Published:Updated:

சபரி மலைக்கு வந்த 29 லட்ச பக்தர்களில் 20% குழந்தைகள்; கோவிலுக்கு 223 கோடி ரூபாய் வருமானம்!

சபரி மலை

வந்திருந்த 29, 08,500 பக்தர்களில், 20 சதவிகிதத்தினர் குழந்தைகள். கடந்த இரண்டு ஆண்டுகளில் விதிக்கப்பட்ட தடையின் காரணமாகக் குழந்தைகளின் தரிசன எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது.

சபரி மலைக்கு வந்த 29 லட்ச பக்தர்களில் 20% குழந்தைகள்; கோவிலுக்கு 223 கோடி ரூபாய் வருமானம்!

வந்திருந்த 29, 08,500 பக்தர்களில், 20 சதவிகிதத்தினர் குழந்தைகள். கடந்த இரண்டு ஆண்டுகளில் விதிக்கப்பட்ட தடையின் காரணமாகக் குழந்தைகளின் தரிசன எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது.

Published:Updated:
சபரி மலை

`கன்னிசாமி புதுசா மலையேறும் நாளப்பா, கருப்பு சட்டை போட்ட ஆத்திகன் நானப்பா’ என ஐயப்பனைக் காண சபரிமலைக்கு ஆண்டுதோறும் குவியும் பக்தர்கள் அதிகம்.

`இந்தாண்டு 29 லட்சம் ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு வந்துள்ளனர். கோவிலுக்கு 223 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது' என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன்
சபரிமலை ஐயப்பன்

இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கூறுகையில், ``கடந்த மாதம் 16-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நிறைய பக்தர்கள் ஐயப்பனை வந்து தரிசித்த வண்ணம் உள்ளனர்.

39 நாட்கள் வரை கணக்கிட்டதில், 70.10 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது. வந்திருந்த 2,908,500 பக்தர்களில், 20 சதவிகிதத்தினர் குழந்தைகள். கடந்த இரண்டு ஆண்டுகளில் விதிக்கப்பட்ட தடையின் காரணமாகக் குழந்தைகளின் தரிசன  எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது.

சபரிமலை சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்கள்

புனித யாத்திரை முடிவடைவதைத் தொடர்ந்து சபரிமலையில் `மண்டல பூஜை’ டிசம்பர் 27 செவ்வாய்க் கிழமையான இன்று மதியம் 12.30 - 1 மணி வரை நடைபெற்றது. இரவு ஹரிவராசனம் பாடலுடன் சன்னதி அடைக்கப்படும். 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மண்டல பூஜைக்காகத் தங்க அங்கி அணிவிக்கப்பட்டுத் திறக்கப்படும். ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்கு நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளனர்.