Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்பு

தண்டோரா

அறிவிப்பு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

வெள்ளாடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 28-ஆம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’, ஜூன் 3-ஆம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 18-ஆம் தேதி ‘வான்கோழி வளர்ப்பு’, 25-ஆம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

நிலக்கடலை

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் மே 28, 29-ஆம் தேதிகளில் ‘தென்னை மற்றும் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

ஆடு வளர்ப்பு


சேலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே  28, 29-ஆம் தேதிகளில் ‘ஆடு வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427 2410408.

சுருள்பாசி வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மே 28-ஆம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, ஜூன் 1-ஆம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 18, 19-ஆம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணை அமைத்தல்’, 21-ஆம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’, 25-ஆம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’, 27-ஆம் தேதி ‘ஹைட்ரோ-போனிக்ஸ் முறையில் கால்நடைத் தீவனம் தயாரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716.

கெண்டை மீன் வளர்ப்பு

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூன் 12-ஆம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 13-ஆம் தேதி ‘சிறுதானியச் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டல்’, 20-ஆம் தேதி ‘சின்ன வெங்காயச் சாகுபடி’, 21-ஆம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 26-ஆம் தேதி ‘திலேப்பியா கெண்டை மீன் வளர்ப்பு’, 27-ஆம் தேதி ‘உளுந்து மற்றும் பாசிப்பயறு சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

-பசுமைக் குழு

கட்டணப் பயிற்சிகள்

தேனீ வளர்ப்பு

தண்டோரா

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஜூன் 8-ஆம் தேதி ‘தேனீ வளர்ப்பு’, 29-ஆம் தேதி ‘அசோலா வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

இயற்கை வேளாண்மை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, எம்.புதுப்பட்டி கூடமுடையார் கோயில் அருகில் உள்ள மெடோஸ் மேல்நிலைப்பள்ளியில் ஜூன் 8-ஆம் தேதி ‘இயற்கை வேளாண்மை அடிப்படை பயிற்சி மற்றும் கருத்தரங்கு’ நடைபெற உள்ளது. மதிய உணவு, தேநீர், பயிற்சிக் கையேடு வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் 200 ரூபாய். முன்பதிவு அவசியம்.

ஏற்பாடு: தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பு.

தொடர்புக்கு, செல்போன் : 94435 75431, 96554 37242.

நெல் திருவிழா

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, ஏ.ஆர்.வி தனலட்சுமி திருமண அரங்கத்தில் ஜூன் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில், ‘தேசிய நெல் திருவிழா’ நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவைப் பல ஆண்டுகளாக அமரர் ‘நெல்’ ஜெயராமன் பலரின் ஆதரவுடன் நடத்தி வந்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் நடைபெறும் இத்திருவிழாவில் சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்கள், கருத்துரையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

தண்டோரா

இத்திருவிழாவில் கருத்தரங்கம், கண்காட்சி, கலைநிகழ்ச்சி, பேரணி உள்ளிட்டவைகளும் இடம்பெற உள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு இரண்டு கிலோ பாரம்பர்ய நெல் விதை, வேளாண் கையேடு... உள்ளிட்டவை வழங்கப்படும். பங்கேற்பு கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, 04369 220954, 98426 07609

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.

- பசுமைக் குழ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism