Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹெல்த்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“திருமணம் ஆகி, ஓராண்டில் கருத்தரிக்கவில்லை எனில், மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். பெண்கள் 30 வயதுக்குள் தாய்மை அடைய வேண்டும். இந்தக் காலகட்டத்தில்தான் அவர்கள் உடல்நிலை கருத்தரிக்கவும், கரு ஆரோக்கியமாக வளரவும் ஏற்றதாக இருக்கும். ஆனால், தற்போது நிறைய பெண்கள் 35 வயதுக்கு மேல் ஆகியும் குழந்தைப்பேறு இல்லை என சிகிச்சைக்கு வருகின்றனர். `ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள்?’ என்று கேட்டால், `என் அப்பா அம்மாவுக்கு நான் 10 வருடங்கள் கழித்துத்தான் பிறந்தேன். அதனால், நானும் சில காலம் காத்திருந்துவிட்டு வருகிறேன்’ என்கின்றனர். அப்போது இருந்த சூழலும், வாழ்க்கைமுறையும் இன்று இல்லை. அப்படியிருக்கும் போது வயது ஆகி, தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சிகிச்சைகள் கைகொடுக்காமல் போகலாம். இன்றைய காலகட்டத்தில், பெண்கள் தாமதமாகத் திருமணம் செய்துகொள்வதுடன், குழந்தை பெற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லாமல் தள்ளிப்போடுகின்றனர். இதனால், கருமுட்டை தரம் குறைந்து, கருத்தரிக்கக்கூடிய வாய்ப்புகளும் குறைந்துகொண்டே போகின்றன. எடையும் அதிகரிப்பதால், குழந்தை பெற்றுக்கொள்ள சிரமமாகிவிடுகிறது” என்கிறார் மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் கல்பனா.

“சில பெண்களுக்குத் தொடர்ந்துக் கருச்சிதைவு ஆகிக்கொண்டே இருக்கும். பரிசோதனைசெய்து பார்க்கும்போது, பெண் அல்லது ஆணின் மரபணுவில் பிரச்னைகள் இருக்கும். மரபணு பிரச்னை இருக்கும் சமயத்தில், பெண் கருவுற்றால், பிறக்கும் குழந்தையும் மரபணுப் பிரச்னையால் பாதிக்கப்படலாம். இவர்களது கருவை ஸ்கிரீன் டெஸ்ட் செய்து, எந்த மரபணு நார்மலாக உள்ளதோ அந்தக் கருவைப் பெண்ணுக்குச் செலுத்தினால், கருச்சிதைவு பிரச்னை நீங்கி, குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்” என்கிறார் டாக்டர்.

- மினு, படம்: சு.ஷரண் சந்தர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

குழந்தையின்மைப் பிரச்னையிருப்பவர்கள், எப்போது டாக்டரை அணுக வேண்டும்?

குழந்தையின்மை பிரச்னை ஏன் அதிகரித்துள்ளது?

பெண்களின் வயது, குழந்தை பெறுவதற்கு ஏன் முக்கியம்?

குடும்பக் கட்டுப்பாடு செய்த பிறகு, குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?

தொடர்ந்து கருச்சிதைவு ஏற்பட்டால், என்ன செய்ய வேண்டும்?

அன்பு வாசகர்களே! பிப்ரவரி 1 முதல் 8-ம் தேதி வரை தினமும் 044-66802904* என்ற எண்ணுக்கு போன் செய்தால், குழந்தையின்மை பிரச்னை, கர்ப்பகால பிரச்னைகள், தீர்வுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் கல்பனா

“தினமும் நாம் நேரடியாகப் பயன்படுத்தும் உறுப்பு, பல். செரிமானத்துக்கு ஆரம்பம் வாய்தான். பற்கள் நன்கு அரைத்துக் கொடுக்கும்போதுதான், உணவு எளிதில் செரிமானம் ஆகிறது. சிகரெட் புகைத்தல், புகையிலைப் பொருட்களை மெல்லுதல், புகையிலை - பாக்கு போடுதல், தினமும் இரண்டு முறை பல் துலக்காதது, அளவுக்கு அதிகமாக இனிப்புகள் உட்கொள்வது, கார்ப்பனேட்டட் குளிர் பானங்கள் அருந்துவது என்று நாமாக ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் அதிகம். புகையிலை, பாக்கு மெல்லும் பழக்கம் தொடரும்போது, அது வாய்ப் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது” என்கிறார் பல் சீரமைப்பு மற்றும் சிகிச்சை நிபுணர் எம்.எஸ்.ரவி வர்மா.

“சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறுநீரகம், இதயம், நரம்பு மண்டலப் பாதிப்பு, காலில் புண் சீக்கிரம் ஆறாமை எனப் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றைப் பற்றி அதிக அக்கறைகொள்ளும் சர்க்கரை நோயாளிகள் வாய்ப் பராமரிப்பை கண்டுகொள்வது இல்லை. சர்க்கரை நோயாளிகளுக்கு வாயில்தான் காயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பிரஷ்ஷை அழுத்தமாக உபயோகிப் பதாலோ, கடினமான பிரஷ்ஷைப் பயன்படுத்துவதாலோ ஈறில் காயம் ஏற்படலாம். இந்தக் காயத்தால் நோய்த்தொற்று ஏற்படும். நோய்த்தொற்று அதிகரித்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இதனால், வேறு தொந்தரவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஈறுகளை சுத்தம் செய்துகொள்வது அவசியம்” என்கிறார் டாக்டர்.

“இன்றைக்கு அனைவரும் சந்திக்கும் பிரச்னை, வாய் துர்நாற்றம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. உணவுத்துகள் பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு, வாய் கொப்பளிக்கும்போதோ, பல் துலக்கும்போதோ வெளியேறாமல் இருந்தால், அழுக ஆரம்பித்து வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். பிரஷ் செய்வது, மவுத் வாஷ் உபயோகிப்பது தற்காலிகமாகப் பிரச்னையைத் தள்ளிப்போடுமே தவிர தீர்வு அளிக்காது. எனவே, எதனால் பாதிப்பு என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்.

- பா.பிரவீன் குமார்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

வாய் துர்நாற்றம் ஏற்பட என்ன காரணம்?

பற்களின் அமைப்புக்கும் பல் பிரச்னைக்கும் உள்ள தொடர்பு என்ன?

பற்களைப் பராமரிக்கும் வழிமுறைகள் என்னென்ன?

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் பற்களைப் பரிசோதனை செய்ய வேண்டும்?

வாய்ப் புற்றுநோய் ஏற்பட முக்கியக் காரணம் என்ன?

அன்பு வாசகர்களே! பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரை தினமும் 044-66802904* என்ற எண்ணுக்கு போன் செய்தால், பற்களைப் பராமரிக்கும் வழிமுறைகள், பிரஷ்ஷிங் டெக்னிக், வாயில் ஏற்படக்கூடிய புற்றுநோய் பற்றி விரிவாகப் பேசுகிறார் பல் சீரமைப்பு சிகிச்சை நிபுணர் எம்.எஸ்.ரவி வர்மா

*அழைப்பு சாதாரணக் கட்டணம்