தமிழக மக்களின் மனசாட்சியாக விளங்கும் ஊடகத்தின் அறநெறிகளை, அடுத்த தலைமுறை ஊடக உலகுக்கு எடுத்துச் சென்றது விகடனின் ‘மாணவப் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சித் திட்டம்.’ சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்துகொள்ள உதவும் அரசியல், பத்திரிகை, சினிமா உலகின் பிரபலங்களுடனான சந்திப்பு ஒருபுறம், ஒரு செய்தியை 360 டிகிரி பார்வையில் அணுகத் தேவையான `ஸ்மார்ட்’ பயிற்சி வகுப்புகள் மறுபுறம் என, புதிய தலைமுறையின் மனங்களில் நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சின மூன்றுநாள் நிகழ்ச்சிகளும். பயிற்சி முகாமின் கலக்கல் தருணங்கள் இதோ...

விகடன் குழுமத்தில் இணைந்த `கடைக்குட்டி சிங்கங்களை’ வரவேற்று, விகடன் ஆசிரியர் பா.சீனிவாசனின் தன்னம்பிக்கையூட்டும் உரையுடன் தொடங்கியது பயிற்சித் திட்டம்.

`கியாரே... சிட்டிங்கா?’ என்ற ‘ஐஸ் பிரேக்கிங்’ நிகழ்ச்சியின் மூலம் உற்சாகமூட்டினார்கள் பயிற்சியாளர்கள் கவிதா மற்றும் ஷோபனா.தற்போதைய சூழலில் ஊடகத்தின் பங்களிப்பு, கடமை குறித்தும் தமிழகத்தின் முக்கியமான ஊடகவியலாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள்.

``யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ளக் கூச்சப்படக் கூடாது. கற்றுக்கொள்ளும் ஆற்றல்தான் வளமிக்க சமூகத்தை உருவாக்கும். மக்களுக்கு, இன்று எல்லா விஷயங்களைப் பற்றியும் அறிவு உள்ளது. ஊடகவியலாளர்களாக உருவாகவுள்ள நீங்களும் அரசியல், விளையாட்டு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களைப் பற்றியும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்’’ என, பத்திரிகையாளர்களின் அடிப்படைக் கடமைகளைப் பற்றி விரிவாகப் பேசினார் பத்திரிகையாளர் ஆர்.மணி.

``அச்சு ஊடகங்கள்தான் அனைத்துக்குமான அடிப்படை. அதற்கு என்றுமே அழிவு கிடையாது. எந்த ஒரு பிரச்னை நடந்தாலும் அதற்குப் பின்னால் உங்கள் ரோல் என்ன என்பதைச் சிந்தித்தால், நீங்கள் சிறந்த பத்திரிகையாளர் ஆகலாம்’’ என அச்சு ஊடகத்தின் சிறப்புகுறித்துப் பேசினார் `ஃப்ரன்ட் லைன்’ ஆசிரியர் விஜய்சங்கர்.

``தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமே பத்திரிகையாளனுக்கான அடிப்படை. நம்மால் ஒரு சாமானியன் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமானால், அதுதான் ஓர் ஊடகவியலாளரின் வெற்றி’’ என, காட்சி ஊடகத்தின் பங்களிப்பைப் பற்றிப் பேசினார் `டைம்ஸ் நவ்’ சேனலின் ஷபீர் அகமது.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் குறித்தும், பொறுப்புணர்வுகள் குறித்தும் `கலக்கப்போவது யாரு?’ டீமுடன் ஜாலியான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி, சிரிப்பலைகளுக்கு மத்தியில் ஆரோக்கியமான கருத்துப் பகிர்வாகவும் அமைந்திருந்தது.

``பேனாவைப்போலவே கேமராவும் பத்திரிகையில் ஓர் ஆயுதம்தான். புகைப்படங்களின் அழகை, அந்தப் படத்தின் `சப்ஜெக்ட்’தான் முடிவுசெய்கிறது. புகைப்படங்கள்தாம் காலம் கடந்தும் நிற்கும்’’ என்று பத்திரிகை வரலாற்றில் முக்கியமான `க்ளிக்’களைப் பற்றிப் பேசிய புகைப்படக்கலைஞர் செல்வ பிரகாஷ், புகைப்படக் கலையின் தொழில்நுட்ப உத்திகள் குறித்துச் சிறப்புப் பயிற்சியளித்தார்.

