Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அடித்தளக் கண்டுபிடிப்புகள் மற்றும் பாரம்பர்ய அறிவைத்தேடும் 47-வது நடைபயணம் மே 21-27 வரை 7 நாள்கள் பரமக்குடியிலிருந்து ராமேஸ்வரம் வரை நடைபெற உள்ளது.

தண்டோரா

அடித்தளக் கண்டுபிடிப்புகள் மற்றும் பாரம்பர்ய அறிவைத்தேடும் 47-வது நடைபயணம் மே 21-27 வரை 7 நாள்கள் பரமக்குடியிலிருந்து ராமேஸ்வரம் வரை நடைபெற உள்ளது.

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். உங்கள் பகுதியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் குறித்து, மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப்: 99400 22128 ஆகியவற்றுக்கு அனுப்பவும்.

இலவச பயிற்சிகள்

மீன் வளர்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் மே 17-ம் தேதி ‘விஞ்ஞான முறையில் ஆடு வளர்ப்பு’, 24-ம் தேதி ‘பயோபிளாக் முறையில் மீன் வளர்ப்பு’, 26-ம் தேதி ‘தீவனப் பயிர்கள் உற்பத்தி தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

வெள்ளாடு வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி நிலையத்தில் மே 18-ம் தேதி ‘முயல் வளர்ப்பு’, 19-ம் தேதி ‘இயற்கை விவசாய இடுபொருள்கள் தயாரிப்பு’, 21-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’, 24-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’ 25-ம் தேதி ‘ஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு’; 31-ம் தேதி ‘காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன் 94885 75716, 82489 24558.

பாரம்பர்ய அறிவு பயணம்

அடித்தளக் கண்டுபிடிப்புகள் மற்றும் பாரம்பர்ய அறிவைத்தேடும் 47-வது நடைபயணம் மே 21-27 வரை 7 நாள்கள் பரமக்குடியிலிருந்து ராமேஸ்வரம் வரை நடைபெற உள்ளது. பாரம்பர்ய அறிவு மற்றும் அடித்தளக் கண்டுபிடிப்புகள், இரவு கூட்டம், பல்லுயிர் பன்மய போட்டி, பாரம்பர்ய உணவு போட்டி, கண்டுபிடிப்பாளர்களைச் சிறப்புச் செய்தல்... போன்றவை இடம்பெற உள்ளன. பங்கு கொள்பவர்கள் உணவு மற்றும் தங்குமிடம், தங்கள் சொந்த செலவில் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். சிருஷ்டி, சேவா, தானம் அறக்கட்டளை, அடித்தளக் கண்டுபிடிப்பாளர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் இணைந்து இதை ஏற்பாடு செய்துள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 6383 602620, தொலைபேசி: 0452 2380082.

கட்டணப் பயிற்சிகள்

நாட்டுக்கோழி வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் மே 17-ம் தேதி ‘கோடைக்காலத்தில் கால்நடை மற்றும் கோழிகளுக்கான தீவன மேலாண்மை’, 25-ம் தேதி ‘நெல் சாகுபடிக்கு ஏற்ற மண் மேலாண்மை’ ஆகிய இலவசப் பயிற்சிகள் நடைபெற உள்ளன. மேலும், 18-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள்’, 19-ம் தேதி, ‘ஒருங்கிணைந்த பண்ணையில் மீன் வளர்ப்பு’, 26-ம் தேதி, ‘ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வள மேலாண்மை’ ஆகிய கட்டணப் பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

எரிவாயு தயாரித்தல்

கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மே 28–ம் தேதி ‘சமையல் அறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.150 (உணவு தவிர்த்து). முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism