Published:Updated:

'முதல் வீடு' கவனிக்க வேண்டிய விஷயங்கள் முதல் பர்சனல் லோன் டிப்ஸ் வரை..!

Naanayam Vikatan
News
Naanayam Vikatan

இந்த வார நாணயம் விகடனில்..

பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும் என்று கூறுவார்கள். காசு மட்டும் இருந்தால் போதும் யாவரும் இங்கே யாதும் ஆவர். அப்படி இருக்கும் ஒரு சூழலில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை பெருக்குவது எப்படி? சேமிப்பது எப்படி? முதலீடு செய்வது எப்படி? எந்த காப்பீடு எப்போது உதவும்? பல கோடி முதலீட்டை உலகம் முழுக்க சந்தைப்படுத்துவது எப்படி? உங்களுக்கு பயன் தரும் காப்பீடு எது? ஷேர் மார்க்கெட் முதலீடு செய்வது எப்படி? கல்வி கடன் முதல் வீட்டு கடன் வரை அனைத்திற்குமான வழிகாட்டி.!உங்கள் வணிகம் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் உற்ற தோழனாய் வாரம்தோறும் வழிகாட்டும் உங்கள் நாணயம் விகடனின் இந்த இதழில் என்ன ஸ்பெஷல்..!

பர்சனல் லோன் வாங்கப் போறீங்களா? கைகொடுக்கும் எச்சரிக்கை டிப்ஸ்!

இன்றைக்கு நம் எல்லோருக்கும் ‘பர்சனல் லோன் வேண்டுமா..?’ என எஸ்.எம்.எஸ் வருகின்றன;  போன் மூலமும் வங்கி ஊழியர்கள் நம்மைத் தொடர்புகொண்டு கேட்பது மிகச் சாதாரணமாகிவிட்டது.பர்சனல் லோன் வாங்குபவர்கள் என்னென்ன விஷயங்களை எல்லாம் கவனித்து வாங்கி, லாபகரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு டிப்ஸ்கள் இந்தக் கட்டுரையில்..

பணத்தை  மிச்சப்படுத்த உதவும்பெட்ரோல் - டீசல் கிரெடிட் கார்டு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

பெட்ரோல் விலை இன்றைக்கு ரூ.100-க்கு மேல். முன்பைவிட இன்றைக்கு அதிக அளவில் பெட்ரோல், டீசலைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் நம் எல்லோருக்கும். பெட்ரோல், டீசல் கிரெடிட் கார்டு நம்மிடம் இருந்தால் நமக்கு சில சலுகைகள் கிடைக்கும். இந்த பெட்ரோல், டீசல் கிரெடிட் கார்டினை வாங்கும்போதும் என்னென்ன விஷயங்களை அவசியம் பார்க்க வேண்டும் என்பதைச் சொல்லும் கட்டுரை இது. 

முதல் வீடு வாங்கும்போதுகவனிக்க வேண்டிய  முக்கிய விஷயங்கள்!

எப்பாடு பட்டாவது சொந்த வீடு கட்டி விட வேண்டும் அல்லது வாங்கிவிட வேண்டும் என்பது பலரின் வாழ்நாள் விருப்பமாக இருக்கிறது. அதனால், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக வீட்டைச் சொந்தமாக்கிக்கொள்ள நினைக் கிறார்கள். இந்த எண்ணத்தில் எந்தத் தவறும் இல்லை. முதல் வீடு வாங்குபவர்கள் பல தவறுகளை செய்துவிட்டு, பிற்பாடு தவிக்கிறார்கள். இதனைத் தவிர்த்து, முதல் வீடு வாங்கும்போது செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்துகொள்ளவே இந்தக் கட்டுரை.  

ஆன்லைன் ஆப்களுக்குப் போட்டி தரும்புதுக்கோட்டை 'சேவகன்'...

ஆன்லைன் நிறுவனம் என்றாலே டெல்லி, மும்பை, பெங்களூரு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்தான் நடத்த வேண்டுமா? நாங்களும் களத்தில் இறங்கி கலக்குவோம் என்று புதுக்கோட்டையில் உள்ள 'சேவகன்'; ஆப் அங்கு சொமோட்டோ, சுவிக்கி போன்ற உணவு ஆப்களுக்கு போட்டியாக செயல்படுகிறது. இந்த நிறுவனம் அங்கு எப்படி உருவாகி வளர்ந்தது என்பதைப் பற்றி சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்லும் கட்டுரை இது. 

பால், தயிர், நெய், பால்கோவா.. பட்டையைக் கிளப்பும் பால்பண்ணைத் தொழில்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்குமான உணவுத்தேவையில் பால் மற்றும் அதன் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் அத்தியாவசியமான பங்கு வகிக்கின்றன. பால் தொழில் இன்றைக்கு செழித்து வளரும் தொழிலாக இருக்கிறது. இந்தத் தொழில் தொடங்க எவ்வளவு முதலீடு தேவை, லாபம் ஈட்டும் சூட்சமங்கள் என்ன என்பதைப் பற்றி விளக்கமாகச் சொல்லும் கட்டுரை இது. இப்படி இந்த இதழில் நாணயம் விகடனின் கட்டுரைகள் எல்லாமே தனிச்சிறப்பு. அது மட்டும் இல்லாமல் நாணயம் விகடனில் இன்னும் பல தகவல்களும், செய்திகளும் காத்திருக்கின்றன. படித்து மகிழுங்கள்.

மேலும் நாணயம் விகடனின் ஒரு வருட சந்தாவைப் பெற இங்கே க்ளிக் செய்யவும்.

உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் விவரங்கள்

* Save ரூ.800 > ரூ.1749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899 ரூபாய்க்கு பெறுங்கள்!

* Save ரூ.1,199> ரூ.2998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1799 ரூபாய்க்கு பெறுங்கள் கூடுதலாக 2 மாதம் இலவசம்!

* Save ரூ.11000 > ரூபாய் ₹19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ₹ 8999 ரூபாய்க்குப் பெறுங்கள்!