பு' எனத் தனிப் பாடவேளை இருக்கும். ஓவியம் வரையக் கற்பதற்குப் பின்னால் அர்த்தமுள்ள நிறையக் காரணங்கள் இருக்கின்றன. மனித மூளை, ஒரு பொருளை கண்களால் பார்க்கிறது. அதைப் பார்த்து வரைவதன் மூலம் நாம் பார்த்த பொருளின் உண்மைத்தன்மையை உணர்கிறோம்; நம் கவனிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். இப்படி, ஓவியத்தால் நிகழும் அற்புதங்களைத் தெரிந்துகொள்வோமா?

28-1-16 முதல் 3-2-16 வரை 044-66802911* என்ற எண்ணில் அழையுங்கள்... அழகுபடப் பேசுவோம்!

அன்புடன்,

ஜேகே

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz