Election bannerElection banner
Published:Updated:

கொரோனா: மூடப்பட்ட தொல்லியல் துறை நினைவுச் சின்னங்கள்... உங்கள் ஊரில் எந்தெந்த இடங்கள்?

கொரோனா பரவல்
கொரோனா பரவல்

சென்ற வருடமும் கொரோனா பரவ ஆரம்பித்த மார்ச் மாதமே இவை மூடப்பட்டன.

கொரோனா இரண்டாம் அலை, முதல் அலையைவிட வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒரு பக்கம் தடுப்பூசி, மறுபக்கம் மக்கள் அதிகம் கூடுகிற பகுதிகளுக்குத் தடை உத்தரவு என அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்திய தொல்பொருள் ஆய்வு (Archaeological Survey of India - ASI) துறையின் கீழ் வருகிற அத்தனை நினைவுச்சின்னங்களும் மியூசியங்களும் மே 15-ம் தேதி வரைக்கும் மூடப்பட்டிருக்கும் என்று மத்திய தொல்லியல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையை இந்திய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், நேற்றைய தினம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

பெரிய கோயில்
பெரிய கோயில்

சென்ற வருடம், இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த மார்ச் மாதம் தொடங்கி நம் நாட்டில் இருக்கிற நினைவுச்சின்னங்களும் அருங்காட்சியகங்களும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா தொற்று குறைய ஆரம்பித்த அக்டோபர் மாதம் தொடங்கி குறைவான எண்ணிக்கையிலான பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்கலாம் என்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், மறுபடியும் நினைவுச்சின்னங்களும் அருங்காட்சியகங்களும் மே 15 வரை மூடப்பட்டிருக்கும். தொற்றுப் பரவுதல் குறைவதைப் பொறுத்தோ அல்லது தடை நீங்குவது தொடர்பாக அடுத்த அறிவிப்பு வரும்வரைக்கும் நினைவுச்சின்னங்களும் அருங்காட்சியகங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

மாமல்லபுரம்
மாமல்லபுரம்

தமிழ்நாட்டில் மாமல்லபுரம், விவேகானந்தர் பாறை போன்ற சுற்றுலா தலங்கள், தஞ்சை பெரிய கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் போன்ற ஆன்மிக தலங்கள் உள்ளிட்ட 411 நினைவுச்சின்னங்கள் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கீழ் வருகின்றன. மாமல்லபுரத்தில் விடுமுறை நாள்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்பதால், இங்கு கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு அதிகம். கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றாலும் பூஜைகள் நடந்துகொண்டுதான் இருக்கும் என்றிருக்கிறது தொல்லியல் துறை.

தமிழகத்தில் தொல்லியல் துறையின் கீழ் இருக்கிற பிற முக்கிய இடங்கள்

தர்மபுரியின் சென்னராய பெருமாள் கோயில்,

செங்கல்பட்டின் முன்குடுமி ஈஸ்வரன் கோயில்,

திருவிடந்தையில் இருக்கிற நித்ய கல்யாண பெருமாள் கோயில்,

திருக்கழுக்குன்றத்தின் திருப்புலீஸ்வரர் ஆலயம்,

தாம்பரத்திலிருக்கிற ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயம்,

ஈரோடு மேட்டுபுதூரைச் சேர்ந்த ஜெயின் ஆலயம்,

பெரிய காஞ்சிபுரத்தின் இரவாதானேஸ்வரர் ஆலயம்,

ஸ்ரீ மடங்கேஸ்வரர் ஸ்வாமி ஆலயம் & ஸ்ரீ முகுடேஸ்வரர் ஸ்வாமி ஆலயம்,

காஞ்சி கைலாசநாதர் கோயில்,

உத்திரமேரூரின் வைகுண்ட பெருமாள் ஆலயம்,

கிருஷ்ணகிரியின் மலைக்கோட்டை,

நாமக்கல்லின் ஸ்ரீநரசிம்ம ஸ்வாமி கோயில் &.ரங்கநாத ஸ்வாமி கோயில்,

பெரம்பலூரின் ரஞ்சன்குடி கோட்டை, சிவன் கோயில், Shamaskhan மசூதி,

lockdown
lockdown
கும்பமேளாவால் பரவும் கொரோனா... அசராத உத்தரகாண்ட் அரசு... இது சரிதானா மோடி?

ஆற்காடு, அரக்கோணம் மற்றும் வாலாஜாவில் இருக்கிற கற்கோயில்கள், கோட்டைகள்

சேலம் சங்ககிரி மலை மீது இருக்கிற கோட்டை மற்றும் கோயில்கள்

திருவண்ணாமலையின் சந்திர மெளலீஸ்வர் கோயிலும் ஜெயின் ஆலயமும்

வேலூர் சோழீஸ்வரர் கோயில், சோமநாதர் கோயில், சுப்ரமணிய கோயில், ஜலகண்டேஸ்வரர் கோயில்

காட்பாடி ரங்கநாதர் ஆலயம்,

விழுப்புரத்தைச் சேர்ந்த பல்லவர் கோயில் மற்றும் அழகிய நரசிம்ம பெருமாள் கோயில்

காரைக்கால் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட 411 கோயில்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு