Published:Updated:

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம் #MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம் #MyVikatan
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம் #MyVikatan
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம் #MyVikatan

ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டில் 5,000 பேர் கொண்ட ஃபேஸ்புக் பிரபலம் அவர். தனக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றி ஃபேஸ்புக்கில் தொடர்ந்து எழுதிவந்தவர், முதல்முறையாக விகடனில் விஜய் சேதுபதி பற்றி ஒரு கட்டுரை எழுதினார். மறுநாள் அவருக்கு ஒரு கால் வந்தது. அழைத்தவர் விஜய் சேதுபதி. “என்னைப் பத்தி அப்படியே எழுதிருக்கியேயா... நாம ஒருநாள் சந்திக்கலாம்” என்ற அந்தக் குரல் கேட்டு நெகிழ்ந்துபோனார். 

மதுரையில் ஒரு கல்லூரி, மாணவர்களுக்குரிய டெபாசிட் பணத்தைத் திருப்பித் தராமல் பல மாதங்களாக இழுத்தடித்துக்கொண்டிருந்தது. விகடன் மாணவப் பத்திரிகையாளராக இருக்கும் ஒரு மாணவி, பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பேசி அதைச் செய்தியாக்கி அனுப்பினார். அந்தச் செய்தி விகடனில் வெளியான சில மணி நேரங்களில், மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்திடமிருந்து ஒரு மெசேஜ், ‘உங்க செக் ரெடியாக இருக்கு... வந்து வாங்கிக்கோங்க.’

சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் எம்.எஸ்.பாஸ்கரின் பேட்டி அவருடைய குடும்பப் படத்துடன் வெளியானது. அந்தப் படத்தில் அவருடைய பையனைப் பார்த்த ஒரு இயக்குநர், எம்.எஸ்.பாஸ்கரை அழைத்து, “உங்க பையன் என் படத்துல நடிப்பாரா?” என்று கேட்டார். கேட்டவர் ‘96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார். அந்தப் பையன்தான் சின்ன வயது ராமாக நடித்த ஆதித்யா பாஸ்கர். 

இந்த மூன்று சம்பவங்களிலும் அந்த மேஜிக் எப்படி நடந்தது?

ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தால் விஜய் சேதுபதிக்கு அது போய் சேர்ந்திருக்குமா? வாட்ஸ் அப் ஃபார்வர்டுகளுக்காக அந்தக் கல்லூரி நிர்வாகம் பயந்திருக்குமா. ஆதித்யா பாஸ்கர் எத்தனை புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருப்பார்?

ஒரு கட்டுரை... ஒரு செய்தி... ஒரு போட்டோ...  ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற நெருங்கிய வட்டத்துக்குள் வெளியாவதற்கும், விகடன் போன்ற செய்தி தளங்களில் வெளியாவதற்குமான வித்தியாசம் இதுதான். 

இந்த மேஜிக் இனி உங்களுக்கும் சாத்தியமாகப்போகிறது. கோடிக்கணக்கான உலகத் தமிழர்கள் தினம் நேசித்து வாசிக்கும் விகடனில் உங்களுக்கே உங்களுக்கென்று ஒரு பக்கம்.  

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம். அது மற்றவர்களுக்கு பிடித்திருந்தால் அந்த நிமிடம் நீங்கள் சூப்பர் ஸ்டார். 

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம் #MyVikatan

பிரதமரின் பிரசாரமோ, பொள்ளாச்சி கொடூரமோ, தேடப்படும் குற்றவாளியின் தலைமறைவு வாக்குமூலமோ... எங்கும் எதுவும் அலைபேசி, வாட்ஸப் மூலம்தான் பரவுகிறது. எனவே, அலைபேசி மூலமே உங்கள் படைப்புகளை சமர்பிக்க உதவியிருக்கிறோம்.

Tamil Flash News APP... சுருக்கமாக TFN. இது ஒரு செய்தி பரிமாறும் செயலி. இதில் உங்கள் படைப்புகளை சமர்பிக்கவும் செய்யலாம். கூகுள் ப்ளேஸ்டோர் அல்லது ஆப்பிளின் APP Store-களில் இருந்து TFN-ஐ பதிவிறக்கிக் கொள்ளலாம். அதன் மூலம் எப்படி படைப்புகளை சமர்பிப்பது என கீழே விளக்கம் இருக்கிறது.    

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம் #MyVikatan

TFN ஆப்பில் இருக்கும் செட்டிங்க்ஸ் ஐகானைக் க்ளிக் செய்து அதில் contribute your news தேர்வு செய்யுங்கள். பிறகு நீங்கள் இணைக்க விரும்பும் புகைப்படம், வீடியோ அல்லது  ஆடியோவை இணைத்து ஒரு தலைப்பையும், உங்கள் செய்தியையும் பதிவு செய்து Next கொடுங்கள். அடுத்து உங்கள் பெயர், இமெயில், மொபைல் எண் கொடுத்து Submit கொடுத்தால் உங்கள் செய்திகள் எங்களுக்கு வந்துவிடும். 

TFN ஆப்பினை உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்ய...

மெயில் மூலம் படைப்புகளை சமர்பிக்க விரும்புபவர்கள் தங்கள் பெயர், அலைபேசி எண் ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிட்டு, my@vikatan.com அஞ்சலுக்கு அனுப்பலாம். 

