விகடன் வாசகர்களுக்கு மதன் கார்க்கியின் வணக்கம்,

தமிழ் சினிமாவில் காதல் பற்றி பேசாத படங்களையும் பாடல்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். `வானம் என்ற ஒன்று இல்லை என்றால், வாழ்க்கை என்ற ஒன்று இல்லை... காதல் என்ற ஒன்று இல்லை என்றால், தமிழ் சினிமா இல்லை’ - இவை, சமீபத்தில் ஒரு திரைப்படத்துக்காக நான் எழுதிய வரிகள். இது ஓர் உதாரணம் மட்டுமே. இப்படி பலவிதங்களில் காதல் கொண்டாடப்படுகிறது... ஏன் தெரியுமா?

காதல் பற்றி லட்சக்கணக்கான பாடல்கள் வந்திருக்கின்றன. அதனால், ஒரு காதல் பாடல் எழுத உட்காரும்போது, புதிய கோணத்தில் சொல்ல வேண்டும் என யோசிப்பதுதான் சிரமமான விஷயம்; தவிர சுவாரஸ்யமானதும்கூட. `நண்பன்’ படத்துக்குப் பாடல் எழுதும்போது அப்படி ஒரு சூழல் எனக்கு அமைந்தது. அந்தப் பாடல்தான் `அஸ்க் லஸ்கா...’

நம் வாழ்வில் நடந்த சொந்த அனுபவங்களை பாடல்களில் வைப்பது ரொம்பவே எளிய விஷயம். அந்தச் சமயத்தில் நம்மை நாமே எப்படிப் பார்த்துக்கொண்டோம், என்னென்ன விஷயங்களை எல்லாம் செய்தோம், எதை எல்லாம் கவனித்தோம்... என எல்லா அனுபவங்களும் நமக்குள் அப்படியே தேங்கியிருக்கும். நானும் என் மனைவி நந்தினியும் கல்லூரிக் காலங்களில் பேசிக்கொண்டிருக்கும்போதோ, அவரின் தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருக்கும்போதோ... அந்த நிமிடங்களில் மனதுக்குள் ஓடும் விஷயங்கள் அவ்வளவு அழகாக இருந்தன. அந்த அனுபவத்தை எல்லாம் ஒரு காதல் பாடலில் பதிவுசெய்ய வாய்ப்பு கிடைத்தது. அது எந்தப் பாடல் தெரியுமா?

காதலில் இருந்து பிரிக்கவே முடியாத ஓர் உணர்ச்சி... சோகம்.

ஒரு காதல் தொடங்கும்போது எப்படி மகிழ்ச்சியின் உச்சத்துக்கு நம்மைக் கொண்டுபோகுமோ, அதேபோல அது பிரியும்போது சோகத்தின் பாதாளத்துக்குள் நம்மைப் புதைத்துவிட்டுப் போகும். காதல் வரும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் உணர்ச்சி வெளிப்படுவதைப்போல, அது பிரிய நேரும்போதும் அந்த உணர்ச்சி வேறுவேறாக இருக்கும். குறிப்பாக சோகம், கோபம், ஆற்றாமை, தாழ்வுமனப்பான்மை... என வெவ்வேறு உணர்ச்சிகள் வெளிப்படும். இவற்றை எல்லாம் நான் எழுதும் பாடல்களில் எப்படிக் கையாள்கிறேன் தெரியுமா?

11-2-16 முதல் 17-2-16 வரை 044-66802911 * என்ற எண்ணில் அழையுங்கள். காதல் பற்றி என் பாடல்கள் பற்றி நிறையப் பேசலாம்!

அன்புடன்,

மதன் கார்க்கி