Published:Updated:

``10 கோடியை தொட்ட டீமேட் கணக்குகள்'': காரணம் இதுதான்!

Demat Account

22 லட்சத்துக்கும் அதிகமான டீமேட் கணக்குகள் நான்கு மாதங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இது டீமேட் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 10.05 கோடி ஆக உயர்ந்துள்ளது.

``10 கோடியை தொட்ட டீமேட் கணக்குகள்'': காரணம் இதுதான்!

22 லட்சத்துக்கும் அதிகமான டீமேட் கணக்குகள் நான்கு மாதங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இது டீமேட் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 10.05 கோடி ஆக உயர்ந்துள்ளது.

Published:Updated:
Demat Account

பணத்தைச் சேமிக்கவும், பணத்தின் இருப்பை வைத்துக்கொள்ளவும் நாம் வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவது போல, ஒரு கம்பெனியின் பங்குகளை இருப்பு வைத்துக்கொள்ள டீமேட் கணக்கை (Demat Account) பயன்படுத்தலாம்.

இந்தியாவில் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (National Securities Depository Limited - NDSL) மற்றும் சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட் (Central Depository Services - CDSL) ஆகிய இரண்டு டெபாசிட்டரி நிறுவனங்களும், இந்த டீமேட் கணக்குகளை நிர்வகித்து வருகின்றன.

டீமேட் கணக்கு
டீமேட் கணக்கு

இந்நிலையில், இந்நிறுவனங்கள் வெளியிட்ட தரவுகளின் படி, ஆகஸ்ட் மாதம், முதல் முறையாக நாட்டின் டீமேட் கணக்கானது 10 கோடியை தொட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதாவது 22 லட்சத்துக்கும் அதிகமான டீமேட் கணக்குகள் நான்கு மாதங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இது டீமேட் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை10.05 கோடியாக உயர்ந்துள்ளது.

கோவிட் தொற்று பரவுவதற்கு முன்பு, இந்தியாவில் டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை 4.09 கோடியாக மட்டுமே இருந்ததுள்ளது. தொற்று நோய் பரவிய போது ஏற்படுத்தப்பட்ட ஒர்க் ஃப்ரம் ஹோம் செட் அப், லாக்டவுன் கட்டுப்பாடுகள், அதிகரித்த தொலைப்பேசி மற்றும் தரவுகளின் ஊடுருவல், சந்தையின் கடுமையான எழுச்சி போன்றவை டிமேட் கணக்குகளை அதிகமாக உருவாக்க அடித்தளமாக அமைந்தது.

கோவிட் 19
கோவிட் 19

அதோடு எளிமையாக டிமேட் கணக்கைத் தொடங்க முடியும் என்பதால் மக்கள் அதிகமாக டிமேட் கணக்குகளைத் தொடங்கி உள்ளனர். இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

டிமேட் கணக்குகள் 10 கோடியைதொட்டுள்ளது, ஒரு மைல்கல் என என்.டி.எஸ்.எல் மற்றும் சி.டி.எஸ்.எல் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.