Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

தண்டோரா

இலவசப் பயிற்சிகள்

பால் பொருள்கள் தயாரிப்பு

சென்னையை அடுத்த அலமாதி, கொடுவெளியில் உள்ள தமிழ்நாடு உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆகஸ்ட் 30-ம் தேதி ‘மதிப்பூட்டிய பால் பொருள்கள் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94451 99034.

மீன் வளர்ப்பு

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 23-ம் தேதி ‘தென்னை, பாக்கு மற்றும் மா மரங்களுக்கேற்ற ஊட்டச்சத்து மேலாண்மை’, 28-ம் தேதி ‘எண்ணெய்வித்துப் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை’, 29-ம் தேதி ‘மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

கறவைமாடு வளர்ப்பு

திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ள‌து. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0451 2460141.

சுருள்பாசி வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி ‘சிப்பிக் காளான் மற்றும் பால் காளான் வளர்ப்பு’, 21-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 23-ம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’, 28, 29 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணை அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.

விரால் மீன் வளர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 15, 16-ம் தேதிகளில் ‘பண்ணைக்குட்டை அமைப்பு மற்றும் பராமரிப்பு’, 20, 21-ம் தேதிகளில் ‘சோயா மதிப்புக்கூட்டல்’, 23, 24-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த முறையில் நெல் சாகுபடி’, 28, 29-ம் தேதிகளில் ‘விரால்மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

இலவசப் பயிற்சிகள்

நாட்டுக்கோழி வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.

கட்டணப் பயிற்சிகள்

நாட்டுக்கோழி வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆகஸ்ட் 27-ம் தேதி ‘பசுந்தீவனச் சாகுபடி தொழில்நுட்பம்’ பயிற்சி இலவசப் பயிற்சியாக நடைபெற உள்ளது.

மேலும், ஆகஸ்ட் 20-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு முறைகள்’, 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 29-ம் தேதி ‘பழங்களில் மதிப்புக்கூட்டல்’, 30-ம் தேதி ‘நாற்றங்கால் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்’ ஆகியவை கட்டணப் பயிற்சியாக நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

ஒருங்கிணைந்த பண்ணை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகே உள்ள குடும்பம் - கொழிஞ்சி பண்ணையில் ஆகஸ்ட் 24, 25, 26-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. பயிற்சிக் கட்டணம் ரூ.600. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0431 2331879, செல்போன்: 98424 33187.

காளான் வளர்ப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஆகஸ்ட் 24-ம் தேதி ‘மாடித்தோட்ட தொழில்நுட்பம்’, 27-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 28-ம் தேதி ‘சிறுதானிய வகைகளில் மதிப்புக்கூட்டல்’, 29-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் 150 ரூபாய்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

வெண்பன்றி வளர்ப்பு

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 21-ம் தேதி ‘வெண்பன்றி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சிக் கட்டணம் ரூ.100.

தொடர்புக்கு, செல்போன்: 63811 01932.

அசோலா வளர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி ‘அசோலா வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.