Published:Updated:

34,12,000 நன்றி... மீண்டும் ஒரு முறை ஆனந்த விகடன் நம்பர் 1

34,12,000 நன்றி... மீண்டும் ஒரு முறை ஆனந்த விகடன் நம்பர் 1
34,12,000 நன்றி... மீண்டும் ஒரு முறை ஆனந்த விகடன் நம்பர் 1

34,12,000 நன்றி!

93 வருடங்களாக, உங்கள் அன்பும் ஆதரவும் தோள் கொடுக்க, தமிழர்களின் நம்பர் 1 பத்திரிகையாக மீண்டும் ஒரு முறை திகழ்கிறது ஆனந்த விகடன்... இன்றைய மொபைல் வைரல் யுகத்திலும் கடந்த இரண்டாண்டுகளில், 26% வாசகர்களைக் கூடுதலாகப் பெற்ற இந்தியாவின் ஒரே பத்திரிகை, ஆனந்த விகடன் என்றால்... எல்லாப் புகழும் வாசகர்களுக்கே! 

34,12,000 நன்றி... மீண்டும் ஒரு முறை ஆனந்த விகடன் நம்பர் 1

மீடியா ரிசர்ச் யூசர் கவுன்சில் (MRUC) சார்பாக நீல்சன் நிறுவனம் நடத்திய வாசகர்களுக்கான கருத்துக்கணிப்பில், தமிழக வார இதழ்களில் நம்பர் ஒன் வார இதழாக வாசகர்களின் பேராதரவுடன் மீண்டும் ஒரு முறை முதலிடத்தைப் பெற்றிருக்கிறது ஆனந்தவிகடன். விகடன் குழுமத்தில் இருந்து வெளியாகும், மற்றுமொரு இதழான அவள் விகடன் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.

டிஜிட்டல் உலகம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், செய்திகளுக்கான நமது நேரமும், தேவையும் குறைந்து வருவதாகவே பலரது எண்ணமும் இருக்கின்றது. வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளே போதும் என்கிற நிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணமும் பரவலாக இருக்கின்றது. ஆனால், செய்தியின் நம்பகத்தன்மையைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து மக்கள் டிஜிட்டல்  போலவே ப்ரின்ட் இதழ்களையும் தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது இந்த கருத்துக்கணிப்பு. 

2017ம் ஆண்டின் மூன்று காலாண்டுகளையும், 2019ம் ஆண்டின் முதல் காலாண்டையும் ஒப்பிட்டு,  IRS 2019 Q1 இந்த வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. 

34,12,000 நன்றி... மீண்டும் ஒரு முறை ஆனந்த விகடன் நம்பர் 1

கருத்துக்கணிப்பின் படி, தினசரிகளை 2017ம் ஆண்டைக்காட்டிலும் 1.8 கோடி பேர் அதிகம் வாசிக்கிறார்கள். வார இதழ்களை 0.9 கோடி பேர் அதிகம் வாசிக்கிறார்கள். உலகளவில் இணையம் வழியாக செய்திகளை நுகரும் வாசகர்களின் எண்ணிக்கை 24% அதிகரித்து இருக்கிறது. 3,24,286 நபர்களிடம் நாடு முழுவதும் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் 38.4 கோடி மக்கள் இன்டெர்நெட் சேவையை ஆக்ட்டிவாக பயன்படுத்துகிறார்கள். அச்சு ஊடகங்களை படிப்பவர்களின் எண்ணிக்கை 40.7 % இருந்து 42.5 % உயர்ந்து இருக்கிறது.  

MRUCன் இந்த (IRS 2019 Q1) கருத்துக்கணிப்பின்படி ஆனந்த விகடன் வார இதழ் 34,12,000 வாசகர்களைப் பெற்றிருக்கிறது (2017 அறிக்கையின் படி 27,08,000) . IRS 2017 கருத்துக்கணிப்பைக் காட்டிலும், ஆனந்த விகடனின் வளர்ச்சி 26% அதிகம். தமிழ் இதழ்களில் 25% மேல் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் இதழ் ஆனந்த விகடன் மட்டும் தான். அவள் விகடன் தன் வாசகர்களின் எண்ணிக்கையை 18% அதிகரித்திருக்கிறது. 

34,12,000 நன்றி... மீண்டும் ஒரு முறை ஆனந்த விகடன் நம்பர் 1

வாசகர்கள் எண்ணிக்கையின்படி (34,12,000), தமிழ் தினசரிகளில் நான்காம் இடத்தில் இருக்கிறது ஆனந்த விகடன். தமிழ் தினசரிகளின் பட்டியலில் ஒரு வார இதழ் இருப்பது, வாசகர்கள் ஆனந்த விகடன் மீது வைத்திருக்கும் அபிமானத்தைக் காட்டுகிறது. இந்திய அளவிலான வார இதழ்களில் 12ம் இடத்தில் இருக்கிறது ஆனந்த விகடன். 

இந்தி, ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளில் வெளியாகும் வார இதழ்களின் வரிசையில் ஆனந்த விகடன் இரண்டாம் இடம் பெற்றிருக்கிறது. முதலிடத்தில் மலையாள வார இதழ் ஒன்று இருக்கிறது.

93 ஆண்டுகளாக விகடனை  கைபிடித்தும் அரவணைத்தும் அழைத்துச் செல்லும் வாசகர்களுக்கே இந்தப் பெருமை முழுக்கச் சேரும். ஏனெனில், வாசகர்களே விகடனின்  வரம்... அவர்களின் உந்துதலே உரம்!

எல்லாப் புகழும் வாசகர்களுக்கே!

இணைந்திருப்போம்...  தொடர்ந்து உயர்ந்து நிற்போம்!