
சரித்திரமும் மேஜிக்கும்

மாப்பிள்ளையை மயக்கும் செட்டிநாடு சிறப்பு உணவின் அட்டைப்படம் என்னையும் மயக்கிவிட்டது!
- திக்ஷிதா, சென்னை-19
வைகாசி பிரசாதங்களுடன் அந்தச் சிறப்பு தினங்களுக்கான விசேஷங்களையும் குறிப்பிடுவது சிறப்பு.
- டி.செளந்தரவல்லி, கும்பகோணம்
கிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்கின் ஸ்டெப் பை ஸ்டெப் முறையும், ரெசிப்பி வீடியோவும் சுலபமாகச் செய்ய உதவின.
- தமிழ்ச்செல்வி குமார், காட்பாடி
உலகெங்கிலும் பிரபலமாக உள்ள ஃபியூஷன் ஸ்பெஷல் ரெசிப்பிகளை, வீட்டிலேயே செய்ய வைத்துவிட்டீர்களே!
- மனோகரி சுந்தரம், திருச்சி-6
இதயம் காக்கும் ஆளி விதை மற்றும் விதவிதமான விதை ரெசிப்பிகள் அனைவரின் ஆரோக்கியத்துக்கும் வித்து!
- எஸ்.லோகநாயகி, மதுரை-3
உணவு உலாவில் பிசினஸ் ரகசியத்தை யும் சொல்லிவிட்டார்களே!
- கனகா செந்தில்வேலன், காரைக்கால்
மாம்பழத்தின் சரித்திரமும், மாம்பழ மேஜிக் ரெசிப்பிகளும் அசத்தல்.
- நதியா முத்துகுமார், சேலம்
வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ் பக்கங்கள், பாதுகாத்து வைக்க வேண்டியவை.
- சுஷ்மிதா ராவ், பெங்களூரு-3