Published:Updated:

அக்மார்க் விகடன் ஸ்டைல்!

அக்மார்க் விகடன் ஸ்டைல்!
அக்மார்க் விகடன் ஸ்டைல்!

டுபுலி ஆட்டம் கட்டுரை சிறப்பு. கட்டுரையாளர்கள் சரியான விஷயங்களை, நேர்மையாக அலசியிருந்தார்கள்.
- கே.எஸ்.கோவர்த்தனன், ஸ்ரீரங்கம்.

சாம்பியன் கோமதியின் கோணத்தில் எழுதப்பட்டிருந்த கட்டுரையும், அதற்கான படங்களும் இவ்வார விகடனை மெருகூட்டின.
- மணியன், திருப்பத்தூர்.

த்தமில்லாமல் பல பகுதிகளை ஆரம்பித்து ஆச்சர்யமளிப்பதில் ஆனந்தவிகடனுக்கு நிகரில்லை. பரிந்துரை அட்டகாசமான ஐடியா. அடுத்த வாரம் யார், என்ன பரிந்துரைப்பார்கள் என்று ஆவலாக இருக்கிறது.
- சம்பத்குமாரி, பொன்மலை.

அக்மார்க் விகடன் ஸ்டைல்!

லை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி குறித்த கட்டுரை நெகிழவைத்துவிட்டது. ஆனந்தவிகடன் பேட்டி மூலம் அவரது நிலை உயரும் என்பதில் ஐயமில்லை.
- ஸ்ரீராம், சோலையூர்.

ரத் ஃபேமலி பேட்டியும் படமும் அருமை.
- ஆர்.ஜி.காயத்திரி, திசையன்விளை.

சேப்பாக்கம் கட்டுரை, டிவியில் மட்டுமே மேட்ச் பார்த்த எனக்கு மைதானத்தில் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது.
- சூரியதாஸ், சிலட்டூர்.

கிரண்பேடி கேள்விகளும் பதில்களும் ஷார்ப்பாக இருந்தன.
- தங்கவேல் பழனிசாமி, பெரியகள்ளிவலசு.

தேவராட்டம் விமர்சனம்... அக்மார்க் விகடன் ஸ்டைல்!
- முருகசாமி, புதுச்சேரி.  

வாசகர் மேடை கேள்விகளெல்லாம் தாறுமாறா இருக்கே! வாசகர்கள் செமயா பதில் சொல்லி, புகுந்து விளையாடியிருப்பாங்களே! வெய்ட்டிங் விகடனாரே...
- விஜிராம், டாடாபாத், கோவை.