அவளுக்கும் எனக்குமான தொடர்பு மிக நீண்டது. அவளுடைய முதல் பிறந்தநாளில் அவள் சார்பாகத் தமிழகம் முழுவதும் சுற்றிவந்து வாசகிகளையும் அவளையும் சந்திக்கச் செய்ததில், எங்கள் நெருக்கம் அதிகமானது.

‘அவள் விகடன்’ என்னுடைய அணுக்கத் தோழி என்பதால், அவளுடைய எல்லாப் பகுதிகளுமே எனக்குப் பிடிக்கும். குறிப்பிட்டுச்சொல்வதானால், பல்வேறு துறைகளில் முதன்மையாக இருந்த பெண்களைப் பற்றிச் சொல்லும் ‘முதல் பெண்கள்’, சரித்திரத்தையும் சாகசத்தையும் ஒருசேர பதிவிடும் அற்புதம். உலகளாவிய அளவில் தத்தம் துறையில் சிறந்து விளங்கும் பெண்மணிகளின் வாழ்க்கையை விவரிக்கும் மருதனுடைய எழுத்துகளை அடுத்துச் சொல்லலாம். இவற்றோடு, வாசகிகள் உலகச் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வரும் `14 நாள்கள்'... இன்னும்... இன்னும்...

அவள் மேன்மேலும் வளர வாழ்த்துகள்!

வாழ்க்கை வரலாறுகளும் சரித்திரப் பதிவுகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இவற்றைப் படித்து நம்முடைய வாழ்க்கை யையும் செப்பனிட்டுக்கொள்ளலாம் என்பது என் நம்பிக்கை.

சாதனை படைத்தவர்கள் எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டார்கள் என உணரும்போது, அந்தச் சிரமங்களுக்கு முன், நம்முடைய கஷ்டங்கள் எம்மாத்திரம் என்கிற உத்வேகம் கிடைக்கும்; நம்மாலும் முடியும் என்கிற உற்சாகமும் ஏற்படும்!

- கே.கணேசன், படம் : ப.சரவணகுமார்