Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
News
தண்டோரா

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

காளான் வளர்ப்பு


சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் 28-ம் தேதி, ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’, ஏப்ரல் 9-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 11-ம் தேதி ‘மருந்தில்லா மருத்துவம்’, 23-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி ‘செம்மரம் வளர்ப்பு’, 25-ம் தேதி ‘கோடைக்காலத்தில் கால்நடைப் பராமரிப்பு’, 30-ம் தேதி ‘மானாவரி பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716.

கட்டணப் பயிற்சிகள்

ஒருங்கிணைந்த பண்ணை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகே உள்ள குடும்பம் - கொழிஞ்சி பண்ணையில் மார்ச் 29, 30, 31 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள்’ பயிற்சி நடைபெற உள்ளது.

முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான கட்டணம் ரூ.600.

தொடர்புக்கு,  தொலைபேசி: 0431 2331879, 98424 33187.

அசோலா வளர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில் மார்ச் 28-ம் தேதி ‘அசோலா மற்றும் மண்ணில்லா நீரியல் பசுந்தீவன வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் 150 ரூபாய். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0461 2269306, செல்போன்: 75983 75871.

மாடித்தோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ‘அசோலா வளர்ப்பு’, 27-ம் தேதி ‘மாடித்தோட்டம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296


பசுமைக் குழு