Published:Updated:

"உங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே பெற வேண்டும்!”

"உங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே பெற வேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
"உங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே பெற வேண்டும்!”

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்மு.பார்த்தசாரதி, படங்கள்: தி.குமரகுருபரன், ஆ.முத்துக்குமார், க.பாலாஜி, மீ.நிவேதன், தே.அசோக்குமார்

ங்கு பறக்கும் வண்ணப்பறவை
எங்கு இருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்...

இளைஞர்களின் எவர்கிரீன் சாங் இது. `ஜாலி மட்டுமல்ல... களத்தில் இறங்கிவிட்டால் நாங்க வேற லெவல்’ என இளமையைக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கவைக்கும்  இந்த ‘கனாக் காலங்கள்’ காலத்தால் என்றும் அழியாதவை. அப்படியொரு கெத்தானப் பயணத்தை மாணவர்களுக்குக்கொடுத்து அவர்களை இருகரம் நீட்டி வழிகாட்டுவது, விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம். தமிழகத்தின் பல்வேறு தளங்களிலிருந்து வந்து இன்று பெருமைக்குரியவர்களாக விளங்கும் பலருக்கும் விகடன்தான் வேடந்தாங்கல்.

"உங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே பெற வேண்டும்!”

விகடன் மாணவப் பத்திரிகையாளர்களுக் கான பயிற்சி முகாம் கடந்த ஜூலை 21, 22, 23 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.

“சாட்டிலைட்டிலேயே தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய, பேருந்து வசதிகூட இல்லாத ஒரு கிராமத்திலிருந்து விகடனை மட்டுமே படித்து வெளியுலக அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு வந்தவள்தான் நான். அப்போது, பெண் பத்திரிகையாளர்கள் குறைவாகத்தான் இருந்தார்கள். இப்போதும் ஓரளவுக்குத்தான் இருக்கிறார்களே தவிர, இன்னும் நிறையப் பெண்கள் தயக்கத்துடன் வெளியேதான்  இருக்கிறார்கள்’’ என ஆதங்கத்தோடு பேச ஆரம்பித்தார் நியூஸ் 7 தொலைக்காட்சியின் சிறப்புச் செய்தியாளர் சுகிதா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
"உங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே பெற வேண்டும்!”

`‘நாம் பெண்ணாயிற்றே... எதில் கவனம் செலுத்தினால் சிறந்து விளங்க முடியும் என்ற கேள்வி உங்களுக்குள் எழும். பெண் என்றாலே சமையல் குறிப்புகள், ஃபேஷன், ஆன்மிகம் என்று நினைக்கத் தேவையில்லை. அரசியல் சார்ந்த சூழலும், தைரியமாக இயங்க முடியும் என்ற நம்பிக்கையும் உங்களுக்கு வர வேண்டும். உங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே பெற வேண்டும். நீங்கள் மக்களின் நம்பிக்கைக்குரிய தளத்தில் இயங்கப்போகிறீர்கள். பாதிக்கப்பட்ட மக்களா அல்லது அதிகார வர்க்கமா என்கிற நிலை வரும்போது, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் துணிந்து நில்லுங்கள். அதுதான் உங்களை உயிர்ப்போடு வைத்திருக்கும்’’ என்றார் சுகிதா.

"உங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே பெற வேண்டும்!”

கடந்த ஆண்டு உடுமலைப்பேட்டையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா இப்போது சாதி ஒழிப்புப் போராளியாக உருவெடுத்திருக்கிறார்.

 “இருபது வயதில் என் வாழ்நாளின் மகிழ்ச்சி கரமான நாள்களைத் தொலைத்துவிட்டு, ஒரு போராட்டப் பயணத்துக்கான துரும்பாக இந்த மேடையில் நின்றுகொண்டிருக்கிறேன். சங்கர் என்னைவிட்டுப் பிரிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. சங்கருக்கான நீதியாக நான் கேட்பது, ஆணவக்கொலைகளுக்கு எதிரான சட்டம் இயற்றப்படுவது ஒன்றுதான். அது கிடைக்கும்வரை என் போராட்டம் தொடரும்’’ என ஆக்ரோஷமாக முழங்கினார் கௌசல்யா.

