Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்
பிரீமியம் ஸ்டோரி
ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

Published:Updated:
ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்
பிரீமியம் ஸ்டோரி
ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்
ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

லும்புகளை உறுதியாகவைத்திருக்க, செய்ய வேண்டியவை என்னென்ன?

டூ-வீலர் ஓட்டினால் முதுகு வலி வருமா?

கர்ப்பிணிகள் பயணங்கள் செய்வது சரியா?

சாலை விபத்தில் நாம் செய்யும் தவறான முதலுதவி என்ன?

சாலை விபத்தில் அடிபட்டவர்களை எப்படிக் காப்பாற்றுவது?

வீட்டில் முதியவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்பு வாசகர்களே!


பிப்ரவரி 16 முதல் 22-ம் தேதி வரை தினமும் 044-66802904* என்ற எண்ணுக்கு போன் செய்தால், எலும்பு மூட்டுகளில் ஏற்படும் பாதிப்புகள், தீர்வுகள் பற்றியும் முதலுதவி செய்வது எப்படி என்பது பற்றியும் விரிவாகப் பேசுகிறார் எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணர் எம்.மணிவண்ணன்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எலும்புகள் உறுதியாக இருந்தால்தான், எந்தவொரு அன்றாட வேலையையும் நம்மால் செய்ய முடியும். எலும்புகளுக்கு நாம் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்பதால்தான், சமீப காலமாக எலும்பு அடர்த்தி குறைவு உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துவருகின்றன. ஆஸ்டியோபொரோசிஸ், ஆஸ்டியோமலேசியா (Osteomalacia) போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, எலும்புகளை உறுதியாக வைத்திருக்க வேண்டும். எலும்புகளை உறுதிப்படுத்தும் உணவுகளைச் சாப்பிட்டுவருவதன் மூலமாகவும், வைட்டமின்-டி, சீரான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலமாகவும் எலும்புகளை உறுதிப்படுத்த முடியும்’’ என்கிறார், காவேரி மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவுத் துறைத் தலைவரும் எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணருமான எம்.மணிவண்ணன்.

``நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கும், அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும் பொதுவாகக் காணப்படும் பிரச்னை முதுகுவலி. முதுகுக்குச் சில நிமிடங்கள் முக்கியத்துவம் கொடுத்தாலே முதுகுவலியை விரட்டிவிட முடியும். இதற்கு, அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும். அலுவலகத்திலேயே எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்யலாம். முதுகுத்தண்டை உறுதிப்படுத்தும் பயிற்சிகள் செய்யலாம்’’ என்கிறார் டாக்டர்.

- ப்ரியா புஷ்பராஜ்

படம்: பா.காளிமுத்து

“கண் நலம் என்று வரும்போது, வைட்டமின் ஏ நிறைந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிட்டாலே போதும் எனப் பலரும் நினைக்கின்றனர். இது, நம்முடைய ஊட்டச்சத்து சார்ந்தது. ஆனால், பார்வைத்திறன் எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்வதன் மூலம்தான் கண் குறைபாடுகளைக் கண்டறிய முடியும்.

பொதுவாக, ஐந்து வயது ஆனதுமே குழந்தைகளுக்குக் கண் பார்வை பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்பநிலையிலேயே பிரச்னைகளைக் கண்டறிவதன் மூலம், பிரச்னையைச் சரிசெய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. பிரச்னையைக் கண்டறியாமல் விடும்போது, பார்வைத்திறன் பாதிப்படைய வாய்ப்பு அதிகமாக உள்ளது’’ என்கிறார், கண் நல மருத்துவர் ரம்யா சம்பத்.

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

``கண்ணில் பவர் பிரச்னை உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் இந்த அறுவைசிகிச்சை செய்யப்படும். இதை, `ரெஃப்ராக்டிவ் சர்ஜரி’ என்று சொல்வோம். ஆரம்பத்தில், கண்ணின் கருவிழியை பிளேடால் வெட்டி இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், லேசர் பயன்படுத்தப்பட்டது. எப்படி மற்ற உறுப்புக்களில் சிறு துளையிட்டு அறுவைசிகிச்சை செய்யப்படுகிறதோ, அதுபோல கண்ணில் தற்போது ஸ்மைல் சிகிச்சையை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இதற்கு, முதலில் கண்ணின் கருவிழியின் அமைப்பு எப்படி இருக்கிறது எனப் பரிசோதனை செய்வோம். அதன் பிறகு, கருவிழியில் எந்த அளவுக்கு அகற்ற வேண்டுமோ, அந்த அளவுக்கு அகற்றப்படுகிறது. மிகச்சிறிய அளவில் துளையிடப்படுவதால், ஒரு வாரத்தில் இயல்புநிலைக்குத் திரும்பலாம். இது காஸ்மெட்டிக் சிகிச்சை இல்லை. கப்பல், விமானம், ராணுவம் உள்ளிட்ட பல துறைகளில் வேலைக்குச் செல்பவர்களுக்கு கண்ணின் பவர் குறைந்தது 6/6 என்ற அளவில் இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில், பணியில் சேர முடியாது. இவர்களுக்கு இந்த சிகிச்சை பெரிதும் உதவியாக இருக்கிறது” என்கிறார்.

அன்பு வாசகர்களே!

பிப்ரவரி 23 முதல் 29-ம் தேதி வரை தினமும் 044-66802904* என்ற எண்ணுக்கு போன் செய்தால், கண் நல பிரச்னைகள், தீர்வுகள், கண் அறுவைசிகிச்சையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து விரிவாகப் பேசுகிறார் கண் நல மருத்துவர் ரம்யா சம்பத்

கண் நலனுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

குழந்தைகளுக்கு ஐந்து வயதில் ஏன் கண் பரிசோதனை செய்ய வேண்டும்?

பெரியவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன... அதற்கான சிகிச்சை என்ன?

கண்ணாடி அணிபவர்கள் அனைவருக்கும் ரெஃப்ராக்டிவ் அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுமா?

சர்க்கரை நோய் எப்படி பார்வை இழப்புக்கு முக்கியக் காரணியாக இருக்கிறது?

ஏன் கண் தானம் செய்ய வேண்டும்?

- பா.பிரவீன் குமார்

படம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism