`வரப் பிரசாதம்!'

அட்டைப் படத்தை அலங்கரித்த அம்மனின் அருள்கோலம், எங்கள் உள்ளத்தைக் கொள்ளைகொண்டது. சமயபுரம் மாரியம்மனின் வண்ணப்படம் எங்களுக்கான வரப்பிரசாதம்!
- சீ.கீர்த்தனா, வேலூர்
`வருவாள் அருள்வாள் வேப்பிலைக்காரி' அம்மன் மகிமைகள் குறித்த தொகுப்பு, பல அரிய தகவல்களை அளித்தது. கோமதியம்மன் நிகழ்த்திய அருளாடலைப் படித்துச் சிலிர்த்தோம்.
- எம்.லலிதா, தூத்துக்குடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பெரியபாளையத்தம்மன், வலுப்பூரம்மன், சமயபுரம் தகவல்கள் அடங்கிய இணைப்பிதழ்... ஒவ்வொன்றும் ஆடிமாதத்தின் அற்புதம்!
- கே.கல்யாணம், சென்னை-44
வடமலையப்பப் பிள்ளையின் தமிழ்ப்பற்றையும், திருவருள் நிரம்பிய அவரின் வாழ்வையும் அற்புதமாக விவரித்திருந்தார் சொல்லின்செல்வன் பி.என்.பரசுராமன்.
- சி.சுபா, மேலூர்
ரங்க ராஜ்ஜியம், மகாபெரியவா, சிவமகுடம் ஆகிய தொடர்கள், சக்திவிகடனின் மணிமகுடத்தில் முத்துகள்!
- எஸ்.ராமு, கோவை-2