அப்புறமென்ன உங்களுக்கான தளம் ரெடி... உற்சாகமா களமிறங்கிக் கலக்குங்க மக்களே..!

FAQ:-


எதையெதை அனுப்பலாம்?

நீங்கள் பார்த்த, ஊர்ஜிதமாக அறிந்த தகவல்களில் செய்திக்கான சுவாரஸ்யம் இருந்தால் அனுப்பலாம். வதந்திகள், ஊர்ஜிதமில்லா ஃபார்வர்ட்கள் கண்டிப்பாக வேண்டாம். விநோதமான சம்பவங்கள் அல்லது கண்முன் நிகழும் வித்தியாசமான நிகழ்வுகளை மொபைலில் வீடியோ எடுத்து அனுப்பலாம். கதைகள், கட்டுரைகள், கவிதைகள், புகைப்படங்கள், எவரையும் காயப்படுத்தாத, சுவாரஸ்யமான மீம்ஸ்கள், ஃபோட்டூன்கள், சினிமா விமர்சனங்கள், ஓவியங்கள், நகைச்சுவைகள், லைஃப் ஸ்டைல் விஷயங்கள், மினிமலிஸ படைப்புகள், பயண சுவாரஸ்யங்கள், துறைசார் பதிவுகள், உலக, இந்திய மற்றும் தமிழ் சினிமா பார்வைகள், சமையல் குறிப்புகள், குறைந்த நிமிடத்தில் நிறைவான சேதி சொல்லும் வீடியோக்கள், இன்னும் இன்னும்!  

யார் பெயரில் வெளிவரும்?

உங்கள் பெயரில் வெளிவரும்! புனைப்பெயரிலும் வெளியிடலாம். ஆனால், அந்தப் பெயர் விகடன் டேட்டா பேஸில் வேறு யாரும் முன்னரே பதிவு செய்யாததாக இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து படைப்புகள் அனுப்பும் பட்சத்தில், உங்களுக்கான தனிப்பக்கம் தொடங்கப்பட்டு, அதில் நீங்கள் தரும், உங்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறும். மின்னஞ்சல் முகவரி வெளியிட விரும்பினால் அதுவும் வாசகர்களின் பார்வைக்கு இருக்கும். இவையெல்லாம், நீங்கள் அனுப்பும் படைப்புகளின் எண்ணிக்கையையும் தரத்தையும் பொறுத்தே அமையும். 

* தற்போது பரிசோதனை முயற்சியில் இருப்பதால், பங்களிப்பவரின் பெயரில் படைப்புகள் வெளியாகும். உங்கள் ஆர்வத்தையும் தொடர் பங்களிப்பையும் பொறுத்து மிகவிரைவில் உங்களுக்கென தனிப்பக்கம் உருவாக்கப்படும்.

என்னைப் பற்றிய விபரங்கள் அனுப்ப வேண்டுமா?

ஆம். பெயர், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட உங்கள் விபரங்கள்.

என் படைப்பு திருத்தப்படுமா?

உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. இவை எதுவும் படைப்பின் தரத்தை மேம்படுத்தவே மேற்கொள்ளப்படும். தேவைப்படும் சமயங்களில், உங்களுக்கு அது தொடர்பான தகவல்கள் பகிரப்படும்!

வேறு தளத்தில் வெளியிட்டவற்றை அனுப்பலாமா?

வேண்டாம்! உங்கள் கற்பனை என்றால், விகடனுக்கு என்று பிரத்யேகமாக  அனுப்புபவை மட்டுமே பரிசீலிக்கப்படும். நிகழும் சம்பவம் பற்றிய பதிவென்றால், முதலில் எது சமர்பிக்கப்படுகிறதோ, அது பரிசீலிக்கப்படும்!

வெளியான என் படைப்புகளை, வேறு சமூக வலைதளங்களில் வெளியிடலாமா?

My Vikatan-க்கு என்று நீங்கள் எழுதியதை, குறிப்பிட்டு ஷேர் செய்து கொள்ளலாம். அச்சு அசலாக அப்படியே பிரதியெடுத்து வேறு தளங்களில் வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழில் மட்டும்தான் எழுத வேண்டுமா?

அப்படி எந்தக் கட்டுப்பாடுமில்லை. ஆங்கிலத்தில்கூட இருக்கலாம். மொழியே தேவையில்லாமல், ஒரு சின்ன கார்ட்டூனில், மைம் வீடியோவில், ஃபோட்டோவில் எல்லையற்று உங்கள் சிறகை விரிக்கலாம்.

படைப்புச் சுதந்திரத்தின் எல்லை என்ன?
 
கற்பனைச் சிறகு விரிந்தால், வானம்கூட எல்லை இல்லைதான். உங்கள் படைப்பு ஒரு நல்ல விவாதத்துக்கு வழிவகுக்கலாம். ‘அட.. இப்படி ஒரு பார்வை இருக்கா?!’ என்று விழி விரிய வைக்கலாம். ஆனால், அது யாரையும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம்! 

என்னவெல்லாம் செய்யக் கூடாது?

வெற்று கவன ஈர்ப்புக்காக, யாரையேனும் புண்படுத்தக்கூடிய, சிலரது உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடிய எதுவும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

நன்றி..!