“இதய நோய் என்றால் பலரும் மாரடைப்பை மட்டுமே நினைக்கின்றனர். ஆனால், இதயத்தில், ரத்தக் குழாய், மின்னோட்டம் என இரண்டு வகையான பிரச்னைகள் ஏற்படலாம். இதயத் திசுக்களுக்கு மூன்று ரத்தக் குழாய்கள் வழியாக ரத்தம் பாய்கிறது. இதில், ஏதாவது ஒரு குழாயில் அடைப்பு ஏற்பட்டாலும் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படலாம். இதயம் துடித்தலைத் தூண்டும் மின்னோட்டப் பாதையில் பிரச்னை ஏற்பட்டால், `சடர்ன் கார்டியாக் அரெஸ்ட்’ எனப்படும் திடீர் இதயத் துடிப்பு முடக்கம் ஏற்படலாம்” என்கிறார் ‘மெட்ராஸ் மெடிக்கல் மிஷன்’ மருத்துவமனையின் இதயநோய் மற்றும் எலக்ட்ரோஃபிசியாலஜி நிபுணர் கே.ஜெய்சங்கர்.

``இதயத்தின் பம்பிங் திறனை `எஜெக்ஷன் ஃபிராக்ஷன்’ (Ejection fraction) என்று சொல்வோம். இதயத்தின் பம்பிங் திறன் 55 முதல் 70 சதவிகிதம் இருக்க வேண்டும். மாரடைப்பு ஏற்படும்போது இது குறைந்துவிடும். இது 35-க்கும் கீழ் இறங்கினால் இதயச் செயல் இழப்பு ஏற்படும். அறிகுறிகளைப் புறக்கணித்து, சிகிச்சை எடுக்கத் தவறும்போது, இதயம் மேலும் பலவீனம் அடையும். பலூன்போல வீக்கம் அடையும். இதயத்தின் அமைப்பே மாறிவிடும். பிறகு, பழையநிலைக்குக்கொண்டுவருவது மிகமிகக் கடினம்.

விளைவாக, `சடன் கார்டியாக் டெத்’ எனப்படும் திடீர் மரணம் மற்றும் `ப்ராக்ரெசிவ் பம்ப் ஃபெயிலியர்’ எனப்படும் இதயத்தின் பம்பிங் திறன் குறைந்து கடைசியில் நின்றுவிடுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மாரடைப்பு ஏற்படும்போது இதயத் திசுக்கள் உயிரிழந்து, தழும்புகள் ஏற்படுகின்றன. இதனால், இதயத்தில் மின் உற்பத்தியாகவேண்டிய இடம் தவிர்த்து, தழும்புகள் ஏற்பட்ட இடத்திலும் மின் உற்பத்தியாகி இதயம் திடீரென அதிவேகமாகத் துடிக்க ஆரம்பிக்கும். இதற்கு `வென்ட்ரிக்குலார் டேக்கிகார்டியா (Ventricular tachycardia)’ எனப் பெயர். வேகமாகத் துடிக்க ஆரம்பித்த இதயம், ஒரு கட்டத்தில் துடிப்பதையே நிறுத்திவிடும். இதற்குத் தீர்வாக வந்திருப்பதுதான் பேஸ்மேக்கர் டிஃபிளேட்டர். தீப்பெட்டி அளவு இருக்கும் இதன் மூலம் சீரற்ற இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தலாம்’’ என்கிறார் டாக்டர்.

இதயத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

இதயத்தின் செயல்திறன் குறைய என்ன காரணம்?

இதயத்தின் பம்பிங் திறன் குறைந்தால் ஏற்படும் பாதிப்பு என்ன?

சீரான இதயத் துடிப்புக்கான சிகிச்சைகள் என்னென்ன?

இதயம் காக்கச் செய்யவேண்டியவை என்னென்ன?

அன்பு வாசகர்களே!

மார்ச் 16 முதல் 23-ம் தேதி வரை தினமும் 044-66802904* என்ற எண்ணுக்கு போன் செய்தால், இதயத் துடிப்பு நோய், சீரான இதயத் துடிப்புக்கு நவீன சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக பேசுகிறார்இதயநோய் மற்றும் எலக்ட்ரோஃபிசியாலஜி நிபுணர் கே.ஜெய்சங்கர்

“வலிப்பு நோய் பற்றி பல தவறான புரிதல்கள் உள்ளன. வலிப்பு என்பது மூளை நரம்பு செல்களில் அதிக மின் அதிர்வு ஏற்படுவதால், மூளையில் ஏற்படும் பாதிப்பு. மூளை நரம்புகள் பலவீனமாக இருப்பவர்களுக்கு இது சாதாரணமாக ஏற்படும். இதற்காக, பயப்படத் தேவை இல்லை. வலிப்பைக் கட்டுப்படுத்த, தற்போது மாத்திரை, மருந்துகள் நிறைய வந்துள்ளன. வலிப்பு ஏற்பட்ட 24 மணி நேரத்துக்குப் பிறகும் கை, கால்கள் இயல்புநிலைக்குத் திரும்பாமல் இருந்தாலோ, வாந்தி ஏற்பட்டாலோ, பார்வை மங்குதல் போன்ற பிரச்னை இருந்தாலோ உடனே நரம்பியல் மருத்துவரைப் பார்க்க வேண்டும். மூளை, கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதன் அறிகுறி இது. சிலருக்கு அறுவைசிகிச்சைகூட செய்யவேண்டி இருக்கும்’’ என்கிறார், மூளை, நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் மோகன் சம்பத்குமார்.

``நரம்பு தொடர்பான பிரச்னைகளில் குறிப்பிடத்தக்கவை தலைவலி மற்றும் கழுத்துவலி. பொதுவாக, தலைவலி ஏற்பட சைனஸ் பிரச்னை, குளிர்காலம், குளிர்ப் பிரதேசங்களில் வசித்தல் போன்ற நிறையக் காரணங்கள் உள்ளன. ஒற்றைத் தலைவலி, வாந்தி, அதிகாலைத் தலைவலி போன்ற பிரச்னைகள் இருந்தால் பரிசோதித்துக்கொள்வது அவசியம். மைக்ரேன் தலைவலி இருந்தாலும் இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படும். எனவே, பரிசோதித்து அது மூளை தொடர்பான பிரச்னையா, மைக்ரேனா என அறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

அதுபோலவே, இன்றைய நவீன வாழ்வில் கழுத்துவலி பலருக்கும் ஏற்படுகிறது. பொதுவாக கழுத்துவலிக்கும் ஸ்ட்ரெஸ், கழுத்து எலும்பு தேய்தல், சவ்வு பலவீனமாதல் எனப் பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு, கழுத்து எலும்பு தேய்தல் அல்லது சவ்வு பலவீனமாதல் பிரச்னையால் கழுத்துச் சதை பலவீனமாகி கழுத்தில் உள்ள நரம்புகளை அழுத்துவதால், கழுத்துவலியோடு கை, கால் வலி, கை ஒற்றைவிரலில் வலி ஏற்படும். இதை எக்ஸ்ரே, ஸ்கேன் மூலம் கண்டறிந்து சிகிச்சை தர வேண்டும்” என்கிறார் டாக்டர்.

தலைக்காயங்களால் மூளை பாதிக்கப்படுவதன் அறிகுறிகள் என்னென்ன?

வலிப்பு நோய் என்றால் என்ன?

தலைவலி, கழுத்துவலி நரம்பு மண்டல பாதிப்பின் அறிகுறியா?

பிறவியில் ஏற்படும் நரம்பு மண்டல பிரச்னைகள் என்னென்ன?

மூளையில் கட்டி இருப்பதன் அறிகுறிகள் என்னென்ன... தீர்வு என்ன?

அன்பு வாசகர்களே!

மார்ச் 24 முதல் 31-ம் தேதி வரை தினமும் 044-66802904* என்ற எண்ணுக்கு போன் செய்தால், நரம்பு மண்டலப் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார், மூளை, நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் மோகன் சம்பத்குமார்

- பா.பிரவீன் குமார்,இளங்கோ கிருஷ்ணன்,

படம்: மீ.நிவேதன்

*அழைப்பு சாதாரணக் கட்டணம்