Published:Updated:

அன்பு வாசகர்களே...

அன்பு வாசகர்களே...
News
அன்பு வாசகர்களே...

அன்பு வாசகர்களே...

ன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால்தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாத பட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடமிருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

அன்பு வாசகர்களே...

ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய், அவளைச் சீராட்டி, பாலூட்டி, வளர்த்து, ஆளாக்கி அவள் பருவ வயதை அடையும்போது, அவளுக்கு என்னென்ன அறிவுரைகள் சொல்ல வேண்டுமோ அவற்றைக் கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல் சொல்லிக் கொடுத்திருக்கிறது `வாடி ராசாத்தி - மகள்களைப் பெற்ற மகராசிகளுக்கு...’ இணைப்பிதழ். பாராட்டுகள்!

- எம்.செல்லையா மற்றும் சி.கார்த்திகேயன், சாத்தூர்
- கலைவாணி, சென்னை-69
- லதா, சென்னை-24
- பரமேஸ்வரன், புதுச்சேரி-2


`குழந்தைகளுக்குத் தனியறை... பரவலாகும் கலாசாரம்’ கட்டுரையில் மனநல மருத்துவர் அசோகன் குறிப்பிட்டிருக்கும் கருத்துகளை ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் படிக்க வேண்டும். தங்களுக்குக் கிடைக்காதது, தங்கள் பிள்ளைகளுக்காவது கிடைக்க வேண்டும் என்று பைக், மொபைல், தனி அறை என்று சலுகைகளைச் செய்து தருகிறவர்கள், அவர்களைக் கண்காணிக்கவும் வேண்டும் என்பதே உண்மை.

- ஜெஸ்மின், திருநெல்வேலி-2
- மு.நாச்சியம்மாள், காரைக்குடி
- என்.ரத்தினநாகராஜ், சென்னை-15
- அஜ்மல்கான், மதுரை-3


சித்த மருத்துவர் விக்ரம்குமார் வழங்கியிருந்த வறட்டு இருமலுக்கான டிப்ஸ் அருமை.

 - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி

``தோல்வி என்பது வாழாத நிமிடங்களும் போராடாத தருணங்களும்’’ கட்டுரையில், ஆக்கமும் ஊக்கமும் வாழ்க்கையில் மாற்றத்தைத் தரும் என்பதை உணர்த்தியிருக்கிறார் சகோதரி வித்யா நாராயணன். அவரின் சாதனைகள் தொடரட்டும். அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல உதாரணமாக இருப்பார்.

- லால் சந்திரன் இந்திரா, திருச்சி
- கலைவாணி, சிதம்பரம்


பிறரைச் சார்ந்து வாழ்பவர்களை வேடிக்கையாக, `ஒட்டுண்ணி’ என்று சொல்வோம். ஆனால், `ஒட்டுண்ணிகள் நிகழ்த்தும் மாய விளையாட்டு’ கட்டுரையோ, மனிதனை இயக்குவதே பாக்டீரியாதான் என்றதும், ஒரு பிரமிப்பும் அச்சமும் ஒன்று சேர்ந்து வந்தன.

- நித்யகல்யாணி, திருச்சி-4


கொசு கடித்தால், டெங்கு வரும், மலேரியா வரும் என்று ஏற்கெனவே பயந்து போயிருக்கிறோம். இப்போது ரத்தச்சோகையும் வரலாம் என்கிற கூடுதல் பயத்தைக் கிளப்பிட்டீங்களே...
 
- பழனிசாமி, கோயம்புத்தூர்-5

மாண்புமிகு மருத்துவர் ரவிந்திரா மிகவும் பாராட்டப்படவேண்டியவர். தன் இணையரான ஸ்மிதாவோடு சேர்ந்து ஒரு முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்ததுதான் மேல்கட் மக்கள் அவர் மீது நம்பிக்கைகொள்ளக் காரணமானது. அவரது சமூகப் பணிக்கு ஒரு சல்யூட்.

- ஜெயச்சந்திரன், தூத்துக்குடி-1


`கருவே கலையாதே! வலி தீர்க்கும் வழிகள்’ கட்டுரையில் கருச்சிதைவைத் தவிர்க்கும் வழிகளை விரிவாகச் சொல்லியிருந்தார் மகப்பேறு மருத்துவர் நித்யா தேவி.

- ரேணுகா வினோத், சென்னை-52

ரத்தம் தொடர்பான பல அரிய தகவல்களை அள்ளித் தந்திருந்தது `ரத்தம் ஒரு பயணியின் கதை!’ கட்டுரை.

- எம்.மணிகண்டன், அரியலூர்

`மருந்தாகும் உணவு’ செய்முறையும் பலன்களும் அசத்தல். 

- ராஜி ஹரிஹரன், திருச்செந்தூர்

`ஸ்பீச் தெரபி’ குறித்த தெளிவான அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறார் மருத்துவர் பொன்மதி. அனைவரும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்.

- பி.பிரேமா, சோழவந்தான்
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz