Published:Updated:

ஆகாஸா ஏர் விமானத்தில் இனி செல்லப்பிராணிகளுக்கு அனுமதி - என்னென்ன நிபந்தனைகள்?

Akasa Air

வீட்டில் வளர்க்கப்படும் பூனை மற்றும் நாய்களுக்கு மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படும். செல்லப்பிராணிகள் பயணிக்க, நிர்ணயிக்கப்பட்ட கட்டண தொகையை பயணிகள் செலுத்த வேண்டும்.

ஆகாஸா ஏர் விமானத்தில் இனி செல்லப்பிராணிகளுக்கு அனுமதி - என்னென்ன நிபந்தனைகள்?

வீட்டில் வளர்க்கப்படும் பூனை மற்றும் நாய்களுக்கு மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படும். செல்லப்பிராணிகள் பயணிக்க, நிர்ணயிக்கப்பட்ட கட்டண தொகையை பயணிகள் செலுத்த வேண்டும்.

Published:Updated:
Akasa Air

ஆகாஸா ஏர் விமானங்களில் செல்லப் பிராணிகளைக் கொண்டு செல்ல, நவம்பர் 1-ம் தேதி முதல் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான விமானங்களில் செல்லப் பிராணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் ஏர் இந்தியா விமானங்களில் குறிப்பிட்ட எடையுள்ள செல்லப் பிராணிகளைக் கொண்டு செல்ல அனுமதி உண்டு.

dog
dog
pixabay

ஏர் இந்தியாவைத் தொடர்ந்து தற்போது இரண்டாவதாக, ஆகாஸா ஏர் விமானத்தில், செல்லப்பிராணிகளைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது பயணிகளின் செல்லப் பிராணி 7 கிலோ வரை இருக்கும் பட்சத்தில், அவை கேபினுக்குள் அனுமதிக்கப்படும் எனவும், 7 கிலோவிற்கு மேல் உள்ளவை சரக்குகள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் இடங்களில் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அதோடு, ஆகாஸா ஏர் செல்லப் பிராணிகள் எனக் குறிப்பிடுவது வீட்டில் வளர்க்கப்படும் பூனை மற்றும் நாய்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இத்தகைய செல்லப்பிராணிகள் பயணிக்க நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பயணிகள் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Digital Money
Digital Money

கட்டணத்தொகை குறித்த விவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ஆகாஸா ஏர் விமானத்தின் இந்த அறிவிப்புக்கு விமான பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பும், பாராட்டுகளும் கிடைத்துள்ளன.