விகடன் வாசகர்களுக்கு, இயக்குநர் பிரம்மாவின் வணக்கம்...

சினிமா, சமூகத்தின் சாளரமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வசித்த மனிதர்கள், அவர்களின் செயல்கள், மொழி, வாழ்க்கைமுறை என அனைத்தையும் பதிவுசெய்யும் முக்கியமான ஒளி ஊடகம் `சினிமா'. ஒருகாலத்தில் கல்வெட்டுகளும் புத்தகங்களும் செய்ததை, இப்போது சினிமா செய்துவருகிறது. ஒரு சினிமா என்பது, இன்னும் எதை எல்லாம் பிரதிபலிக்கிறது தெரியுமா?

என் கல்லூரியில் நடந்த சம்பவம் ஒன்றை, என்னால் இப்போதும் மறக்க முடியாது. பின்னாளில் யார் எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் முதன்முதலில் நாம் பார்த்த வேலையையும் அதன் மூலம் கிடைத்த முதல் ஊதியத்தையும் எவராலும் மறக்க முடியாது. அப்படி முதன்முதலில் நான் பார்த்த வேலை... விகடனில் நிருபராகப் பணியாற்றியது. இன்றும் பெருமைப்படும் அளவுக்கு விகடனில் பணியாற்றிய சுவாரஸ்யமான அனுபவங்களைச் சொல்கிறேன்.

ஒவ்வோர் இயக்குநரும் பார்த்து வியந்த படங்கள்தான் அவர்களை இயக்குநராக வடிவமைக்கும். பல சினிமாக்களின் தாக்கம் எனக்குள்ளும் இருக்கிறது. அப்படி ஒரு தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது தீபா மேத்தா இயக்கிய ‘வாட்டர்’ திரைப்படம். 1940-ம் ஆண்டுகளில் நடந்த விதவைகளின் பிரச்னைகளை மையமாக வைத்து அனுராக் காஷ்யப் எழுதிய இந்தப் படத்தின் திரைக்கதைதான், எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. எனது கல்லூரிக் காலத்தின் இறுதியில் நான் பார்த்த இந்தப் படமும், வேறு ஒரு படமும் என்னை மிகவும் பாதித்தன. இப்படி நான் இயக்குநர் ஆவதற்கான அடிப்படை நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

‘பயணம் ஒண்ணு போதாது’ என்ற நூலை, சமீபத்தில் படித்தேன். கோயம்புத்தூரைச் சேர்ந்த தீபன் என்கிற இளைஞர் எழுதிய நூல் அது. தன் கல்லூரிக் காலத்தை முடித்த ஓர் இளைஞர், வேலையில் சேரும் முன்னர் `இந்தியா முழுவதையும் சுற்றிவரலாம்’ என தன் நண்பருடன் கிளம்புகிறார். அந்தப் பயணத்தில் அவர் கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் அந்த நூல். அதில் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் ஏராளம்.

3-3-16 முதல் 9-3-16 வரை 044-66802911*என்ற எண்ணில் அழையுங்கள். இன்னும் பேசலாம்!

அன்புடன்,

பிரம்மா.