"எப்படா 12 மணி ஆகும்னு காத்திருந்து
புது ஆட்டத்தை ஆடி முடிச்சா தான் நிம்மதியா தூக்கம் வரும்..!"
"எது எதுக்கோ எல்லாம் அடிமை ஆகுறாங்க...
நான் 'சொல்லி அடி-மை'ங்க..!"
"என் சொந்தக்காரங்களுக்கு எல்லாம் `சொல்லியடி'-ஐ அறிமுகம் செஞ்சேன்... யார் முதல்ல கண்டுபிடிச்சு எங்க வாட்ஸ்அப் க்ரூப்ல போடறோம்ங்கறதுல எங்களுக்குள்ளே செம போட்டி போங்க!"
பரபரப்பாக ஓடுவதே நம்ம வாழ்க்கை டிசைன் ஆகிவிட்ட நிலையிலும், நம் வாசகர்களின் டெய்லி டைம்லைனில் கால் மணி நேர கால்ஷீட் நம்ம சொல்லி அடிக்கு தான்! காலை நேர டீ, காபி, நியூஸ் பேப்பர் என்ற சூடான பட்டியலில் கூலாக இடம் பிடித்துவிட்டது சொல்லியடி ஆட்டம்!
ஆட்டத்தில் கலந்து கொள்பவர்களில் முதல் அட்டெம்ட்டிலேயே சரியாக சொல்லி சிக்ஸர் அடிக்கும் கில்லாடிகளும் இருக்கிறார்கள். இரண்டு, மூன்று அல்லது நான்கு வாய்ப்புகளில் சிங்கிள் சிங்கிள் ரன்னாக எடுத்து விடையை சொல்லும் வின்னர்களும் இருக்கிறார்கள். இவர்களில் புயல் போல கடகடவென வார்த்தைகளை கொட்டி ரெண்டே நிமிஷத்தில் ஆட்டத்தை முடித்து மிரட்டும் 'டெர்ரரிஸ்ட்'களும் உண்டு. பொறுமையாக, ரசிச்சு ரசிச்சு க்ளூவுக்கேற்ற நாலைந்து வார்த்தைகளை பேரலல்லாக கண்டுபிடித்து ஆட்டத்தை முடித்து வைக்கும் 'நிதானவாதி'களும் உண்டு.
எப்படியாக இருந்தாலும் 'சொல்லியடி' ஆட்டம் ஆரம்பிச்ச முதல் நாளில் ஆரம்பித்து ஒரு நாள் கூட மிஸ் பண்ணாமல் தொடர்ந்து 100 நாட்களாக விளையாடி வருபவர்கள் இதில் நிறைய பேர்....
"வெயிட் வெயிட்! என்ன சொன்னீங்க... 100 நாட்களா?" என்று நீங்கள் புருவம் உயர்த்தறீங்களா?
யெஸ்! இன்றோடு சொல்லியடி ஆரம்பிச்சு நூறு நாட்களை தாண்டிடுச்சு!
ஆட்டம் உருவாக்கின 'கர்த்தா' நாங்கனாலும், ஆட்டம் ஆட்டங்காணாம ஸ்ட்ராங்கா போய்ட்டு இருக்கறதுக்கு 'காரணகர்த்தா' நீங்க தான்!
நூறு நாட்களை கடந்து 'சொல்லி அடி'த்துக் கொண்டிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் ஹார்ட் ஃபுல் ஹாட்ஸ் ஆஃப்!
நன்றி,
விகடன் டீம்
