Published:Updated:

தெர்ல மிஸ்!

தெர்ல மிஸ்!
பிரீமியம் ஸ்டோரி
தெர்ல மிஸ்!

தெர்ல மிஸ்!

தெர்ல மிஸ்!

தெர்ல மிஸ்!

Published:Updated:
தெர்ல மிஸ்!
பிரீமியம் ஸ்டோரி
தெர்ல மிஸ்!
தெர்ல மிஸ்!

“நவீன இலக்கியம் பற்றிய புரிதலும் வாசிப்பும் இன்றைய இளைஞர்களுக்கு குறைவாகவே இருக்கிறது” என்று ஓர் எழுத்தாளர் பேட்டியொன்றில் சொன்னதைக் கேட்க நேர்ந்தது. என் வயது 26. நான் சமீபத்தில்தான் வாசிப்பைத் தொடங்கியிருக்கிறேன். நவீன இலக்கியம் என்றால் என்ன?  எந்தெந்த எழுத்தாளர்களைப் படிக்கலாம்?

​- குணசேகரன், விருதுநகர்

தெர்ல மிஸ்!

“நவீனகாலத்தைப் பேசுவது நவீன இலக்கியம் என்று சொல்லலாம். நாம் வாழும் காலத்தின் சமூகப்பிரச்னைகளையும் தனிமனித வாழ்வு, மனித உறவுகள் பற்றியும்  எழுதுவதெல்லாம் நவீன இலக்கியமே. உலகில்,தொழிற்புரட்சிக்குப் பிறகான காலம் நவீன காலமாக கூறப்படுகிறது.வாசிக்க வேண்டிய எழுத்தாளர்கள் என புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், அம்பை, இன்குலாப், கந்தர்வன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ஆதவன் தீட்சண்யா, கரன்கார்க்கி என ஒரு நூறு பேரை சொல்ல முடியும்”

- ச.தமிழ்செல்வன், எழுத்தாளர்

தெர்ல மிஸ்!

“ஐயா,எனக்கு 35 வயது ஆகிறது. சென்ற வருடம் 10வது பாஸ் செய்தேன். இதற்கு மேல் என்ன படிக்கலாம்?அல்லது என்ன செய்தால் நன்றாக இருக்கும்?தெளிவுபடுத்த வேண்டுகிறேன்”

- சரிதா சீனிவாசன்,கிருஷ்ணகிரி.

தெர்ல மிஸ்!

“நீங்கள் படிக்க விரும்பும் துறையைக் குறித்து இதில் நீங்கள் குறிப்பிடவில்லை. பொதுவான கேள்வியாக இதை எடுத்துக்கொண்டு, பதிலளிக்கிறேன். பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி, விரும்பிய பட்டப்படிப்புக்கு முயற்சி செய்யலாம். தொழிற்கல்வி சார்ந்த படிப்பில் விருப்பம் இருந்தால், அதை இப்போதே தொடங்க முடியும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தாலே, பல வகையான தொழிற்கல்வி பயிற்சிகள் அளிப்பதற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களே முன்வருகின்றன.விருப்பத்திற்கு, கனவுக்கு முன்னுரிமை கொடுங்கள். வாழ்த்துகள்!”

- தேவநாதன், தொழிற்கல்வி ஆலோசகர், தொழில்முனைவர்


பொதுவாக, எள்ளுருண்டை உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பார்கள். ஆனால், என் மனைவி, ‘சிறு வயதுப் பெண்குழந்தைகள்  எள்ளுருண்டை சாப்பிடக்கூடாது’ என்கிறாள். அது உண்மையா?

- சுரேஷ்கண்ணன், மாங்குடி கிராமம், சிவகங்கை 

தெர்ல மிஸ்!

“சிறு வயதுப் பெண்குழந்தைகள்  எள்ளுருண்டை சாப்பிடக்கூடாது என்பது மூடநம்பிக்கை. கர்ப்பகாலம் தவிர மற்ற எல்லா நேரத்திலும், எல்லோரும் தாராளமாக எள்ளுருண்டை சாப்பிடலாம். குறிப்பாக சிறுவயதுப் பெண் குழந்தைகளுக்குக் கட்டாயம் எள் சேர்த்த உணவுகள், பண்டங்களைக் கொடுக்கவேண்டும். பூப்பெய்திய முதல் நாளிலிருந்து 5-வது நாள் வரை  எள்ளுருண்டை கொடுப்பது மிகவும் நல்லது. எள்ளில் உள்ள,  ‘பைட்டோ ஈஸ்ட்ரோஜென்’ பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும். எள்ளில் இரும்புச் சத்தும், கால்சியமும்  நிறைந்திருக்கின்றன. வளரும் பருவத்தினருக்கு எள் மிகச்சிறந்த ஊக்கியாக  இருக்கும். தாராளமாக எல்லா வயதினரும் சாப்பிடலாம்.  எள் சாப்பிட்டால் சிலருக்கு உதடு வீக்கம், மூச்சிரைப்பு உள்ளிட்ட  ஒவ்வாமைகள் ஏற்படும்; அவர்கள் மட்டும் எள் உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.”

- விக்ரம்குமார், சித்த மருத்துவர்

தெர்ல மிஸ்!

+1 படித்துக்கொண்டிருக்கும் என் மகளுக்கு ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் அதிகம்.கல்லூரிப்படிப்பாக ஓவியம்தான் படிக்கவேண்டும் என்கிறாள். அதற்கான வழிவகை என்ன?

- உமா, குடியாத்தம்.

தெர்ல மிஸ்!

தமிழ்நாட்டில் கும்பகோணம், சென்னை ஆகிய இடங்களில் ஓவியக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில்  சேர முறையான நுழைவுத்தேர்வு உண்டு. இப்போதிலிருந்து உங்கள் மகளை வார இறுதி கோச்சிங் வகுப்புகளில் சேர்த்து, பயிற்சியளித்தால் முழு நம்பிக்கையுடன் தேர்வையும், கல்லூரியில் நான்காண்டு ஓவியப் படிப்பையும் எதிர்கொள்ளலாம். நகர்ப்புறங்களில் இதற்கான கோச்சிங் வகுப்புகள் உண்டு. கிராமங்களில் இப்பயிற்சி பெறவிரும்பும் மாணவர்களுக்கு ஓவியர்கள் உதவ முன்வரும் பட்சத்தில் பரவலாக ஓவியக்கலை இன்னும் புத்துயிர்பெறும்.

- சந்தோஷ் நாராயணன், ஓவியர்.


வாசகர்களே... உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் therlamiss@vikatan.com க்கு அனுப்புங்க!