Published:Updated:

மூச்சுப் பயிற்சிகள் முன்பதிவு விவரம்...

ஞாயிறன்று காலையில் 7 மணியளவில் ஆன்லைன் பயிற்சி வகுப்பு தொடங்கும்

பிரீமியம் ஸ்டோரி

க்தி விகடனும் உலக சித்தக் கலைகள் ஆய்வு மையமும் இணைந்து நடத்தும் ஆயுள் வளர்க்கும் மூச்சுப்பயிற்சி வகுப்பு, வரும் 5.7.2020 ஞாயிறன்று ஆன்லைன் பயிற்சி வகுப்பாக நடைபெறும் (முன்பதிவு கட்டணம் ரூ.500).

உலக சித்தக் கலைகள் ஆய்வு மையம் சார்பில் பயிற்சியாளர் மு.அரி மூச்சுப்பயிற்சி வகுப்பை நடத்தவுள்ளார். தேகம் காக்கும் பத்து வகை மூச்சுப்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

ஞாயிறன்று காலையில் 7 மணியளவில் ஆன்லைன் பயிற்சி வகுப்பு தொடங்கும் (Zoom meet). முன்பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்பவர்கள், நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே தயாராகிக்கொள்ள வேண்டும்.

மூச்சுப் பயிற்சிகள் முன்பதிவு
விவரம்...

பயிற்சியில் பங்கேற்பதற்குமுன், வீட்டில் வசதியான - காற்றோட்டமான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். பயிற்சிக்கு ஏற்ற வகையில் தளர்வான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். காலையில் பயிற்சி தொடங்குமுன் உணவு உட்கொள்ள வேண்டாம். காபி மற்றும் டீ போன்ற பானங்களையும் தவிர்க்கவும். உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அவசியம் தேவை என்று கருதினால், பயிற்சிக்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக பால் மட்டும் அருந்தலாம். முன்பதிவு மற்றும் பயிற்சி குறித்த மேலும் விவரங்களுக்கு:

முன்பதிவுக்கு: 73974 30999 ; 9790990404

https://bit.ly/3hXGJMU

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புலி தாக்கியதால் உருவான திருத்தலம்!

செண்பக வனம் சார்ந்த அந்தப் பகுதியை வில்லி, கண்டன் என்ற சகோதரர்கள் சிறப்பாக ஆட்சி செய்தனர். ஒருமுறை ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய புலியை வேட்டையாடச் சென்றனர்.

விதிவசத்தால் கண்டன் புலியால் தாக்கப்பட்டி மாண்டான். அதையறிந்த வில்லி, மூர்ச்சையாகித் தரையில் விழுந்தான். அப்போது அவன் மனக் காட்சியில் பெருமாள், தேவி - பூதேவியுடன் தோன்றினார்.

மூச்சுப் பயிற்சிகள் முன்பதிவு
விவரம்...

‘‘வில்லி! கவலைப்படாதே. உன் சகோதரனை நான் உயிர்ப்பிக்கிறேன். எனக்கு இந்தச் செண்பக வனம் மிகவும் பிடித்துவிட்டது. எனவே, நான் தேவி யருடன் இங்கு வசிக்க ஒரு குடில் வேண்டும். அமைத்துக் கொடுப் பாயா?’’ என்று கேட்டார். பெருமாளைத் தொழுத வில்லி, ‘‘சுவாமி, தங்கள் அருளால் என் தம்பி மீண்டும் உயிர்பெறுவது பெரும் பாக்கியம். நிச்சயம் உங்களுக்குக் கோயில் கட்டுகிறேன்’’ என்றான். அதன் பிறகு ஶ்ரீதேவி - பூதேவி சகிதம் தன் விக்கிரகங்கள் இருக்கும் இடத்தைச் சொன்னார் பெருமாள்.

அங்கு சிறிய கோயில் கட்டினான் வில்லி. பெருமாள், தேவி - பூதேவியுடன் அக்கோயிலில் குடிகொண்டார். அந்தக் கோயிலைச் சுற்றி வீடுகள் உருவாயின. வில்லி கட்டிய சிறு கோயிலைப் பிற்காலத்தில் பாண்டியர் மற்றும் நாயக்க மன்னர்கள் விரிவுபடுத்தினர். இவ்வாறு வில்லியால் உருவான திருத்தலமே தற்போதைய ஶ்ரீவில்லிபுத்தூர்!

- சி.குமார், மதுரை-2

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு