
கலியுக தெய்வமாம் தர்மசாஸ்தாவின் பூதநாத புராணம் மெய்சிலிர்க்க வைத்தது. அறியாத பல தகவல்களை அறிய முடிகிறது.
- கவிதா, திருவரங்கம்
ஈசன் அருள் போற்றும் மகா சிவராத்திரி மகிமையைக் கூறிய கட்டுரை, சிவானந்தத்தில் திளைக்கவைத்தது.
- வளையாபதி, தோட்டக்குறிச்சி
சிவராத்திரி விசேஷ நாளில், திரியம்பகேஸ்வரர் கோயில் பற்றி படித்து மகிழ்ந்தோம். ஒருமுறையேனும் அங்கு சென்று வழிபட ஆவலாக இருக்கிறோம்.
- செந்தில், புளியங்குடி
சதாசிவ ப்ரம்மேந்திராளின் வாழ்க்கைச் சரிதம் அற்புதம். அநேககோடி நமஸ்காரம்!
- சுசீலா, கும்பகோணம்
`துவார பாலகர்கள் எதற்காக' என்ற கேள்விக்கான பதிலும் விளக்கமும் மிக அருமை; எளிமை!
- சி. தண்டபாணி, மதுரை-2
செம்பொன் ரங்கனின் லீலை வியக்க வைத்தது. நம்பியவர்களுக்கு நல்லருள் புரிவான் ரங்கன் என்பதை உணர்த்தியது அந்தத் திருக்கதை.
- மூ. சிவா, பெங்களூரு