Published:Updated:

கண்ணீர் மண்ணில் ஸ்டெதஸ்கோப்!

களத்தில் விகடன்மருத்துவ முகாம்

##~##

டலூர் மாவட்டத்தையே புரட்டிப்போட்ட 'தானே’ புயல் வீசி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அதன் பாதிப்பில் இருந்து அந்த மாவட்டத்து மக்கள் இன்னமும் மீளவில்லை. வாழ்வாதாரத்தை இழந்தும் மனமொடிந்தும் வாடிய கடலூர் மாவட்ட மக்களின் துயர் துடைக்க நம்மால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்துவருகிறோம். 'தொடர் மருத்துவ முகாம்கள் நடத்துவது’ என்று எடுக்கப்பட்ட முடிவின்படி, முதலில் பத்திரக்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி 21-ம் தேதி மருத்துவ முகாம்நடத்தினோம். 

அடுத்த முகாம் இது... கடலூர் மாவட்டம், காடாம்புலியூர் அருகே உள்ள அரசடிக்குப்பம் புதூரில் பிப்ரவரி 23-ம் தேதி இரண்டாவது மருத்துவ முகாம் நடத்துவது என்று முடிவானது. சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் அந்தக் கிராமத்தில், மக்கள் சிறு தலைவலி வந்தால் கூட, பண்ருட்டி அல்லது நெய்வேலிக்குத்தான் செல்ல வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம்கூட அரசடிக்குப்பம்புதூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில்  இருக்கிறது. ஆகையால், அரசடிக்குப்பம் புதூர் நம்மு டைய அடுத்த களமானது. பாண்டிச்சேரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (றிமிவிஷி) நிறுவனத்தின் சிறப்பு நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு நம்மோடு இணைந்துகொண்டது.

கண்ணீர் மண்ணில் ஸ்டெதஸ்கோப்!

கிராமத்துக்குச் செல்லும் முக்கிய வழித்தடங்களையும் மறித்துக்கொண்டு விழுந்த பல மரங்கள் இன்னமும் அகற்றப்படவில்லை. அதனால், பெருத்த சிரமத்துக்கு நடுவேதான் மருத்துவர்கள் குழுவோடு அந்தக் கிராமத் துக்குச் சென்றோம். அரசடிக்குப்பம்புதூரில் முகாம் நடத்த வசதியான கட்டடங்கள் இல்லை. அதனால், ஊர்ப் பிரமுகரானராஜா உள்ளிட்ட கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் வீடுகளில் மருத்துவ உபகரணங்களை வைத்துக்கொள்ளவும் முந்திரிக் களத்தில் முகாம் நடத்த பந்தல் அமைத்துக்கொள்ளவும் உதவினர்.

இதயம், கண், எலும்பு, குழந்தைகள் நலம், பெண்கள் நலம் எனச் சிறப்பு மருத்துவர்கள் குழு களம் இறங்கியது. கூடவே இ.சி.ஜி., எக்கோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியும் பரிசோதனை, ரத்த அழுத்தம் கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டன. சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபா மெடிக்கல்ஸ் உரிமையாளர்கள் என்.நெடுஞ்செழியன் மற்றும் என்.பிரபாகரன் ஆகியோர் வழங்கியிருந்த மருந்துகளைத் தேவையானவர்களுக்கு மருத்துவர்கள் வழங்கினார்கள்.

கண்ணீர் மண்ணில் ஸ்டெதஸ்கோப்!

29 வயதான இளம்பெண் ருக்மணி தன்னு டைய கணவருடன் முகாமுக்கு வந்திருந்தார். ''சில மாசத்துக்கு முன்னாடி நடந்த விபத்துல கால் மூட்டில் பலத்த அடி. ஆபரேஷன் செஞ்சா தான் கால் சரியாகும்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. ஆனா, ஆபரேஷன் பண்ணிக்க நிறைய செலவாகுங்கிறதால,  கால் வலியைப் பொறுத்துக்கிட்டு காலத்தை ஓட்டிக்கிட்டு இருந்தேன். உங்க மூலமாத்தான் இப்போ என் கால் பிரச்னை சரியாகப்போகுது சாமி'' என்கிறபோதே ருக்மணிக்குக் கண்கள் கலங்கிவிட்டன.

அவரை எலும்புச் சிகிச்சை சிறப்பு மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அக்கறை யோடு பரிசோதித்த டாக்டர், ''இவருக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டும். அரசுக் காப்பீடு உள்ளதால் செலவுபற்றிக் கவலை வேண்டாம். மருத்துவச் சிகிச்சையுடன், உணவும் அங்கேயே வழங்கப்படும். உடனடியாக புதுச்சேரி வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று ஆலோசனை கூறினார்.

அரசடிக்குப்பம்புதூர் மட்டும் இல்லாமல் சுற்றி இருந்த கிராமத்து மக்களும் முகாமுக்கு வந்திருந்ததால் அன்று முகாம் நிறைவு பெறுவதற்குள்ளாகவே 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை நடந்தது. இதில், 98பேர் தீவிர சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர். முகாமுக்கு அடுத்த நாள் இவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதற்கான சிறப்பு வாகன வசதியும் செய்யப்பட்டது. டாக்டர் விகடனின் அடுத்த மருத்துவ முகாம் அமைப்பதற்கான இடத்தை, நமது 'தானே புயல் துயர் துடைப்புக் குழுவினர்’ தேர்வு செய்துவருகின்றனர். மரங்களும் மனங்களும் ஒருசேர ஒடிந்துகிடக்கும் அந்த புயல் பூமிக்கு நம் அன்பும் ஆத்மார்த்த ஆதரவும் மட்டுமே நிவாரணிகள். வாருங்கள் வாசகர்களே... கை கொடுப்போம், 'தானே’ துயர் துடைப்போம்!

- விகடன் தானே துயர்

துடைப்பு அணி