மூன்றாம் நாள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம், ``திரைப்படங்களில் பெண்கள் பயன்படுத்தப்படும் விதம் குறித்து உங்கள் பார்வை என்ன?’’ என்று நம் புதிய பத்திரிகையாளர்கள் கேட்டார்கள்.

``முன்பெல்லாம் திரைப்படங்களில் வரும் பெரும்பாலான ஆண் கதாபாத்திரங்கள் பெண்களைத் திட்ட மாட்டார்கள். தன் அம்மாவை, சகோதரியை, மற்ற பெண்களைத் திட்டுவதாக பெரும்பாலும் காட்சிப்படுத்த மாட்டார்கள். இப்போதோ பெண்ணைத் திட்டினால் கை தட்டுகிறார்கள். ‘அடிடா அவள, திட்றா அவள, வெட்றா அவள’ என சகஜமாகப் பாடுகிறார்கள். இதெல்லாம் சமூகத்தில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் தொடர்ந்து தவறு செய்கிறார்கள். சமூகப் பொறுப்புள்ள கலைஞர்கள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்’’ என்று அக்கறையாகப் பதில் அளித்தார் இயக்குநர் முருகதாஸ்.

பூக்களை மொய்க்கும் வண்டுகளைப் போலவே திகட்டாத சிந்தனைகளைப் பருகிச் சென்றார்கள் நம் மாணவக் கண்மணிகள்!

கடந்த ஆண்டின் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் பங்காற்றி, தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளராகத் தேர்வான மாணவிகள்

"உங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே பெற வேண்டும்!”

ஜெ.நிவேதா, தஞ்சாவூர்

‘`இஞ்சினியரிங் படிச்சுட்டிருந்த நான், அது பிடிக்கலைனு ஒரு வருஷத்திலேயே விஸ்காமுக்கு மாறிட்டேன். ‘அப்பா, அம்மா பேச்சை மீறி விஸ்காம் வந்துட்டோமே. இனி என்ன பண்ணப்போறோம்’னு நினைச்சுட்டிருந்தப்போ விகடன் எனக்கான பிளாட்பார்மைக் கொடுத்துச்சு. ஆரம்பத்தில் ஒரு பத்திரிகையாளரா எப்படிச் செயல்படப்போறோம்னு ரொம்ப பயமா இருந்துச்சு. என் பயத்தை உடைச்சு எனக்கான அங்கீகாரம் கொடுத்த விகடனுக்கு நன்றி!’’

"உங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே பெற வேண்டும்!”

வெ.வித்யா காயத்ரி, கோவில்பட்டி

‘`இயல்பாவே நான் தைரியமான பொண்ணு. ‘உனக்குப் பிடிச்ச துறையில் நீ சாதிச்சு காட்டு’னு அப்பா அடிக்கடி சொல்வார். நம்பிக்கையோடு வந்த எனக்குப் பத்திரிகை உலகத்தைப் பற்றி தெரிஞ்சிக்கக் காரணம் விகடன்  தான். பல வலிகளையும் கடந்து இன்னைக்குச் சாதிச்சிருக்கேன். என் தன்னம்பிக்கை இரட்டிப்பாகி இருக்கு!’’

"உங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே பெற வேண்டும்!”

ஆ.ஐஸ்வர்யா லட்சுமி, சென்னை

“விகடனுக்குள்ள வரனும்ங்கிறது என்னோட மிகப்பெரிய கனவு. தனியாக சைக்கிளில்கூட அப்பா என்னை வெளியே அனுப்பியதில்லை. ஆனால், விகடனுக்குள் வந்த பிறகு புதிதாக ஸ்கூட்டி வாங்கி கற்றுக்கொடுத்தார். ஒரு வருடம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பல சவால்களையும் கடந்து வந்திருக்கிறேன். அதற்கான பலன் இன்று கிடைத்திருக்கிறது. எல்லா புகழும் விகடனுக்கே!”