பிரீமியம் ஸ்டோரி

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்   

தண்டோரா

இலவசப் பயிற்சிகள்

ஆடு வளர்ப்பு


மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மார்ச் 19-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 20-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 21-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452 2483903.

பூச்சி, நோய் மேலாண்மை

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் மார்ச் 14, 15-ம் தேதிகளில் ‘சிக்கன நீர்ப்பாசன தொழில்நுட்பங்கள்’, 19, 20-ம் தேதிகளில் ‘தோட்டக்கலைப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை’, 20, 21-ம் தேதிகளில் ‘கெளுத்தி மீன் வளர்ப்பு’, 21, 22-ம் தேதிகளில் ‘தென்னை மற்றும் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371

கறவைமாடு வளர்ப்பு


கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மார்ச் 19-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

மதிப்புக்கூட்டல்

சென்னை, கொடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் மார்ச் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ‘புதுமையான தொழில்நுட்பங்களைப் புகுத்துதல்’ என்ற பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் சிறுதானிய ஐஸ்கிரீம், சாக்லேட், யோகர்ட் பானம் உள்ளிட்ட மதிப்புக்கூட்டும் பொருள்கள் தயாரிப்புக் குறித்துப் பயிற்சியளிக்கப்பட உள்ளது. இணையதளம் அல்லது மின்னஞ்சலில் முன்பதிவு செய்து கொள்ளவும்.

இணையதளம்: www.istedtanuvas.in
மின்னஞ்சல்: istedtanuvas@gmail.com
தொடர்புக்கு: 94451 99034.

சுருள்பாசி வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் 14-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’, 19-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 26-ம் தேதி ‘பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு’, 28-ம் தேதி, ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716.

கட்டணப் பயிற்சிகள்

தேனீ வளர்ப்பு


தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில் மார்ச் 18-ம் தேதி ‘நவீன வேளாண் இயந்திரங்கள் பயிற்சி’, 20, 21 ஆகிய தேதிகளில் ‘தேனீ வளர்ப்பு’, 22-ம் தேதி ‘நாட்டுக்கோழிப் பராமரிப்பு’, 23-ம் தேதி ‘விவசாயிகளுக்கு உதவும் அலைபேசி செயல்பாடுகளின் பயன்பாடு’, 25, 26 ஆகிய தேதிகளில் ‘காளான் வளர்ப்பு’, 27-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 28-ம் தேதி ‘அசோலா மற்றும் மண்ணில்லா நீரியல் பசுந்தீவன வளர்ப்பு’ ஆகிய தேதிகளில் பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் 150 ரூபாய். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0461 2269306, செல்போன்: 75983 75871

மீன் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 27-ம் தேதி ‘காய்கறி மற்றும் பழங்களில் மதிப்புக் கூட்டல்’ பயிற்சி இலவசப் பயிற்சியாக நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

மார்ச் 19-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 26-ம் தேதி ‘நெல்லியில் மதிப்புக்கூட்டல்’ தொழில்நுட்பங்கள் தயாரித்தல் பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

அறிவிப்பு

‘த
ண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.

பசுமைக் குழு 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு