Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“உடலின் மிகப்பெரிய தொழிற்சாலை, கல்லீரல். நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் சத்துக்களைக் கிரகித்து உடலுக்கு அனுப்புவதும், உணவில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதும் கல்லீரல் செய்யும் முக்கியமான பணிகள். மஞ்சள்காமாலை, ஹெபடைட்டிஸ் வைரஸ்கள், ஃபேட்டி லிவர், `லிவர் சிரோசிஸ்’ எனப்படும் கல்லீரல் சுருக்கம் போன்ற கல்லீரல் பாதிப்புகள் இன்று பரவலாகக் காணப்படுகின்றன. கல்லீரலில் ஏற்படும் சிறுசிறு பாதிப்புக்கள் நமக்கு நேரடியாகத் தெரியாது. பெருமளவு கல்லீரல் பாதிக்கப்பட்ட பின்னர்தான் பிரச்னை வெளிப்படும். எனவே, நாம் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். 40 வயதைத் தாண்டியவர்கள், மது அருந்துபவர்கள் கல்லீரல் செயல்திறன் அறியும் பரிசோதனையை ஆண்டுக்கு ஒரு முறை செய்துகொள்வது நல்லது” என்கிறார், கல்லீரல் சிறப்பு அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் முருகன். 

“கல்லீரலைப் பாதிக்கும் சில வைரஸ்களுக்கு, இப்போது  தடுப்பூசிகள் உள்ளன. இவற்றை ஒவ்வொருவரும் போட்டுக்கொள்வதன் மூலம் இதன் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். கல்லீரல் பாதிப்பு ஏற்பட முக்கியக் காரணமாக இருப்பது மதுப்பழக்கம். மதுவில் உள்ள ஆல்கஹால் கல்லீரலைச் சிதைக்கும். தொடர்ந்து அதிக அளவு மது அருந்தும்போது, கல்லீரலின் செயல்திறன் பாதிக்கப்படும். ஒரு கட்டத்தில் கல்லீரல் சுருக்க நோய் வந்துவிடும். கல்லீரல் சுருக்க நோய் முற்றியநிலையில் கல்லீரல் செயலிழந்துவிடும். ஒருவேளை கல்லீரல் செயலிழந்துவிட்டால், கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே தீர்வாக நேரிடும். எனவே, மதுவைத் தவிர்ப்பதும், ஆண்டுக்கு ஒரு முறையாவது கல்லீரல் பரிசோதனை செய்துகொள்வதும் கல்லீரலைக் காக்கும்” என்கிறார் டாக்டர்.

கல்லீரலின் பணிகள் என்னென்ன?

மஞ்சள்காமாலை ஏன் ஏற்படுகிறது?

ஹெபடைட்டிஸ் வைரஸ்களைத் தடுப்பது எப்படி?

ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு என்ன தீர்வு?

கல்லீரல் சிரோசிஸ் எதனால் வருகிறது?

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையால் பலன் உண்டா?

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அன்பு வாசகர்களே ஏப்ரல் 1 முதல் 7-ம் தேதி வரை 044-66802904* என்ற எண்ணுக்கு தினமும் போன் செய்தால் கல்லீரலில் ஏற்படும் பிரச்னைகள், தவிர்க்கும் வழிகள், தீர்வுகள் குறித்து விரிவாகப் பேசுகிறார் கல்லீரல் அறுவைசிகிச்சை நிபுணர் முருகன்

“மூக்கடைப்பை பலர் சாதாரணமாக நினைக்கிறோம். தூக்கமின்மைப் பிரச்னைக்கு மூக்கடைப்பும் ஒரு காரணம்தான். மூக்கடைப்பு இருந்தால் சரியாகத் தூங்க முடியாது. நாள்பட்ட மூக்கடைப்பு பிரச்னை இருப்பின், தூக்கத்தைப் பாதித்து ரத்த அழுத்தம், இதய நோய் ஆகியவை வரலாம். மூக்கடைப்புக்குத் தாங்களாகவே சுயமருத்துவம் செய்துகொள்வது தவறு. மூக்கடைப்புப் பிரச்னை, வாசனை நுகரும் திறனைப் பாதிக்கலாம். எனவே, எதனால், மூக்கடைப்பு அடிக்கடி வருகிறது எனக் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. 30-40 சதவிகித மூக்கடைப்புப் பிரச்னை வெறும் உடற்பயிற்சி செய்வதாலேயே குணமாகிவிடும்” என்கிறார் காது, மூக்கு, தொண்டை அறுவைசிகிச்சை நிபுணர் என்.பி.கார்த்திகேயன்.

“நவீனத் தொழில்நுட்பக் காலத்தில் குழந்தைகள் எலெக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. ‘குழந்தைகள் அதிகமாக எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் பயன்படுத்துவதால், மூளை பாதிக்கிறது’ என ஆய்வுகள் சொல்கின்றன. `ஒரு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்  கேட்ஜெட்ஸ்  பயன்படுத்தும்போது, மூளையின் செயல்பாட்டில் ஒரு மணி நேரத்துக்கு கேட்ஜெட்ஸால் ஏற்பட்ட அதிர்வுகளின் தாக்கம் நீடிக்கிறது’ என்கின்றனர் வல்லுநர்கள். இப்படி, குழந்தைகள் விர்ச்சுவல் உலகில் இருப்பதால், தூக்கம், மனநிலை, பேச்சுத்திறன் பாதிக்கப்படலாம். முக்கியமாக, கருவில் இருக்கும் சிசுவுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கேட்ஜெட்ஸை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

இன்றைக்கு உலகமே சந்திக்கும் முக்கியப் பிரச்னை, ஆன்டிபயாடிக் ரெசிஸ்டென்ஸ். சாதாரணமாக தொண்டை வலி வந்தாலே,  தொண்டையில் தொற்று என ஆன்டிபயாட்டிக் வாங்கிச் சாப்பிடுகின்றனர். இது தவறு. தொண்டை வலி அனைத்துமே தொற்று ஆகாது. நாம் உண்ணும் உணவுகூட ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்கலாம். சாப்பிடாமல் வேலை செய்வது, நேரம் தவறிச் சாப்பிடுவது, ஒவ்வாத உணவுகளைச் சாப்பிடுவது, தூங்காமல் இருப்பது, புகை, மது, குளிர்பானங்கள் அருந்துவது போன்றவற்றால் அசிடிட்டி ஏற்படலாம். உணவு முறை, சாப்பிடும் முறை, உடற்பயிற்சி, சுகாதாரம் ஆகியவற்றைச் சரிவரப் பாதுகாத்துவந்தால் தொண்டை வலி வருவதற்கான காரணங்கள் குறையும்” என்கிறார் டாக்டர்.

காது, மூக்கு, தொண்டையைப் பராமரிப்பது எப்படி?

மூக்கு எலும்பு கோணலாக இருந்தால் தலைவலி வருமா?

தொண்டை வலிக்கு என்ன தீர்வு?

இயர்போன்களால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

காதுகளில் எறும்பு, பூச்சிகள் சென்றுவிட்டால் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

அன்பு வாசகர்களே ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 15 வரை 044-66802904* என்ற எண்ணுக்கு போன் செய்தால் காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகப் பேசுகிறார் ஈ.என்.டி அறுவைசிகிச்சை நிபுணர் என்.பி.கார்த்திகேயன்

- பு.விவேக் ஆனந்த், மினு

படம்: சொ.பாலசுப்ரமணியன், ப.சரவணகுமார்