Published:Updated:

விகடன் புதிய படை

விகடன் புதிய படை

விகடன் புதிய படை

விகடன் புதிய படை

Published:Updated:
விகடன் புதிய படை
விகடன் புதிய படை

புத்தம் புது மாணவர்களின் வருகையால் கல்லூரி​களுக்கு ஜூன் மாதம் கொண்டாட்டம் என்றால், விகடன் குழுமத்தில் ஜூலை மாதம் எப்போதுமே கலகலவென தூள் பறக்கும். வருடா வருடம் விகடன் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் ஆரம்பமாவது அப்போதுதான். 2012-13 ஆண்டுக்கான புதிய மாணவப் பத்திரிகையாளர்கள் இதோ பயிற்சி முடித்து புறப்பட்டு விட்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 தேர்வான 54 மாணவர்களுக்கும் கூட்டுப் பயிற்சி முகாம் இம்மாதம் 21, 22 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசனின் அறிமுக உரையுடன்

##~##
தொடங்கிய முகாமில், 'நேற்று இன்று நாளை’ என்ற தலைப்பில் நடிகரும் தொகுப்பாளருமான சிவ கார்த்திகேயன், 'வட்டியும் முதலும்’ தொடரின் எழுத்தாளரும் இயக்குனருமான ராஜு முருகன், பாடலாசியர் மதன் கார்க்கி, எழுத்தாளரும் அரங்கக் கலைஞருமான 'லிவிங் ஸ்மைல்’ வித்யா, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் ஆகியோர் தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

எழுத்து மற்றும் புகைப்படக் கலை குறித்த பயிற்சிகள் முதல் நாள் பகல் முழுதும் வரிசைகட்ட... மாலைப் பொழுதில் வயிறு வலிக்கும் அளவுக்கு மாணவர்களை சிரிக்க வைத்தது, பூபாளம் கலைக் குழு.

22-ம் தேதி, நேரடிப் பயிற்சியின் ஓர் அங்கமாக, 'பேட்டி எடுப்பது எப்படி?’ என்ற பயிற்சியும் முகாமில் அரங்கேறியது. பேட்டிக்கான கலர்ஃபுல் வி.ஐ.பி. யார் என்பது கடைசி வரை சஸ்பென்ஸாகவே இருந்தது. அந்த இளம் பிரபலம் ஒரு பாய்ச்சலோடு மேடையேறியதும், ஆச்சர்யத்தில் கண்கள் விரிய உற்சாகமானார்கள், இளம் மாணவப் பத்திரிகையாளர்கள். அவர் - நடிகர் கார்த்தி. புதியவர்களின் கேள்விகளுக்குப் பொறுமையாகவும், இயல்பாகவும் பதில் சொல்லி அசத்தினார் கார்த்தி.

விகடன் புதிய படை

கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தில் நுழைந்து, சிறப்பாகப் பணியாற்றி தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர்களாக ப.சரவணகுமார், ஆ.நந்த​குமார், மகா.தமிழ்ப் பிரபாகரன், ம.சபரி, ஜெ.வேங்கடராஜ், பூ.கொ.சரவணன், சா.வடிவரசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.  இவர்களோடு மேலும் ஒன்பது பேர் மிகச்சிறந்த பத்திரிகையாளர்களாக தகுதி பெற்றுத் தேர்வானார்கள்.  அரங்கம் அதிரும் கரகோஷத்தோடு சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டவர்கள், பயிற்சிக் காலமான ஒரு வருட அவகாசத்தில் தாங்கள் சந்தித்த செய்தி சேகரிப்பு அனுபவங்களை சிலிர்ப்போடு பகிர்ந்து கொண்டனர்.

விகடன் புதிய படை

முகாமின் ஓர் முக்கிய அம்சமாக, 'சமூகம் என்பது நான்கு பேர்’ என்ற தலைப்பில் மனித உரிமைச் செயற்பாட்டாளர் 'எவிடன்ஸ்’ கதிர் பேசினார். ''சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்து கொள்ளாதவர்கள் பத்திரி கையாளர்களாக இருக்க முடியாது. உத்தப்புரம் விவகாரத்தை 89-ல் ஜூ.வி-யில் முதன்முதலில் எழுதி வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் உங்களைப் போல் ஒரு மாணவப் பத்திரிகையாளர்தான்'' என்று உற்சாகம் கொடுத்தார்.

'நில்.. கவனி... சொல்’ என்ற தலைப்பில் பேச வந்தார் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்ட சார்ஆட்சியர் க.வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ். எத்தகைய ஒரு கடினமான சூழலில் பிறந்து வளர்ந்தும், மனதில் உறுதி இருந்தால் சாதித்துக் காட்டலாம் என்பதற்கான உதாரணமாகவே மாணவர்கள் முன் நின்றார் இவர். ''நம்மைச் சுற்றிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. இதைப் போக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி என்னுள்ளே எழுந்ததால், நான் ஐ.ஏ.எஸ். ஆனேன். தனிமனிதனால் எதையும் சாதிக்க முடியாது என்பது தவறான வாதம். சமூகத்தின் பிரச்னையைச் சொல்லி அதற்கான தீர்வையும் காட்டு​பவன்தான் வெற்றியாளன். சமூகத் தில் உரிமை மறுக்கப்பட்டவர்களின் குரலாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது'' என்றார்.

கூர் தீட்டப்பட்ட வாளாக, பட்டை தீட்டப்பட்ட வைரங்களாகப் புறப்பட்டு திசை எட்டும் போயி ருக்கிறது ஐம்பத்து நால்வர் படை. வீறு கொண்ட எழுத்துக்களை விருந்தாகப் படைக்கும் இனி!

- எம்.பரக்கத் அலி

படங்கள்: வீ.நாகமணி,

சொ.பாலசுப்பிரமணியன்