Published:Updated:

விக்னேஷ் சிவன் சொல்லும் ரகசியம் முதல் வொர்க் ப்ரம் ஹோம் வரை!

Weekend Special Offer
News
Weekend Special Offer

தமிழ் சினிமா பிரபலங்களின் பிரத்யேக நேர்காணல்கள், சுடச்சுட சுவையான செய்திகள், மனதை ஈர்க்கும் மனிதர்கள் பற்றிய கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள், கொஞ்சம் அரசியல், நக்கல், நையாண்டி, கவிதைகள், கதைகள், ஜோக்ஸ் அனைத்தும் உள்ளடக்கியுள்ளது இவ்வார ஆனந்த விகடன்!

நயன்தாராவுடன் திருமணம் எப்போது... விக்னேஷ் சிவன் சொல்லும் ரகசியம்
“முதல் படம் பண்ணிட்டு அடுத்த படத்துக்குக் கஷ்டப்பட்டபோது தனுஷ் சார் மனசு வந்து கொடுத்த வாய்ப்புதான் ‘நானும் ரவுடிதான்.’ அதற்குப் பிறகு நாலைந்து வருஷங்களா ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’தான் மனசுக்குள்ளே இருந்துகிட்டே இருந்தது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வந்தது, 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற தலைப்பு உருவானது, அனிருத்தின் இசை, நயன்தாரா திருமணம் என விக்னேஷ் சிவன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

வொர்க் ப்ரம் ஹோம்... எதிர்காலம் எப்படியிருக்கும்?
கொரோனா, லாக்டௌன் போன்றவற்றுடன் சேர்ந்து நமக்கு அறிமுகமான இன்னொரு வாசகம், `வொர்க் ஃப்ரம் ஹோம்கடந்த இரண்டு ஆண்டுகளில் வொர்க் ஃப்ரம் ஹோம் பற்றி ஏராளமான ஜோக்குகள், வாட்ஸ்அப் பார்வர்டுகள் வந்துவிட்டன. உலகெங்கும் இருக்கும் பணியாளர்களில் 31 சதவிகிதம் பேர் கொரோனா காலத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் செய்கின்றனர். இந்தியாவில் பல லட்சம் பேர் இதைச் செய்வதாகத் தகவல்கள் சொல்கின்றன. `இத்தனை லட்சம் பேர் ஈடுபட்டிருக்கும் இந்த வேலை தொடர்பாக அரசு ஏதேனும் நெறிமுறைகள், சட்டங்கள் கொண்டுவந்திருக்கிறதா' என்றால், `இல்லை' என்பதுதான் பதில். வொர்க் ப்ரம் ஹோமின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று அலசுகிறது இந்தக் கட்டுரை

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பெண் எழுதி விடுவதாலேயே பெண்மொழி ஆகாது
பதினாறு வயதில் ஒரு சிறார் நாவல் மூலம் எழுத்துலகத்துக்கு அறிமுகமான அம்பை, தமிழிலக்கியத்தின் பெண்ணெழுத்து முகமாக அழுத்தமான பல அபூர்வ படைப்புகளைத் தந்தவர். அறச்சீற்றம் கொண்டவர்களாகவும் வெளிப்படையாகப் பேசுபவர்களாகவும், துணிந்து முடிவெடுப்பவர்களாகவும் அம்பை உருவாக்கிய பெண் பாத்திரங்கள் காலத்தில் நிலைத்திருப்பவை. கோவையில் பிறந்து பெங்களூரிலும் சென்னையிலும் டெல்லியிலும் படித்து இப்போது மும்பையில் வசிக்கும் அம்பைக்கு, ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது பேட்டி

ஒரேமாதிரி பாத்திரங்கள் வேண்டாம்.!
"சினிமாவுல முகம் தெரியறதைவிட, முகம் தெரிஞ்சப்புறம் ஒரு போராட்டம் இருக்கும் பிரதர். அதுவும் ரொம்ப கஷ்டமானதுதான். கொண்டாட்டமா இருக்கணும்" - ஆண்டனி பல வருடப் போராட்டத்துக்குப் பிறகு, மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏழைத் தொழிலாளி ரங்கசாமியாகக் கவனம் ஈர்த்தவர். தற்போது `ரைட்டர்’ படத்தில் ‘பழைய திருடன்’ ராஜனாக முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். சிஸ்டத்தைப் பகடி செய்து இவர் பேசும் காட்சிகளுக்குத் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. அதே கலகலப்போடு அவர் கொடுத்த பேட்டி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆர்டிக் பனியும் கனமழையில் மூழ்கிய சென்னையும்
இந்தியாவிற்கு மழையைத் தருவிக்கும் இரண்டு வானிலை அமைப்புகள் உள்ளன. ஒன்று, வங்காள விரிகுடாவில் உருவாகி வடஇந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் தருவிக்கும். மற்றொன்று, அரபிக் கடலிலிருந்து இந்தியாவின் மேற்கு மாநிலங்களுக்கு மழையைக் கொடுக்கும்.2021-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஏற்பட்ட அதிதீவிர கனமழைக்குக் காரணம் என்ன? அலசுகிறது பூவுலகு சுந்தர்ராஜன் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரை.

இப்படி இந்த வார ஆனந்த விகடன் இதழின் கட்டுரைகள் எல்லாமே தனிச்சிறப்பு. அது மட்டும் இல்லாமல் ஆனந்த விகடனில் இன்னும் பல தகவல்களும், செய்திகளும் காத்திருக்கின்றன. படித்து மகிழுங்கள்.

மேலும் ஆனந்த விகடனின் ஒரு வருட சந்தாவைப் பெற இங்கு க்ளிக் செய்யவும்.

உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் விவரங்கள்

* Save ரூ.850 > ரூ.1749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899 ரூபாய்க்கு பெறுங்கள் கூடுதலாக ரூ.100 மதிப்புள்ள E-Books இலவசம்!


* Save ரூ.1,199 > ரூ.2998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1799 ரூபாய்க்கு பெறுங்கள் கூடுதலாக ரூ.100 மதிப்புள்ள E-Books + 1 மாதம் இலவசம்!


* Save ரூ.11000 > ரூபாய் ₹19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ₹ 8999 ரூபாய்க்குப் பெறுங்கள்!

விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை! l நிபுணர்கள் பங்குபெறும் இலவச ஆன்லைன் கருத்தரங்குகளில் பங்கேற்கலாம்