கலைகளின் மூலம் மக்களுக்குத் தேவையான அரசியலை, கருத்துகளைக் கொண்டுசேர்க்கும் `கலகலப்பான’ கலை நிகழ்ச்சியை நடத்தினர் `புதுகை பூபாளம்’ குழுவினர்.

``பொதுப்புத்தியின் சிக்கல்களை உடைப்பதுதான் பத்திரிகையாளரின் அடிப்படை. அவர்கள் காலத்தின் தேவையை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும்’’ என, தனது உரையின் மூலம் எனர்ஜி டானிக் ஏற்றினார் `நீயா, நானா?’ கோபிநாத். அவருடன் காட்சி ஊடகத்தின் நிகழ்ச்சிகள் குறித்த கலந்துரையாடலும் நடைபெற்றது.

தொழில்நுட்ப யுகத்தின் `பிக் பாஸா’ன மொபைலை வைத்து மட்டுமே செய்யும் `மொபைல் ஜர்னலிசம்’ குறித்த பயிற்சி வகுப்பு எடுத்தார் மணிகண்ட பூபதி. தரத்துடன் செய்தியின் வீரியமும் குறையாமல் வீடியோ மற்றும் எடிட்டிங் ஆகியவை குறித்து `ஸ்மார்ட்’டாக நடந்தது பயிற்சி வகுப்பு.

தொல்.திருமாவளவன், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரின் கலந்துரையாடலோடு, சமூகநீதி, மக்கள் திட்டங்கள், அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் `மீம்’கள் போன்றவை குறித்த காரசாரமான உரையாடலும் நடந்தது.

சர்ப்ரைஸ் நிகழ்வாக, மாணவப் பத்திரிகையாளர்களுக்கு அமைந்தது `ஜுங்கா’ ஸ்பெஷல் ஷோ. அந்தப் படத்தின் இயக்குநர் கோகுல் மற்றும் தயாரிப்பாளர் அருண் பாண்டியன் உடனான கலகலப்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் கோகுல். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் அருண் பாண்டியன். சினிமா விமர்சனங்கள் பற்றியும், அதன் தாக்கம் மற்றும் நம்பகத்தன்மை பற்றியும் கலந்துரையாடல் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு, மீத்தேன், ஸ்டெர்லைட் என, தமிழகம் அடுத்தடுத்து பல போராட்டங்களைச் சந்தித்துள்ளது. போராட்டங்களின் தன்மை மற்றும் தேவை குறித்து, மீத்தேன் திட்டத்துக்கு எதிரான போராட்டக் குழுவை ஒருங்கிணைத்த பேராசிரியர் ஜெயராமன், விரிவாகப் பேசினார்.

அரசின் திட்டங்களுக்குச் செலவுசெய்யும் பணம் குறித்த தகவல்களைக் கேட்டுப் பெறுவது குறித்தும், பத்திரிகை உலகச் சவால்கள் குறித்தும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் பேசினார்.

பொருளாதாரம் குறித்த செய்திகள் மற்றும் தகவல்களைச் சேகரிப்பதிலும் செய்தியாக்குவதிலும் உள்ள நுட்பங்கள் குறித்து ஆழமாகப் பேசினார் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன். அரசின் திட்டங்கள் குறித்து ஆதாரமான தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களைப் பெறும் ஆர்.டி.ஐ குறித்தும் பயனுள்ள கலந்துரையாடலாக அது அமைந்தது.

கடந்த ஆண்டு மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறப்பான முறையில் செயல்பட்ட மா.அருந்ததி, சி.ரவிக்குமார், ப.தினேஷ்குமார் மற்றும் இரா.வாஞ்சிநாதன் ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அவர்கள், தங்களின் அனுபவங்களை உற்சாகத்தோடு புதிய மாணவப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர்.

விகடனின் மூத்த பத்திரிகையாளர்களின் பயிற்சி வகுப்புகளும் கலந்துரையாடல்களும், மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும்விதத்தில் அமைந்தன.

`ஸ்மார்ட்’ பத்திரிகையாளர்கள் தங்களை மேலும் ஸ்மார்ட்டாக்கிக்கொள்ள உத்வேகம் அளித்தது இந்தப் பயிற்சி முகாம். தங்கள் கனவுகளை நெருங்கும் பூரிப்பை, மாணவப் பத்திரிகையாளர்களின் முகத்தில் பார்த்து, பெருமிதத்துடன் சிரித்தார் விகடன் தாத்தா!