Published:Updated:

சொத்துகளின் மதிப்பினை உயர்த்துங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சொத்துகளின் மதிப்பினை உயர்த்துங்கள்!
சொத்துகளின் மதிப்பினை உயர்த்துங்கள்!

சொத்துகளின் மதிப்பினை உயர்த்துங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

ஹலோ வாசகர்களே..!

சொத்துகளின் மதிப்பினை உயர்த்துங்கள்!சொத்துகளின் மதிப்பினை உயர்த்துங்கள்!

உலகப் பொருளாதார மன்றம் புதுடெல்லியில் நடத்திய நான்காம் பொருளாதாரப் புரட்சி என்கிற கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முழுக்க நிறைந்திருக்கும் இளைஞர்களும், தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியும் நமது இரு பெரும் சொத்துகள் என்று சொல்லியிருக்கிறார். 

பிரதமர் சொன்ன இந்தக் கருத்து 100% சரியானதே. இன்றைக்கு, சம்பாதிக்கும் வயதுகொண்டவர்கள் (25 - 45) நம் நாட்டில்தான் மிக அதிகமாக இருக்கின்றனர். அடுத்த இருபது ஆண்டு காலத்துக்கு இந்த நிலை நீடிக்கும் என்பதால், பொருளாதார வளர்ச்சியானது வேறெந்த உலக நாடுகளையும்விட நம் நாட்டில் அதிகமாக இருக்கும்.

அதேபோல, தகவல் தொழில்நுட்பத் துறையில் நம் நாட்டின் இன்ஜினீயர்கள் ஆரம்பத்திலேயே நுழைந்துவிட்டதால், க்ளவுட் கம்ப்யூட்டிங், சாஸ் (Software as a Service) என்று தொடங்கி, இன்று ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங் என பல துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் வேலை வாய்ப்புகளை நம்மால் தர முடிகிறது.

ஆனால், இந்த இரண்டு சொத்துகளின் மதிப்பும் குறைய விட்டுவிடாமல், அதிகமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுக்கிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி. முதலில், இளைஞர்களை எடுத்துக்கொள்வோம். ஓர் ஆண்டில் ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர் கள் கல்லூரிகளில் படித்து முடித்துவிட்டு, வேலை தேடி வருகிறார்கள். இவர்களுக்கு அரசு வேலைகள் இல்லவே இல்லை என்கிற நிலையில், தனியார் நிறுவனங்கள் தரும் வேலையும் குறைந்த அளவில் இருப்பதினால், மிகக் குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து கஷ்டப்படுகின்றனர். இளைஞர்கள் நமது சொத்து எனில்,  நாம் அவர்களை இவ்வளவு தூரம் கஷ்டப்படவிடுவோமா? அண்மையில் வெளியான மனித மூலதனக் குறியீட்டில் (Human Capital Index) நம் நாடு இலங்கை, நேபாளம், மியான்மர், பங்களாதேஷ் ஆகிய நாடு களுக்குப்பின்னால் இருப்பது நமக்கு பெரிய தலைகுனிவு!

அடுத்து, தகவல் தொழில்நுட்பம். இந்தத் துறை நம் நாட்டில் இந்த அளவுக்கு வளரக் காரணம், திறமையான பல கம்ப்யூட்டர் இன்ஜினீயர்களும், அவர்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட தனியார் நிறுவனங்களும்தான். இந்தத் துறையின் வளர்ச்சிக்கு அரசாங்கம் செய்த உதவி என்பது சொற்பமானதே. தானாக உருவாகி வளர்ந்த இந்தத் துறையை நமது சொத்து என நாம் கொண்டாட நினைத்தால், அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பல நடவடிக்கைகளை நாம் எடுத்தாக வேண்டும்.

யாரோ, எப்போதோ செய்த செயல்களினால் கிடைத்த வெற்றியை ஆட்சியாளர்கள் சொந்தம் கொண்டாடுவதை விட்டுவிட்டு, சுயம்புவாக வளர்ந்த இந்த இரு பெரும் சொத்துகளை இன்னும் பட்டை தீட்டி அதிக மதிப்பு மிக்கதாக மாற்றுவது மத்திய அரசின் கடமை!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு